ShareChat
click to see wallet page

*கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை துரத்தி பிடித்த நாகர்கோயில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ....மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு* ஜனவரி 21, 🔸 கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர்.R.ஸ்டாலின் IPS* அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். 🔸அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அழகிய பாண்டிபுரம் சானல்கரை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் சுமன் (26) என்பவரை சோதனை செய்ததில் அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோவிற்கு மேல் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 🔸முன்னதாக நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரை பார்த்ததும் ஓடியவரை சில தூரம் துரத்தி பிடித்தது குறிப்பிடத்தக்கது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்

19 ने देखा
4 दिन पहले