திசைகள் ஒவ்வொன்றிலும்
தேடி தேடி
அலைகின்றேன்...
எட்டு திசைகளிலும்
நீ இல்லையென்று
தெரிந்திருந்தும்...
விழிகள் இரண்டும்
அழுது அழுது
நனைந்து நிற்கிறேன்...
விழி துடைக்க
உன்
விரல்கள் இல்லையென்று தெரிந்தும்...
கதறி கதறி அழுது
கண்ணீர் விட்டேன்.,
கதறிய போதும்
காயங்கள் ஆறாதென
தெரிந்தும்...
விடிய விடிய
விழித்திருக்கிறேன்...
விடிந்தாலும்
நீ
வரமாட்டாயென தெரிந்தும்...! #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝