ShareChat
click to see wallet page

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ காணும் வரை நீ எங்கே நான் எங்கே கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே (நேற்று வரை) உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தா போகும் புன்னகை புரிந்தால் என்ன பூமுகம் சிவந்தா போகும் (நேற்று வரை) பாவை உன் முகத்தைக் கண்டேன் தாமரை மலரைக் கண்டேன் கோவை போல் இதழைக் கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன் வந்ததே கனவோ என்று வாடினேன் தனியே நின்று வண்டு போல் வந்தாய் இன்று மயங்கினேன் உன்னைக் கண்டு (நேற்று வரை) படம் : வாழ்க்கைப்படகு இசை : எம். எஸ்.விஸ்வநாதன் பாடல்: கண்ணதாசன் பாடியவர் : PB ஸ்ரீனிவாஸ் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா

5.9K ने देखा
22 घंटे पहले