மரண வலியைத்தந்து
கடந்து போனவர்கள்
பிறிதொரு நாள்
தோள்களை உலுப்பி
என்னை மறந்துவிட்டீரோ
நீர் தான் பெரிய ஆள் ஆயிற்றே
எனும்போதும்
மௌனமாய் ஒரு நட்பு புன்னகையோடு
கடந்து போகத்தான் முடிகிறது
ஆமாம்
நான் பெரிய ஆள் தானே
வலிகள் சுமந்து வடிக்கப்பட்ட சிலைகள்
உடனே உருவாகுவதுமில்லை
உருகுவதுமில்லையே…!
#manson house favour brandy