ShareChat
click to see wallet page

#🌺இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்🐃 🦋🕉🙏அனைவருக்கும் அன்புடன் இனிய மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துகள் #குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவம் என்பது குறித்தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரை உணர்வற்றதோர் கோவே. #திருச்சிற்றம்பலம் 🙏🦋🕉ஓம் நமசிவாய 🕉🦋🙏 🙏🦋🕉சுக்கிரவார பிரதோஷம்🕉🦋🙏 #குருவே சிவமெனக் கூறினன் நந்தி "குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென்பது குறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரையுணர் வற்றதோர் கோவே" பாடல் - 1581 #குருவே சிவம் - ஒளி - இறைவன் எனக் கூறினான் நந்தி - நம் தீ! உலகில் இறைவனைப் பற்றிக் கூறி அடைய வழிகாட்டும் குருவே சிவம்! #சிவத்தின் அருள் பெற்றே சிவத்தைப் பற்றி கூறுவார்! ஆகையால் மெய்யுரைக்கும் மெய்ப்பொருள் உரைக்கும் குருவே சாட்சாத் சிவமாம்!? இது புறத்தே! #நம் அகத்தே சிவத்தை கண்டு ஆத்ம ஜோதியை கண்டு மகிழ்ந்தவர்க்கு அகத்தீயே சிவமே குருவாய்விடும்! பின் நம் ஆன்மாவாகிய குருவே நமக்கு வழிகாட்ட இறைவனை பரமாத்மனை அடையலாம்! நந்தி தான் கூறுகிறான் நம்புங்கள்! நம் குருவை நாமடைய வழிகாட்டும் விழி உணர்த்தும் குரு சிவந்தானே?! சந்தேகமா?! குருவே சிவம் என்பதைக் குறித்து ஓர்ந்து உணர்ந்து அறிய வேண்டும்! அங்ஙனம் ஓராதார் உள்ளத்தும் ஒளியாய் நிற்பவன் சிவனே"! சிந்திக்க வைத்து சுருதி காட்டி தெளிவைத் தருகிறார் குரு! அப்படிப்பட்ட குரு தானே நமக்கு கடவுள்! மாதா பிதா குரு தெய்வம் என்பர்? இதன் உண்மை பொருள் என்ன தெரியுமா? மாதாவும் பிதாவுமாயிருப்பவரே குரு! அப்படிப்பட்ட குருவே தெய்வம்!? இதை சிந்தித்து தெளிபவனே உண்மை சீடன்! உண்மை சீடனே சீவனை அறிவான்! சுட்டிக் காட்டிய குரு சுடர் விழியில் உணர்த்தியதால் அகத்தே சிவமாய் எவ்வுயிர்க்கும் தலைவனாய் ஒளியாய் துலங்குவதே மெய்குரு என்பதை உணர்வான்! காண்பான்! அந்த குரு மெய்குரு மனோவாக்கு காயத்துக்கு அப்பார்ப்பட்டவர்! "குரு அருளின்ற திருவருள் உறாது" உலக குரு காட்ட, உடலுளே மெய்குருவைப் பெற்றே இறைவனை அடையலாம்! சத்தியம் இதுவே! ஆன்மீக செம்மல் ஞானசித்தர் ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா #குருவின் திருவடி சரணம் 🕉🌼🙏இன்று தேய்பிறை சுக்கிரவார பிரதோஷம்🙏🌼🕉 🕉சுக்கிரவார பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்தால் கடன் பிரச்சினை தீரும் செல்வ வளம் பெருகும் 🕉ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். வெள்ளிக்கிழமை சுக்கிரவார தினத்தில் வரும் பிரதோஷ நாளில் சிவன் நந்தியை தரிசனம் செய்தால் கடன் பிரச்சினைகள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. 🕉பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்கும். சர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 🕉பிரதோஷ நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபம் ஏற்றி,பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். 🕉சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால் பிரதோஷம் தினத்தில் கறந்த பசும்பால் கொடுத்து வழிபட வேண்டும். இளநீர் வாங்கித் தரலாம். வில்வ இலை வாங்கிக் தரலாம். 🕉சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்க்கிழமையில் வரும் பிரதோஷம் போல், சனிக்கிழமையில் வரும் மகா பிரதோஷம் போல், சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை அன்று வருகிற பிரதோஷம், மிகவும் சிறப்பு வாய்ந்தது. வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரதோஷ தினமாகும். இந்த நாளில் சிவ தரிசனம் செய்தால் கடன் பிரச்சினைகள் தீரும். நிதி நெருக்கடி நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. 🕉ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. அந்த சூழ்நிலை ஜோதிடத்தில் எப்படி அமைகிறது என பார்ப்போம். ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது. 🕉காலபுருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி ராசி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்கும் கிரகமும் கடனின் தன்மையை பற்றி கூறும் அமைப்பாகும். 🕉ஜனன ஜாதகத்தில் லக்னாதிபதி பலமற்று இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி பன்னிரெண்டாம் பாவத்தில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடன்/வட்டி கட்டியே வீணாகும். சம்பாதிக்கும் எதுவும் மிஞ்சாது. 🕉லக்னாதிபதி பலமாக இருந்து ஜெனன ஜாதக ஆறாம் பாவாதிபதி தசா புத்தி நடைபெற்றால் திருமணம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்க்காக கடன் வாங்கி திரும்ப அடைத்திடுவார். ஆனால் லக்னாதிபதி பலமற்ற நிலையில் ஆறாம் பாவாதிபதி தசாபுக்தி நடைபெறும்போது கடன் வாங்கினால் திரும்ப அடைக்க மிகவும் கஷ்டபடுவர். 🕉ஜாதகப்படி லக்னாதிபதி 6ஆம் இடத்தில் பகைபெற்றோ தீயகிரகங்களின் சேர்க்கை/பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து திசை/புத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு/வழக்கு கடன் தொல்லைகள் ஏற்பட்டு வாழ்கையில் நிம்மதி சீர்குலையும். அவரது வாழ்கையில் போராட்டங்கள் இருந்துகொண்டே இருக்கும். கடன் பிரச்சினை தீர ருண விமோசன பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்வது போல சுக்கிரவார பிரதோஷ நாளிலும் சிவ தரிசனம் செய்யலாம். 🕉பிரதோஷ நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவபெருமானுக்கும் அபிஷேகம் நடைபெறும். நாளைய தினம் 16 வகையான பொருட்களால் கண்கள் குளிர, நந்திதேவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். நந்தி, சிவ பெருமானுக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுங்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். 🕉சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவதும் அப்போது தரிசனம் செய்வதும் ரொம்பவே விஷேசமானது. இன்று மே 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளில் மறக்காமல் சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்யுங்கள். கடன் பிரச்சினை தீரும் கவலைகள் பறந்தோடும்.🕉 🕉🌼🙏ஓம் நமசிவாய 🙏🌼🕉 #✨ பொங்கல் ஸ்பெஷல் கோலங்கள்🎨 #🌼 இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌄 #😆 பொங்கல் அலப்பறைகள் 🔥 #🥰பொங்கல் ஸ்டேட்டஸ்🎋

1.1K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்