ShareChat
click to see wallet page

#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஐந்தாம் தந்திரம் - 19. நிராசாரம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது*. *திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரம், இது சைவ சமயத்தின் பல்வேறு மார்க்கங்களைப் பற்றியும், குறிப்பாக அக வழிபாட்டு முறைகளைப் பற்றியும் பேசுகிறது. இது "உட் சமயம்" (அக வழிபாடு) மூலம் இறைவனை அடையும் வழிமுறைகள், யோகம், சன்மார்க்கம் போன்றவற்றை விளக்குகிறது*... *"நிராசாரம்" என்பது, தீய செயல்களிலிருந்து விலகி, வினையின் தளைகளை அறுத்து, அருவமான இறை உணர்வோடு கலக்கும் ஆன்மீக நிலையைக் குறிக்கிறது. இங்கு "நிராசாரம்" என்பது "அல் ஒழுக்கம்" என்றும், "நிராகாரம்" என்பது "வடிவின்மை" என்றும் பொருள்படும். இதன் மூலம், வடிவம் இல்லாத இறைவனின் உணர்வை அருவமான உயிர் உணர்வில் கலப்பது விவரிக்கப்படுகிறது*. பாடல் வரிகள் : *19. நிராசாரம்* 1550 இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங் கமையறிந் தாருட் கலந்துநின் றானே. 1 1551 பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர் நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர் ஏங்கி உலகில் இருந்தழு வாரே. 2 1552 இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும் அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில் வருந்தா வகைசெய்து வானவர் கோனும் பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே. 3 1553 தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர் பாரறி வாளர் படுபயன் றானுண்பர் காரறி வாளர் கலந்து பிறப்பர்கள் நீரறி வார்நெடு மாமுகி லாமே. 4 1554 அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங் குறியது கண்டுங் கொடுவினை யாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே. 5 1555 மன்னும் ஒருவன் மருவு மனோமயன் என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள் துன்னி மனமே தொழுமின் துணையிலி தன்னையும் அங்கே தலைப்பட லாமே. 6 1556 ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற் றாங்கார மற்ற அனுபவங் கைகூடார் சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

610 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்