முன் செய்த தீவினை வருத்தும்போது அதனை நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட்டு மனம் வருந்துபவர் அறிவிலார்
இது முற்பிறப்பில் நாம் செய்த வினையால் நேர்ந்தது என்பதை உணர்ந்து அதனை ஏற்று அமைதியாக அனுபவிக்கும் அறிவுடையோர் அத்துன்பத்தின் எல்லையைக் கடந்து நீங்குவர்
// இன்பம் வரும்போது மகிழ்வதும் துன்பம் நேரும்போது இறைவனை/ விதியை நொந்துக்கொள்வதும் மனித இயல்பு. எவ்வாறு இன்பம் விளைகிறதோ அதேபோல் நாம் செய்த வினையால் தான் துன்பமும் விளைகிறது என்ற உண்மையை உணர்த்து அதை ஏற்றுக் கடந்தால் வருந்தவேண்டிய நிலை இல்லை.
இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக பாவித்து சலனமில்லாது வாழ்வதே அறிவுடைமை //
பா
வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை நினைத்ததனைத்
தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்தொருவு வார்
நாலடியார்
சைவ_சித்தாந்தக்_கழகம்.🌹 #sivan #SiV@n🐍 B@kthån 📿📿🪔🙏 #சிவ #சிவன் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶