*சூட்சும பஞ்சாட்சரம்.*
பஞ்சாட்சர மந்திரம் ஸ்தூலம், சூட்சுமம் என்று இரண்டு வகைப்படும்.
நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம்.
சிவயநம என்பது சூட்சும பஞ்சாட்சரம்.
ஆரம்பநிலையில் சமயதீட்சை பெற்றவர்கள் ஸ்தூல பஞ்சாட்சரமும், மேல்நிலை விசேஷ தீட்சை பெற்றவர்கள் சூட்சும பஞ்சாட்சரமும் ஜபம் செய்ய வேண்டும்.
எது சிறந்தது என்று கேட்பது தவறு.
குருவிடம் உபதேசம் பெறுவது தான் முக்கியம். இரண்டுமே சகலநலன்களையும் தரவல்லவை.
சிவய நம” என்ற சூட்சும பஞ்சாட்சர மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து
“ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும்.
சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம்
எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின.
இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.
சிவ் - சிவன் 'சிவ்' என்னும் சத்தியை அவளிடம் பெற்றுக்கொண்டு அவளோடு ஒன்றாய் இருப்பவன்.
ஆய - ஆயம். ஆய என முடிந்த பின்னர் மீண்டும் நம வந்து சேரும்போது மகர-ஒற்று இடையில் தானே வந்துவிடும்.
சிவாய[ம்]நம
எனவே ஆய என்பது ஆயம் ஆகிவிடும்.
ஆயம் என்பது ஆயத்தாராகிய திருக்கூட்டம்
நம்முடையவை சிவத்திருக்கூட்டம் என்பதே 'சிவாயநம' என்பதன் பொருள்
அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”
சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”
திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”
சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...”
திருமூலர் அருளிய
*சிவய நம*சூட்சும சிவ
மந்திரத்தின் விளக்கம் தொடர்பான ஒரு ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉ஓம் நமசிவாய 🕉 #சிவனுடைய மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿