ShareChat
click to see wallet page

👉 வார்த்தைகள் 👈 உன்னால் முடியும் பிறரிடம் மாற்றங்களை ஏற்படுத்த...!! சின்ன சின்ன கவனிப்புகளும் அரவனைப்புகளும் அடுத்தவர் மனதில் ஆழமான ஒரு இணைப்பு பாலத்தினை ஏற்படுத்துகிறது...!! அன்போடு மற்றவர்களை நேசித்து செய்யும் சிறு உதவி ஆறுதலான வார்த்தைகள் தொடுதல் பாசத்தோடு பார்த்தல் ஆகியவை ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்க வல்லவை நெஞ்சை நெகிழவைக்கும்...!! நட்புடன் நடங்கள் மிருகம் கூட கை கொடுக்கும் வன்மத்துடன் இருந்தால் மனிதனும் அரக்கன் ஆவான்...!! வார்த்தைகளை கவனமாக பேசுங்கள் பொருளறிந்து கூறினாலும் பொருளறியாமல் கூறினாலும் எந்த வார்த்தை எதைச் சுட்டுகிறதோ அது நடந்தே தீரும் அதுவே நமக்கு வந்து சேரும்...!! வார்த்தைகளை சொல்லும்போது உணர்ச்சியுடன் சொல்லுங்கள் அப்போதுதான் அது எய்யப்பட்ட அம்புபோல இலக்கை தாக்கும்...!! வார்த்தைகள் விதைகள் எண்ணங்கள் மொட்டுக்கள் செயல்கள் கனிகள்...!! வார்த்தைகளில் சுவையுண்டு வெப்பமுண்டு, திரட்சியுண்டு வேகமுண்டு, மருந்துண்டு நஞ்சுமுண்டு...!! அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கையை கொடுக்கும்...!! ஆறுதலான வார்த்தைகளால் தற்கொலையையும் தவிர்க்கலாம்...!! இனிமையான வார்த்தைகள் நற்சூழலை வளர்க்கும்...!! எழுச்சியான வார்த்தைகள் வெற்றியைத் தரும்...!! ஊக்கமான வார்த்தைகள் சோகத்தை விரட்டும்...!! கனிவான வார்த்தைகள் உயிரையே காப்பாற்றும்...!! காலமறிந்து சொன்ன வார்த்தைகள் கஷ்டத்தைத் தவிர்க்கும். தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டும்...!! தன்மையான வார்த்தைகள் மனச்சலிப்பை நீக்கும்...!! நகைச்சுவையான வார்த்தைகள் இறுக்கத்தை தளர்த்தும்...!! ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும் அதுபோல வார்த்தைகளால் சமாதானத்தையும் உருவாக்கவும் முடியும்...!! வாழ்வின் எல்லாச் சூழலிலும் நம்மை இணக்கமாக வைத்திருப்பது வார்த்தைகளே...!! வார்த்தைகளை நாம் கட்டுப்படுத்தினால் வாழ்வின் வெற்றிகரமான இணக்கம் நிலவும்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 ##ஷேர்சாட் டிரெண்டிங்

425 காட்சிகள்
7 நாட்களுக்கு முன்