ShareChat
click to see wallet page

*அமானவனை* வசியம் செய்தால் வாழும் போதும் சொர்க்கம் இறந்தபின்னும் சொர்க்கம்* இதுவரை யாரும் கூறிடாத அதிரகசிய*அமானவன்* வசியம்! '*அமானவன்*' இப்படி ஒரு பெயர் கேள்விப்பட்டதில்லையே.! இது கடவுளின் பெயரா. இல்லை ஏதாவது புராணப் பாத்திரமா.! இவனை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுவும் இவனை இறப்புக்கு பின்னரே பார்க்க முடியும். இவனது இருப்பிடம் வைகுண்டம். அங்கு பெருமாளின் இருப்பிடத்திற்கு முன்னால் துவார பாலகர்கள் இருப்பார்கள். பெருமாள் கோயிலில் ஜெயன், விஜயன் என்ற பெயரில் சிலை வடிவாக பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு சற்று முன்னால் அமானவன் நின்றிருப்பான். சரி.இவனுக்கு அங்கு என்ன வேலை! நீங்கள் தினமும் காலையில் எழும்போதே சுவாமி படத்தின் முன் விழித்திருக்கலாம். 'ஹரி.. ஹரி., நாராயணா. கோவிந்தா.பத்மநாபா' என்றெல்லாம் பெருமாளின் பெயர்களைச் சொல்லியபடியே எழலாம். எந்நேரமும் பிறரது நலம் பற்றி சிந்தித்திருக்கலாம். என்ன கஷ்டம் வந்தாலும், "பெருமாளே! எனக்கு எல்லாம் நீயே.. இந்தக் கஷ்டத்தையும் நீ தந்த பரிசாக ஏற்கிறேன்" என்று 'பாசிட்டிவ்' ஆக நினைக்கலாம். புரட்டாசி சனி விரதம் இருந்திருக்கலாம். இப்படிப்பட்ட நல்லவர்கள் இறந்த பிறகு, வைகுண்ட வாசலுக்கு செல்வார்கள். அங்கே அமானவன் காத்திருப்பான். அவர்களைக் கண்டதும், கையைப் பிடித்து அழைத்துச் செல்வான். இவனுடன் வருவோரை துவார பாலகர்கள் தடுக்க மாட்டார்கள். பெருமாள் முன் நிறுத்தி மகாலட்சுமி தாயாரோடு பெருமாளைத் தரிசிக்க செய்வான். இவனுக்கு ஏன் அமானவன் என பெயர் வந்தது? '*மானவன்*' என்றால் 'மனிதன்'. '*அமானவன்*' என்றால் மனிதன் அல்லாதவன். அதாவது தேவபுருஷன். புண்ணியம் செய்தவர்களை பெருமாளிடம் அழைத்துச் செல்வது இவனது புண்ணிய பணி. 'அமானவன் கரத்தாலே தீண்டல் கடன்' என்கிறார் வைணவ ஆச்சாரியார் மணவாள மாமுனிகள். அதாவது, 'அமானவன் என்னை கைப்பிடித்து பெருமாளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்' என்கிறார். மன்னுயிர் காளிங்கே மணவாள மாமுனிவன் பொன்னடியாஞ் செங்கமலப் போதுகளை- உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை கரத்தாலே தீண்டல் கடன். - உபதேச ரத்னமாலையின் கடைசி பாட்டு. அமானவனும் நம்மை கரத்தாலே தீண்டல் கடன். நம் கைகளையும்*அமானவன்* பிடித்து பெருமாளிடம் கொண்டு சேர்க்க இன்றிலிருந்தே நல்ல விசயங்களை செய்யத் தொடங்குவோம். இதுவரை யாரும் கூறிடாத இந்த*அமானவனை* வசியம் செய்வதற்கு உரிய அதிரகசிய மந்திரம் மற்றும் வழிமுறைகளைப்பற்றி தெரிந்து கொள்ள கீழ்கண்ட👇👇 காணொளிக்காட்சியை தவறாது பாருங்கள்! 🚩🕉🪷🙏🏻 #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #சமஸ்கிருதம் பலன் #மந்திரம் #மந்திரங்கள்

1.6K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்