#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய
திருமந்திரம் - *ஆறாம் தந்திரம் - 9. தவவேடம்*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது.
திருமந்திரத்தின் ஆறாம் தந்திரம், இறைவனான சிவகுருவின் தரிசனம் மற்றும் அவரை அடையும் வழிகளைப் பற்றி விளக்குகிறது. இந்த தந்திரம், குருவின் வழிகாட்டுதலால் ஆன்மிகப் பாதையில் செல்பவர்கள் நல்ல வழியை அறிந்தவர்கள் என்றும், தவறான ஆசைகளின் வழியே செல்பவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்கள் என்றும் கூறுகிறது. இந்த தந்திரத்தில் உள்ள பாடல்கள், புறக்கண்களை நிறுத்தி அகநோக்கைப் பார்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
*"தவவேடம்" என்பது, அகத்தவத்தின் உண்மையான தன்மையை வெறும் புறத்தோற்றத்தில் காட்டிக்கொள்வது தவறு என்பதைக் குறிக்கிறது. உண்மையான தவமானது தவத்தை மேற்கொள்பவர்களுக்கே உரியது, ஏனெனில் அவர்கள் மட்டுமே அதன் தன்மையை தாங்க முடியும் என்று திருமூலர் கூறுகிறார். புற வேடங்களை மட்டும் பூணுபவர்கள் தவத்தின் உண்மையான தகுதியை அடைவதில்லை*.
பாடல் வரிகள் :
*9. தவவேடம்*
1661 தவமிக் கவரே தலையான வேடர்
அவமிக் கவரே யதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே. 1
1662 பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே. 2
1663 யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்று
றாகத்து நீறனி யாங்கக் கபாலஞ்
சீகந்த மாத்திரை தின்பிரம் பாகுமே. 3
1664 காதணி குண்டலங் கண்டிகை நாதமும்
ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை
ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்
ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. 4
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏