*நரசிம்மர் ஆலயங்கள் 08*
*சோளிங்கர் நரசிம்மர்* *ஆலயம்*
சென்னையில் இருந்து 100 கல் தொலைவிலும் வேலூரில் இருந்து 50 மைல் தொலைவிலும் அமைந்திருக்கும் ஆலயம் .
காஞ்சிபுரத்துக்கும் திருப்பதிக்கும் இடையில் அமைந்திருக்கும் இந்த சோளிங்கர் நரசிம்மர் ஆலயம், மகா விஷேஷமான ஆலயம்
வைஷ்ணவ திவ்யதேசங்களில் இது 65ம் தலம் மகா புண்ணியமானது.
வடமொழியில் "பிரம்ம கைவர்த்த புராணத்தில்" இதன் சிறப்புக்கள் சொல்லபட்டிருக்கின்றன
நரசிம்ம ஆலயங்களில் தொன்மையானது இதுதான், இதன் வரலாறு சப்தரிஷிகளிடம் இருந்து துவங்குகின்றது
பகவானின் அவதாரங்களில் உடனே நடந்து மின்னல் வேகத்தில் பலன் கொடுத்தது நரசிம்ம அவதாரம், எவ்வளவு பெரிய இக்கட்டில் ஒருவன் சிக்கினாலும் இனி தப்பவே முடியாது என பெரும் நெருக்கடியில் வீழ்ந்தாலும் அங்கு ஓடிவந்து அவனை காக்கும் அற்புதமான சக்தி நரசிம்ம அவதாரத்துக்கே உண்டு
நாளை வா என்றோ பின்னர் தருகின்றேன் என்றோ சொல்லாமல் நினைத்த மாத்திரம் வந்து வரமருளும் நரசிம்ம மூர்த்தியினை அதுவும் அதுவேண்டுமா இதுவேண்டுமா என கேட்காமல் இதுதானே வேண்டும் என செயலில் காட்டும் அவதார மூர்த்தியினை
தரிசிக்கும் விருப்பம் சப்தரிஷிகளுக்கு உண்டாயிற்று
அதுவும் உக்கிர நரசிம்மரை தவிர்த்து தங்களை போல் தவக்கோலத்தில் அமைதியாய் உலகை இயக்கும் கோலத்தில் இருக்கும் யோக நரசிம்மரை காண விரும்பினார்கள்.
வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் என ஏழுபேரும் மிகுந்த தவமிருந்து பகவானின் யோக நரசிம்ம காட்சியினை ஒரு கடிகை அதாவது 24 நிமிடம் கண்ட தலம் இது
பிரகலாதனை காக்க பகவான் வந்து நின்ற நேரம் ஒரு கடிகைதான் அது 24 நிமிடம் என வரையறுக்கபடும் .
பழைய கால நேர அளவு, கடிகாரம் எனும் சொல் இதில் இருந்துதான் வந்தது
இவ்வாறு 24 நிமிடங்கள் அந்த சப்தரிஷிகள் பகவானை மனதார கண்ணார தரிசித்த தலம் இது.
அப்படியே அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பகவானும் இங்கு வந்து தன்னை 24 நிமிடம் தரிசிப்போர்க்கு முக்தி என திருவுளம் பற்றிய தலமும் இதுதான்.
ஆம், இத்தலத்தில் 24 நிமிடங்கள் தரிசித்தால் முக்தி.
இங்கு எந்த காணிக்கை வேண்டாம், நேர்ச்சை வேண்டாம், மந்திர வழிபாடு யாகம் என எதுவும் வேண்டாம்,
24 நிமிடங்கள் அவர் சன்னதியில் நின்றால் எல்லா தோஷமும் சரியாகும் மனதில் எண்ணியது பலிக்கும்.
இத்தலம் மிக பழமையானது .
கடிகாசலம் அதாவது கடிகைமலை என அழைக்கபட்டது.
பின் சோழர்கள் ஆட்சியில் இது சோழபுரமாகி பின் சோழிங்கர் என்றாயிற்று
சோழி என்றால் காவல், கவசம் எனும் பொருளும் உண்டு.
எல்லோருக்கும் காவல் தரும் நரசிம்மரின் தலமாதனால் சோழிங்கர் என்றாயிற்று என்பதும் ஒரு கோணம்
இந்த தலம் இரு கோவில்களை கொண்டது மலையடியில் உற்சவராக பக்தவச்சலம் எனும் பெயரில் சுதாவல்லி, அமிர்தவல்லி என இரு தேவியரோடு எழுந்தருளியிருக்கின்றார்.
மூலவர் மலை மேல் ஆலயத்தில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
பக்தவத்சலம் என்றால் பக்தர்மேல் அன்புகொண்ட பெருமாளின் மலை என பொருள்.
1035 படிகள் கொண்ட மலைபாதையில் கோவிலுக்கு செல்லும் வழியில் சங்கு சக்கரம் ஏந்திய அனுமர் சிலையினை காணலாம்.
அம்முனிவர்கள் தவமிருந்தபோது காலகேய அசுரர்கள், கும்போதர அசுரர்கள் அட்டகாசம் செய்தார்கள்.
அவர்களை தடுக்க அனுமனுக்கு தன் ஆயுதங்களை கொடுத்து பகவான் அனுப்பினார் என்பது புராண செய்தி.
பகவானே இங்கு தன் பக்தர்களை அனுமனுடன் காக்கின்றார் என்பது இதன் தாத்பரியம்.
இந்த ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது சிறப்பு.
மலையில் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளதாக ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார்.
அனுமன் காவல் காப்பதால் இங்குள்ள குளம் அனுமன் தீர்த்தமாயிற்று.
இதில் நீராடுவது நல்ல பலனை தரும்.
இது மிக தொன்மையான தலம் என்பதாலும், பகவானே யோக நிலையில் இருப்பதாலும் ஆழ்வார்களெல்லாம் மங்கள சாசனம் செய்தார்கள்.
நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் இது.
நம்மாழ்வார் தவிர பல ஆழ்வார்கள் வந்து பணிந்த ஆலயம் இது.
பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்து வணங்கி அருள் பெற்றது வரலாறு.
வைகுண்டம், திருபாற்கடல், திருவேங்கடத்துக்கு இணையாக போற்றபடும் தலமும் இதுதான்.
இங்கு வேண்டி கொண்டால் 24 நிமிடம் அமர்ந்து பகவானை மனமொன்றி தியானித்தால் எல்லா சிக்கலும் தீரும்.
குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும்.
தொழில் வளரும் பெரும் வாழ்வு கிட்டும்
இங்கு சொந்தமாக நிலம் வாங்கி வீடுகட்டி குடியேற விரும்புவோர் செய்யும் வினோத வழிபாடு ஒன்று உண்டு.
அதன்படி மலைக்கு செல்லும் வழியில் கிடக்கும் கற்களை எடுத்து சென்று கோவில் முன் கல்லின் மேல் கல் அடுக்கி வழிபடுவார்கள்.
அந்த வழிபாடு நிச்சயம் சொந்தவீட்டை கொடுக்கும்.
இதற்கு சாட்சிகள் ஏராளம்
இங்கு நரசிமம்ம தீர்த்தம் உண்டு.
அது விஷேஷம்
இங்கு நீராடுவதால்
பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும்
இந்த தலம் பாற்கடலுக்கும் வைகுண்டத்துக்கும் ஈடானது என்பதால் இங்கு தான தர்மம் செய்வதும் இதர வழிபாடுகளை செய்வதும் கயாவில் செய்வதற்கு ஈடானது.
சில துண்டு கற்கண்டுகளுக்கும்,
ஒரு கட்டி வெல்லத்துக்கும், வாழைபழ நைவேத்தியத்துக்கும் ஓடிவந்து அந்த எளிய பக்திக்கே இங்கு அருள்புரிவார்.
வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும்.
அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம்.
இங்கு வியாழக்கிழமைகளில் பிரம்மதீர்த்தத்தில் நீராடி நரசிம்மசுவாமியை வணங்கினால் எல்லா நலமும் அடையலாம் வேண்டியன கிடைக்கும்.
இது கயாவுக்கு ஈடான தலம் என்பதால் இங்கு தூய மனத்துடன் நீராடி நம்பிக்கையுடன் சோளிங்கரில் பித்ரு தர்ப்பணம் தானம் தவம் முதலியன செய்தால் பரம்பரை செழித்து வாழும் வம்சம் தொடரும்.
மாசி மாதத்தில் சூரியோதயத்தின் போது பிரம்ம தீர்த்தத்தில் நீராடிக் பகவானை தியானித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கும்.
பிரம்மதீர்த்தினருகில் பைரவ தீர்த்தம் இருக்கிறது.
அதில் திங்கட்கிழமையில் நியமுடன் நீராடினால் பூதபிசாசுகளால் வரும் தொல்லை நோங்கும்.
இந்த ஆலய நரசிம்ம பகவானின் கண்கள் 11 மாதம் மூடியிருக்கும். கார்த்திகை மாதம்
நரசிம்மர் கண் திறப்பு நடைபெறும், கார்த்திகையில்தான் பகவான் கண்விழிப்பார் என்பதை மிக அழகாக காட்டும் ஏற்பாடு இது.
வேறெங்கும் இந்த ஏற்பாட்டினை காணமுடியாது.
சோளிங்கர் ஆலயம் சக்தி மிக்கது.
நவகிரகங்களால் ஏற்படும் தொல்லை முதல் பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வரை இங்கு பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் எல்லா சிக்கலும் தீரும்
பலமிக்க எதிரிகள், எப்பக்கமும் பெரும் சிக்கல்கள், உயிராபத்து இதர பெரும் அழுத்தங்கள் கொண்டவர்கள் இங்கு வந்து வணங்கினால் நரசிம்மர் எல்லா விக்னங்களையும் நொடியில் அழித்து உங்களுக்கு காவல் தருவார்.
இந்த தலம் மன அமைதி தரும் தலம், அம்மலையில் இருக்கும் மூலிகளின் காற்றே பாதி நோயினை தீர்த்து நலமெல்லாம் தரும்.
வேலூர் பக்கம் செல்லும் போது இந்த சோளிங்கரை தரிசிக்க மறவாதீர்கள்.
அவருக்கு கல்கண்டும் வெல்லமும் வாழைபழமும் கொண்டு சென்று மனமொன்றி தரிசனம் செய்யுங்கள்.
நெய்விளக்கேற்றிவிட்டு 24 நிமிடம் அவர் சன்னதியில் அமர்ந்திருங்கள்.
அது போதும் அது மட்டும் போதும்.
கருணையே உருவான நரசிம்மம் உங்கள் சிக்கல் எதுவோ, உங்கள் ஆபத்து எதுவோ, எது உங்களை மிரட்டி அஞ்சவைக்கின்றதோ, எது உங்களை மனதால் வாட்டுகின்றதோ அதையெல்லாம் தீர்த்து எல்லா சிக்கலிலும் இருந்தும் உங்களை விடுவிப்பார்.
இது சத்தியம்.
பிரம்ம ரிஷியார். 🚩🕉🪷🙏🏻 #ஸ்ரீ நரசிம்ம பெருமாள் #🙏 லட்சுமி நரசிம்மர் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔