*பைரவர் ஆலயங்கள்*
*அந்தியூர் செல்லீஸ்வரர்* *கோவிலில் அருள்* *பாலிக்கும் இடதுபுறம்*
*நாய் வாகனம் உள்ள* *அபூர்வ வீர கால பைரவர்*!
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அமைந்துள்ளது செல்லீஸ்வரர் கோவில்.
இறைவியின் திருநாமம் செல்வாம்பிகை.
மூலவர் செல்லீஸ்வரர் பராசரமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.
இக்கோவிலில் சோமாஸ்கந்த மூர்த்தம் வடிவில் அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையில் முருகன் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.
இங்கு எழுந்தருளி இருக்கும் வீர கால பைரவர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.
பொதுவாக பைரவர், தன் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும் நாய் வாகனத்துடன் காட்சி அளிப்பார்.
ஆனால் இத்தலத்தில் வீர காலபைரவரின் நாய் வாகனம் இடதுபுறம் நோக்கி இருப்பது தனிச்சிறப்பாகும்.
கொங்கு மண்டலத்தில் மிகவும் பழமைவாய்ந்த, பிரசித்தி பெற்ற பைரவ தலங்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.
இக்கோவிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர், பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக அமைந்துள்ளது.
பஞ்சலோகத்தில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்அமர்ந்த நிலையில் தன் மடியில் பைரவியை அமர்த்திக் கொண்டு ஒரு கரத்தில் அமுத கலசமும், ஒரு கரத்தில் சூலமும் கொண்டு வைர கிரீடமும் பட்டு வஸ்திரமும் அணிந்து தம்பதி சமேதராக காட்சி தருகின்றார்.
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் தேய்பிறை அஷ்டமி அன்று மாலை தான் அபிஷேகம் பூஜைக்காக தரிசனம் தருவார்.
மற்ற நாட்களில் கனகசபையில் மட்டுமே அருள்புரிவார்.
இவரை அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வணங்கினால் சகல சம்பத்தும், பொன் பொருளும் கிட்டும்.
வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர்.
பவுர்ணமி , வெள்ளி கிழமைகளியில் மாலை சந்தியா காலங்களில் மஞ்சள் பூக்கள், சண்பகம் . மனோரஞ்சிதம் போன்ற வாசனை மலர்களால் மாலை சாற்றி, வில்வ இலைகளால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சியை பெறலாம்.
பவுர்ணமி நாள் அன்று 33 தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும்,
அஷ்ட லட்சுமி அருளும் கிட்டும்.
பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.
இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக
அகல் விளக்கில் ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் வருடாவருடம் லட்சார்ச்சனை நடந்து வருகிறது.
அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் அருள் பாலிக்கும் சக்தி வாய்ந்த வீர கால பைரவர், மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் எதிர்மறையான துஷ்ட சக்திகளை போக்ககூடியவர். எதிரிகளை அழிக்ககூடியவர்.
இந்த வீர கால பைரவரைக் காலை நேரத்தில் வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும்.
பகல் வேளையில் தொழுதால் நாம் விரும்பியது கிடைக்கும்.
அந்திசாயும் நேரத்தில் வழிபாடு செய்தால், பாவங்கள் விலகும்.
அர்த்த சாமத்தில் வழிபட்டால் மனசாந்தியும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும், வளமான வாழ்வும் அமையும்.
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் இரவு 7.30 மணி முதல் பத்து மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை வீர கால பைரவருக்கு நடைபெறுகிறது.
ஓவ்வொரு வருடமும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று வீர காலபைரவருக்கு அன்னாபிசேகம் நடைபெறுகிறது.
இத் திருகோவில் ஈரோடில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அந்தியூர் வீர கால பைரவர் படங்கள் கீழே!👇🚩🕉🪷🙏🏻 #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #🌷🌹தேய்பிறை அஷ்டமி பைரவா நாதா போற்றி🌹🐕 🐕 #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔