*பைரவர் ஆலயங்கள்*
இருதய நோய், வயிற்று நோய், வாத நோய் முதலிய நோய்களை நீக்கும் திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவிலில்
அருள் பாலிக்கும் பைரவர்
மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் சாலையில் 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாச்சேத்தி.
இறைவன் திருநாமம் திருநோக்கிய அழகியநாதர்.
இறைவியின் திருநாமம் மருநோக்கும் பூங்குழலி.
1300 ஆண்டுகள் பழமையான தலம் இது.
பொதுவாக சிவன் கோவில்களில் பைரவர், ஒரு நாய் வாகனத்துடன் தான் காட்சிய அளிப்பார்.
ஆனால் இக்கோவிலில், பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார்.
இப்படி இரட்டை நாய் வாகனங்களுடன் பைரவர் எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
இவருக்கு கஷ்ட நிவாரண பைரவர் என்று பெயர்.
சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால், இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் நடராஜர், இசைக் கல் நடராஜர் என்று அழைக்கப்படுகிறார்.
இவரது திருமேனியை தட்டினால், இசை ஒலி எழும்பும் என்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவிலில்
அருள் பாலிக்கும் கஷ்ட நிவாரண பைரவர் படம் கீழே!👇🚩🕉🪷🙏🏻 #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #🌷🌹தேய்பிறை அஷ்டமி பைரவா நாதா போற்றி🌹🐕 🐕 #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔