🌹சிவபெருமானை ஏன் ‘சுடுகாட்டு சாமி’ என்று கூறுகின்றனர்
ஆதிப்பரம்பொருள் ஈசன் சிவபெருமான் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறார், கயிலாயத்தில் இருப்பிடம் கொண்டிருக்கிறார்; வெள்ளியங்கிரியில் தங்கி இருக்கிறார்; அனைத்து சிவாலயங்களிலும் வாசம் செய்கிறார்; இவ்வளவு ஏன் நாம் ஒருபிடி மண்ணை பக்தியுடன் லிங்க வடிவில் பிடித்து வைத்தால் அங்கும் வந்து விடுகிறார்.
இவ்வளவு இருக்க அவருக்கு பிடித்த இடம் எது தெரியுமா? சுடுகாடு தானாம்! சிவபெருமானுக்கும் சுடுகாட்டிற்கும் என்ன சம்மந்தம். அதற்கு சில காரணங்களை அவரே கூறியுள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த காரணங்களை கேட்டால் மெய் சிலிர்க்கிறது. அது என்ன என்று பார்ப்போமா?
🌹சிவபெருமானிடம் கேள்வி கேட்ட பார்வதி தேவி.
ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானிடம் 'பூமியில் உங்களுக்காக பிரத்யேகமான எவ்வளவோ ஆலயங்களும், மடங்களும், மலைகளும் இருக்கின்றதே, ஆனால் நீங்கள் ஏன் எப்பொழுதும் சுடுகாட்டில் தங்கிக் கொண்டிருக்கிறீர்கள் சுவாமி? என்று கேட்கிறார்.
அதற்கு சிவபெருமான், எல்லா மனிதர்களும் இறந்த பிறகு வருகிற ஒரே இடம் சுடுகாடு மட்டும் தான். அவர்கள் உயிரோ டு இருக்கும் போது யாருமே தூய அன்புட னோ பக்தியுடனோ என்னிடம் வருவது இல்லை. எனக்கு பொன் பொருளை கொடு, வீடு வாசலை கொடு, என செல்வங்களுக்காக மட்டுமே வேண்டுகின்றனர்.
🌹முக்தியை நினைத்து கலங்கும் ஆத்மா:
அவர்கள் இறந்த பிறகு உறவினர்கள் இறந்தவரை நினைத்து ஓரிரு வாரங்கள் அல்லது மாதங்கள் மட்டுமே கவலைப் படுகின்றனர். பின்னர் இறந்தவர் சேர்த்து வைத்து சொத்து, தங்கம், பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகின்றனர்.
யாருடைய நினைவிலும் வாழக்கையிலும் இல்லாத அந்த இறந்தவரின் ஆத்மா அந்த நேரத்தில் தான் கலங்கி நிற்கிறது. நாம் வாழ்நாள் முழுவதுமே பொன் பொரு ளுக்காக மட்டுமே ஓடியிருக்கிறோம், மோட்சம் முக்தியை நினைத்து வாழவில்லை. அதனால் தான் இன்று தனித்து இருக்கிறோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருக்குமாம்.
🌹உனக்கு துணையாக உன் அப்பன் நான் இருக்கிறேன்:
யாருமே துணை இன்றி பயந்து, கலங்கி, தன்னந்தனியாக தவிக்கும் ஆன்மாவிற்கு, நீ தனியாக இல்லை; உனக்கு துணையாக உன் அப்பன் நான் இருக்கிறேன். நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி, சமாதானம் செய்து, தன் நிலையை நினைத்து தவித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவிற்கு முக்தி அளிப்பதற்காகவே நான் சுடுகாட்டில் வாசம் செய்கிறேன் தேவி, என சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறியுள்ளதாக இந்து புராணங்கள் தெரிவிக்கின்றன.
🌹அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் எம்பெருமான்:
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் நாம் தானே 'ஜகத பிதர வந்தே பார்வதி பரமேஸ்வரா', தாய் தந்தையாக இருந்து அவர்கள் வாழ்க்கையின் போதும், வாழக்கைக்கு பிறகும் நாம் தானே அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், அது நம் கடமை தானே தேவி என சிவபெருமான் பார்வதி தேவியிடம் கேட்டுள்ளாராம்.
நீங்கள் சொல்வது சரி தான் சுவாமி, நான் இந்த ஒரு விஷயத்தை என்றுமே யோசித்தது இல்லை. ஒவ்வொரு மனிதனின் இறப்புக்கு பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதற்காக தான் நீங்கள் சுடுகாட்டில் வாசம் செய்கிறீர்கள் என எனக்கு தெரியாமல் போயிற்று, என்று வருந்தினாராம்.
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #சிவன் #சிவ