ShareChat
click to see wallet page

🙏ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க வாழ்க 🙏 🙏முதல் திருமுறை 🙏திருஎருக்கத்தம்புலியூர் 🙏பாடல் எண் : 1 பண் : குறிஞ்சி படையார் தருபூதப் பகடா ருரிபோர்வை உடையா னுமையோடு முடனா யிடுகங்கைச் சடையா னெருக்கத்தம் புலியூர்த் தகுகோயில் விடையா னடியேத்த மேவா வினைதானே. 🙏பொழிப்புரை: படைகளாக அமைந்த பூதகணங்களை உடையவனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், உமையம்மையோடு உடனாய் விளங்குபவனும், வந்து பொருந்திய கங்கையை ஏற்ற சடையை உடையவனும் ஆகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் தகுதிவாய்ந்த கோயிலில் எழுந்தருளிய விடை ஏற்றை உடைய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை, வினைகள் வந்து சாரா. #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #சிவன் #சிவ

878 ने देखा
1 दिन पहले