🌹சிந்திப்போமே சிவனடியை .
🌹*திருவடிக்கு அடிமை*
🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
*திருவடிக்கு அடிமை*
*சுந்தரர் பெருமான் விளக்குகிறார்*
என் தலை, நாக்கு, மனம் எனும்
*முக் கரணங்களையும் தமக்கே*
*பணி செய்யும் பொருட்டு* *பெருமான் தந்துள்ளார்*
*அவைகளை* நானும் வஞ்சகம் சிறிதும் இல்லாமல் *பெருமான்* *பணிக்கே செலுத்தினேன்*
அவ்வாறு அவருக்கே நான் *திருவடிகளில் அடிமை* *செய்பவன்* என்று இப்போது சொல்லுமிடத்து
அது வெறும் உபச்சார வார்த்தையாகவே முடியும்
படம் எடுக்கும் பாம்பை அரை நாணாக கட்டி கொண்டு ஒரு
கோவணத்துடனே பித்தர் கோலம் கொண்டு *திருப்பாச்சிலாச்சிரமத்தில்*
*எழுந்தருளி உள்ள எம் முதல்வர்*
உண்மை பித்தரை போலவே ஆகி
*என் மீது ஒரு சிறிது பற்றும்* *இல்லாதவராய் நடிப்பின்*
*இவரை அன்றி வேறு தலைவர்*
*எவரும் இல்லையோ?*
இப்படியாக
*மீளா அடிமை*
*என உணர வேண்டும்*
என்று விளக்குகிறார்
பாடலைக் காணலாமே
வைத்தனன் தனக்கே தலையும்
என் நாவும் /
நெஞ்சமும் வஞ்சம் ஒன்று
இன்றி /
உய்த்தனன் தனக்கே
*திருவடிக்கு அடிமை* /
உரைத்தக்கால் உவமனே
ஒக்கும் /
பைத்த பாம்பு ஆர்த்தோர்
கோவணத்தோடு /
பாச்சிலாச் சிரமத்து எம் பரமர் /
பித்தரே ஒத்து ஓர் நச்சு இலர்
ஆகில் /
இவர் அலாது இல்லையோ பிரானார்
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
திரு ஆனந்த நடராஜர் மலரடிகள் போற்றி போற்றி 🙏
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #சிவன் #சிவ 🦜