ShareChat
click to see wallet page

🕉🙏🌺ஓம் நமசிவாய 🌺🙏🕉 🕉🙏🌺திருச்சிற்றம்பலம்🌺🙏🕉 🌼🕉🙏தேய்பிறை மங்களவார?🦋🌼 22/07/2025🦋 🕉🌺🙏இன்று ருண விமோசன பிரதோஷம் - 🙏🌺🕉 🕉🌺🙏 பிரதோஷங்களை நீக்க வல்லது பிரதோஷ வழிபாடு. செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும். ருணம் என்பது கடனை குறிக்க கூடியது. இன்றைய தினம் சிவனை வணங்கினால் கடன் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கை. 🕉இன்றைக்கு காலைச் சுற்றிய பாம்பாக பலரை கடன் பிரச்சினை வாட்டி வதைக்கிறது. பணமாக பெறப்படும் கடன் மட்டுமல்ல. தேவ, பூத,பித்ரு,ஆசார்ய, மனுஷ்ய தோஷம் என்ற வகைப்படும் இவைகளை களைய, இந்நாளில் நந்தியெம்பெருமானுக்கு அருகம்புல் மாலைசாற்றி பிரதோஷ வேளையில் சிவபெருமானை தரிசித்தால் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். ⚛உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். செவ்வாய்கிழமையன்று பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். 🕉பிரதோஷங்களின் வகைகள் 🕉நித்திய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாதப்பிர தோஷம், மகாப்பிரதோஷம், பிரயைப்பிரதோஷம் என பிரதோஷம் 5 வகைப்படும். பிரதோஷ நாட்களில் தவறாது விரதம் இருந்து வழிபட்டால் கடன், வறுமை, நோய், பயம், மரண வேதனை நீங்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 🕉சிவ தரிசனம் 🕉பிரதோஷம் விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும். 🕉கடன் பிரச்சினை 🕉கடனும் நோயும்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. லோன் வேண்டுமா? கிரெடிட் கார்டு வேண்டுமா என்று போனில் பேசி பேசியே பலரை கடனாளியாக்கி நடுத்தெருவிற்கு கொண்டுவந்து நிறுத்திவிடுகின்றனர். கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம். திருப்பி அடைப்பதற்கும் நேரம் ரொம்ப முக்கியம். 🕉வாங்கவே வாங்கதீங்க 🕉சிறு சிறு தேவைக்கு கடன் வாங்கப் போய் இன்றைக்கு கடனே தேவையாகி விட்டது. கடனோடு கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்க கூடாது. குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார். 🕉எப்போது கடன் அடைக்கலாம் 🕉ராகு கேது போன்ற பாம்பு கிரகங்களுடன் குரு சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன் அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்ததாகும். 🕉ருண விமோசன ஸ்தோத்திரம் 🕉ருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும். 🕉பிரதோஷ கால வழிபாடு 🕉ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும். மேலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும்பங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை வினாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடைய சிறந்த வழிகளாகும். 🕉கடன் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் 🕉சிவ ஆலயங்களில் இன்று நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்று சிவபெருமானையும் நந்தியையும் வணங்க கடன் பிரச்சினை தீரும். வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்றைய தினம் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது. ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு மஹாபிஷேகம் நடை பெற உள்ளது. மங்களாம்பிகைக்கு மாதுளம்பழ அபிஷேகம் நடைபெறுகிறது.🙏 🕉🙏🌺ஓம் நமசிவாய 🌺🙏🕉 🕉🙏🌺திருச்சிற்றம்பலம்🌺🙏🕉 #பிரதோசம் வழிபாடு #pradosam #பிரதோஷம் #பிரதோஷம் #பிரதோஷம் ஸ்டேட்டஸ் #பிரதோஷம்

3.6K ने देखा
4 महीने पहले