#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️
வானவெளியில் இயங்குகின்ற ஞாயிறு, திங்கள் மற்றும் நல்ல தேவர்கள் எல்லோரும் அச்ச மேலீட்டினால் உன்னைப் பரம் பொருள் என்று தம் சித்தம் தெளியாதவராயுள்ளனர். விளங்கும் சோதி வடிவினனே, சாம வேதம் பாடி மகிழ்பவனே, காமனைக் காய்ந்தவனே, எவ்வாறு உன்னைத் தெளிவது என்று யானும் மயங்குகின்றேன். வந்து அருள்புரிவாயாக.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - பழந்தக்கராகம்.