#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️
உறங்கும்போது கனவிடை வருபவரும், தம்மைத் தொழுமாறு செய்பவரும், முனைப்புக் காலத்து மறைந்து, அன்பு செய்யும் காலத்து என் நெஞ்சம் புகுந்து நின்று, நினையுமாறு செய்பவரும் ஆகிய இறைவர், முற்பிறவியில் நட்பாய் இருப்பதுபோலக் காட்டித் தன்னை வஞ்சனை செய்து கொன்ற கணவனை மறுபிறப்பில் அடைந்து அவனது வாழ்நாளைக் கவர்ந்த பெண்ணின் செயலுக்குத் துணைபோன வேளாளர்கள் அஞ்சி உயிர்த்தியாகம் செய்த திருவாலங்காட்டில் உறையும் எம் அடிகளாவார்.
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்.
திருமுறை : முதல்-திருமுறை.
பண் : தக்கராகம்.
நாடு : தொண்டைநாடு.
தலம் : ஆலங்காடு.
சுவாமி : வடாரண்யேசுவரர்.
அம்பாள் : வண்டார்குழலி.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - தக்கராகம்.