🕉️ ஓம் நமசிவாய 🙏
473 Posts • 291K views
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️ யாராலும் உண்ணமுடியாத நஞ்சினை உண்டு அதனைத் தம் கண்டத்தில் நிறுத்தியவரும், யாராலும் அணுக இயலாத தலைவரும் ஒளி பொருந்திய அழல் போன்ற திருவுருவினரும் அநாதியாகவே உள்ள வினையால் எண்ண இயலவில்லையே என மனம் வருந்திய திருமால் பிரமர்களால் நணுக முடியாதவருமான நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
22 likes
13 shares
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️ பொருந்திய நீண்ட சடையின் மேல் கங்கையை அணிந்து, அதன் அருகில் கொன்றை மாலையையும் பிறைமதியையும் ஒருசேரச் சூடித் தன்னைச் சார்ந்து வாழும் தொண்டர்கட்குத் தனது திருவடி நிழலைச் சேரும்பேற்றை நல்கும் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
14 likes
20 shares
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Siva Siva 🙏🔱⚜️ முருகப் பெருமான் வழிபட்ட சிறப்பினதாகிய திருச்சேய்ஞலூரில் விளங்கும் செல்வனாகிய சிவபிரானது புகழைப் போற்றி நீர்வளம் சான்ற, வளமையான வயல்களால் சூழப்பட்ட தோணிபுரத்தின் தலைவனும், நுட்பமான ஞானம் மிக்கவனுமாகிய சம்பந்தனுடைய இன்னுரைகளை வாயினால் பாடி வழிபட வல்லவர் வானுலகு ஆள்வர். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
14 likes
18 shares