மத்வ நவமி[27.01.2026]நாளை
🌹🌺 " *தனது தந்தையின் கடனைத் தீர்ப்பதற்காக, புளியங்கொட்டையை தங்க நாணயங்களாக்கிய மகான் ஸ்ரீ பாத மத்வாசாரியர் .. பற்றி விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், துவைதம் என்று பிரபலமாக அறியப்படும் தத்துவவாதக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமாக இவர் அறியப்படுகிறார்.
🌺நாராயணபட்டர், வேதவதி தம்பதியினர் பகவான் விஷ்ணுவிடம் அர்ப்பணித்த 12 வருட பிரார்த்தனையின் பலனாக, ஸ்ரீ பாத மத்வாசாரியர் கி.பி. 1238ஆம் ஆண்டு விஜயதசமி அன்று உடுப்பிக்கு அருகிலுள்ள கிராமத்தில் மகனாக அவதரித்தார்.
🌺தனது சிறு வயதில் தனது தந்தையின் கடனைத் தீர்ப்பதற்காக, புளியங்கொட்டையை தங்க நாணயங்களாக்கினார். தனது ஐந்தாம் வயதில் தனது வீட்டுக்கு அருகில் பாம்பு உருவில் இருந்த மணிமான் என்ற அசுரனை கால் கட்டை விரலினால் அழித்தார்.
🌺தனது பன்னிரண்டாம் வயதில் அச்சுத பிரகாசர் என்பவரின் குருகுலப் பள்ளியில் இணைந்தார். பூர்ணபிரக்ஞர் என்ற நாமத்துடன் சந்நியாசம் ஸ்வீகரித்தார். சில காலம் பல ஆச்சாரியர்களின் வேதாந்த பாஷ்யத்தை கவனமாகப் படித்தார்.
🌺அப்போது வேதாந்தத்திற்கான அத்வைத விளக்கத்தின் உபயோகமற்ற தன்மையை நன்கு உணர்ந்த அவருக்கு, தூய உண்மையான விளக்கத்தை வேதாந்தத்திற்கு வழங்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.
🌺 சந்நியாசம் எடுத்த 40 நாட்களிலேயே, தர்க்கத்தில் புகழ் பெற்ற வாசுதேவ பண்டிதரை வாதத்தில் வென்றார். அவரின் மேலான அறிவை உணர்ந்த அச்சுத பிரகாசர், மடத்தின் தலைமைப் பொறுப்பை அனந்த தீர்த்தர் என்ற திருநாமத்தோடு ஏற்க அவரைப் பணித்தார்.
🌺அவர் ஒருமுறை உடுப்பியில் வசித்தபோது அருகிலுள்ள (மால்பே கடற்கரையில்) சமுத்திரத்தில் ஸ்நானம் செய்யும் பழக்கம் அவருக்கு இருந்தது. ஒருநாள் ஸ்ரீ கிருஷ்ணரை தியானித்தபடி கடற்கரையில் அவர் இருந்தபோது, துவாரகையிலிருந்து வந்த ஒரு கப்பல், மணல் திட்டுகளில் சிக்கிக் கொண்டதைக் கண்டு, அது பாதுகாப்பாக கரை சேருவதற்கு வழிகாட்டினார்.
🌺கப்பல் தலைவன் அவருக்குப் பரிசு வழங்க முன்வந்த போது, கப்பலில் இருந்த இரு பெரிய கோபிசந்தன (திலகம் அணிவதற்கும் பூஜைகளுக்கும் பக்தர்களால் பயன்படுத்தப்படும் ஒரு வகை மண்) பாறைகளைக் கேட்டுப் பெற்றார்.
🌺அப்பாறை ஒன்றினுள் இருந்த பலராமரின் விக்ரஹத்தை கடற்கரையின் அருகிலேயே பிரதிஷ்டை செய்தார். (அத்திருக்கோவில் வடபந்தேஸ்வரர் திருக்கோவில் என்று அறியப்படுகிறது.) மற்றொரு பாறையினுள் ஓர் அழகான கிருஷ்ணரின் விக்ரஹம் இருந்தது.
🌺ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையாக அதனை ஏற்று, அழகான பாடல்களில் ஸ்ரீ கிருஷ்ணரைப் புகழ்ந்து பாடினார். அந்த விக்ரஹத்தை உடுப்பியில் பிரதிஷ்டை செய்து, வழிபாட்டு முறையையும் நடத்தை விதிகளையும் உண்டாக்கினார்.🌺 *நன்றி* 🌺🌹
💐🌺🌹 *வையகம் வாழ்க🌹வையகம் வாழ்க🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🌹🌺
#✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️ராசிபலன் #🌻🌻காலை வணக்கம்🌻🌻