✡️தோஷ பரிகாரங்கள்
8K Posts • 56M views
இன்று (18-11-25 -செவ்வாய்கிழமை) சுவாதி நட்சத்திரம் நாள்! இன்றைய தினம் லட்சுமி நரசசிம்மரை வழிப்பட்டு அனைத்து வளங்களையும் பெறுவோம்! ------------------------------------------------- 🌹🌿🌹"உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டு மாறாமல் இருக்கும் ஒரு விஷயம், கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்னும் வாதம். கடவுள் எங்கு இருக்கிறார் என்று கேட்பவர்களும், பார்க்கும் அனைத்திலும் கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்களும் இந்த உலகில் சம காலத்தில் வாழ்கிறார்கள். கடவுள் எங்கே? என்று கேட்பவர்களுக்கு முற்பிறவி புண்ணியம் இருந்தால் மட்டுமே இப்பிறவியில் இறையருளால் இறைவனை உணரமுடியும்.. கலியுகத்தில் மனிதன் எதற்காக இப்பிறவி நமக்கு இறைவனால் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணராமல் வாழும் காலத்தில் சினிமா நடிகர்கள்.அரசியல் என தன் மனதை வாழ்நாளில் கழித்து விட்டு உடல் தளர்ந்த பிறகு இறைவனை நோக்கி மனதை செலுத்தும் இறைவன் அவர்களின் பக்தியை ஏற்றுக்கொள்வதில்லை. -------------------------------------------------- 🌹🌿🌹"கடவுளை மறுப்பது எப்படி அவரவர் உரிமையோ அதுபோல கடவுளை ஏற்பதும் அவரவர் உரிமை. அவரவர் தம் விருப்பப்படி கடவுளை வழிபட அனுமதிக்க வேண்டும். அவ்வாறில்லாது, கடவுளை மறுப்பதோடு பக்தர்களைத் துன்புறுத்தவும் செய்யும்போது அதை பகவான் பொறுப்பதில்லை." கீதையில் கண்ணன் கூறியது.. ------------------------------------------- "பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே... என்கிறார்." 🌿🌹🌿"எப்போதெல்லாம் அதர்மம் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் நான் அவதரித்து, தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அதர்மத்தை அழிப்பேன் என்கிறார். தர்மத்தை நிலை நாட்டுவதென்பது துஷ்ட நிக்ரஹமும் பக்த பரிபாலனமுமே. அதாவது, துஷ்டர்களை அழிப்பதென்பதே பக்தர்களைப் பரிபாலனம் செய்வதற்குத்தான். அதற்கு மிகவும் உகந்த உதாரணம் நரசிம்ம அவதாரம்." 🌿🌹🌿"நரசிம்ம பெருமாளைத் தொழுவதற்குப் பல்வேறு ஸ்தோத்திர மாலைகள், கராவலம்பம், அஷ்டோத்திரங்கள் என நிறைய உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றைச் சொல்லி அல்லது கேட்டு, துளசி அல்லது மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். நரசிம்மர் அல்லது பெருமாள் படம் ஏதேனும் ஒன்றுக்கு சந்தன குங்குமம் இட்டு அர்ச்சனையைத் தொடங்க வேண்டும். பிரதோஷ வேளையில் பூஜை செய்வது அவசியம். நரசிம்மர் பானகப் பிரியர். எனவே, வீட்டில் எளிமையாக பானகம், நீர்மோர், பருப்பு வடை, சர்க்கரைப் பொங்கல், பாயசம் ஆகியனவற்றில் இயன்ற நிவேதனங்களைச் செய்யலாம்." 🌿🌹🌿"ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி எனப்படும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை இந்த நாளில் எண்ணிக்கை இன்றிச் சொல்ல, சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. "மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ: ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ: வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ: ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ: இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ: யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ: ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்: தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:" 🌿🌹🌿"நரசிம்மர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நம்மை காப்பவர். நரசிம்மரை தினமும் தியானம் செய்ய, மன பயம் நீங்கும். போராடும் குணம் அதிகரிக்கும்.நரசிம்மரின் மடியிலேயே அன்னை மகாலட்சுமி வாசம் செய்வதால், செல்வம் நம்மிடம் நாடி வந்து சேரும்.நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்!" --------------------------------------------- #ஓம் #ஸ்ரீ #லட்சுமி #நரசிம்மாய " என்று ஒருமுறை பதிவிடு.. நன்மையே நடக்கும்! ------------------------------------------------ "சகோதர.சகோதரிகள் எல்லோரும் இன்புற்றுவாழ நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே" வாழ்க மகிழ்ச்சியுடன். மாருதிசேகர் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🛕சபரிமலை தரிசனம் #🙏🏻சரணம் ஐயப்பா #✡️தோஷ பரிகாரங்கள்
15 likes
1 comment 25 shares