என் இனிய நண்பர்களே,
உனக்குத் தான் இந்த புத்தகம். படி, மனப்பாடம் செய். நீ ஒரு கணமும் துக்கப்படமாட்டாய். உனது பிரச்சனைகளுக்கு இதில் தீர்வு உண்டு. இது எந்த மதத்துக்கும் உரியது அல்ல. இது மனித சமுதாயத்துக்கானது.
கீதை காந்திக்கு தாய். காந்தி தனது பிரச்சினைகளுக்கு இதிலிருந்து தீர்வு பெற்றார். நீயும் அவரை பின்பற்றி, மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழலாம்.
என் உயிர் நண்பனே நீ உடல் அல்ல ஆத்மா. உன் கஷ்டங்கள் உடலுடன் சம்பந்தப்பட்டது. நீ ஆத்மா என்று புரியும்போது எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும்.
புறப்படு இந்த உலகை வெல்ல. பணம் பதவி பெரும் புகழ் எல்லாவற்றையும் அடைவாய்.... ஒரு நாள் இவை எல்லாம் தேவை இல்லையென விடுபடத் தயாராகு.
ஒரு விநாடி கூட நீ தனியாளல்ல, உன்னை நேசிக்க யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம். நீ நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனிதர்கள் நிறைய உண்டு. அவர்களின் வெளிப்பாடே இந்த புத்தகம். விரைவில் இதே போல் நீயும் மற்றவர்களை நேசிப்பாய்.
ஒவ்வொரு நாளும் இந்த புத்தகத்தின் சில பக்கங்களை படி - கொலை கொள்ளை போன்ற செய்திகளை படித்து நிம்மதி இழக்காதே. உன் மனதிற்கு உற்சாகமும் நம்பிக்கையும் தரும் புத்தகம் இது.
நீ எந்தவித கவலையும் இல்லாமல் நூறு வருடம் ஆரோக்கியமாகவும் அமைதியோடும் வாழ். நீ இந்த உலகை மேலும் சிறந்த இடமாக மாற்று. உன்னுடைய தாய் தந்தை உறவினர் எல்லாம் உன்னால் பெருமை கொள்ளட்டும். உன்னை முன்உதாரணமாக்கி வாழட்டும்.
பேரன்புடன், பரம பூஜ்ய ஷாந்தாராம் பண்டார்கர் மஹராஜ்
†**†***††*********************************** எவ்வளவு அருமையான அற்புதமான முன்னுரை!! பரம பூஜ்ய ஷாந்தாராம் பண்டார்கர் மஹராஜ் - கேள்விப்பட்டது கூட இல்லை!! சனாதனத்தில் இப்படிப்பட்ட மகான்கள் மகாத்மாக்களும் இருக்கிறார்கள்!! - - "ஒரு விநாடி கூட நீ தனியாளல்ல, உன்னை நேசிக்க யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம். நீ நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனிதர்கள் நிறைய உண்டு. அவர்களின் வெளிப்பாடே இந்த புத்தகம். விரைவில் இதே போல் நீயும் மற்றவர்களை நேசிப்பாய்."!! ******************** ஸ்ரீரங்கம் கோவிலில் க்யூவில் இருக்கிறேன் - இந்த பாக்கெட் கீதை புத்தகம் இலவசமாக ஒருவர் கொடுத்தார்!! இதற்காகவே கூட இங்கே வரலாம்!! ************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம