N Murugesan
566 views
1 months ago
நேற்று தான் இதைப் பற்றி அறிந்தேன் - "ஏகாத்ம தாம்"!!😄 உலகையே துறந்து பிச்சை எடுத்து வாழ்ந்த துறவி ஒருவருக்கு 2000 கோடி ரூபாயில் 108 அடி உயர சிலை மற்றும் அத்வைத மையம்!! இது என்ன சாதாரண விஷயமா? இது அவர் பரப்பிய அத்வைத வேதாந்தத்தின் தாக்கம் தானே?!அவர் கொள்கையில் உண்மை எதுவும் இல்லாவிட்டால் இது சாத்தியம் அல்ல!! மறைந்த தேவாரத்தை சோழ மன்னன் வெளிக்கொண்டு வந்தது போல், உபநிடதங்களை நாம் அனைவரும் படிக்கும் வகையில் உலக நன்மைக்காக வெளிக்கொண்டு வந்தது ஆதி சங்கரரே என்று கூறுவோரும் உண்டு!! மேலும், "உலக மக்கள் அனைவரும் ஒன்றே" என்ற "அனைவரும் ஒரே ஆத்மனே" என்ற கொள்கையை பரப்புவதற்காக இந்த மையம் ("Statue of Oneness") என்று கூறுவதால், அப்படியே நடக்கும் என்று நம்புவோம்!! *************************************************"""" என் அத்வைத கொள்கை வேறு - அனைவரும் ஒரே ஆத்மன் அல்ல; ஒரே ஒரு ஆத்மன் மட்டும் தான் இருக்கிறது என்பதல்ல!! வெளியில் நாம் வெவ்வேறாக (இனம், மதம் , சாதி, மொழி, நாடு என்று) இருந்தாலும், உள்ளே அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆத்மனே!! பல எண்ணற்ற ஆத்மாக்கள் இருந்தாலும் இந்த ஆத்மாக்கள் அனைத்தும் ஒரே தன்மையது!! இதை முக்தியில் ஒவ்வொருவரும் கண்கூடாக உணரலாம்!! ஆகையால், ஒரு பிறவியில் காணும் மாற்றங்களை வைத்து ஏற்றத் தாழ்வுகளை கற்பிப்பது தவறு, நாம் அனைவரும் ஒரே தன்மையான ஆத்மன் என்பதே என் Oneness கொள்கை!!. ஆதி சங்கரர் கொள்கையல்லாமல் இந்த என் கொள்கை உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!! 😄 ************************************************* அது போல் சைவ சித்தாந்தமும் ஆத்மனை ஏற்றுக் கொள்ள வேண்டும்; ஆத்மனுக்கு பிறகு தான் சிவம்; தச காரியம் இதைத் தான் கூறுகிறது; ஆத்மனை அடைவதும் சிவத்தை அடைவதும் ஒருங்கே நிகழ வேண்டும்; அவ்வளவு தான்!! மாறாக, "ஆத்மன் கிடையாது; ஆன்மா தான் உண்டு, அது கேவலமானது; அதற்கென்று தனி இருப்பு கிடையாது" என்று கூறினால், "நான் ஆத்மன், சிவத்தை தவிர யாருக்கும் பணிய மாட்டேன்" என்று கூறுவது முடியாது !! "கண்டவர்களையெல்லாம்" சிவன் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை தான் வரும்!! சைவம் அழிய, வேதாந்தம் செழிக்க இதுவும் ஒரு காரணம்!! ************************************************ #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம