#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️
திருவலிவலம் மேவிய இறைவனே தருக்கி வந்த கங்கை செயல் இழந்து ஒடுங்கிய செஞ்சடையை உடையவனே, உன்னுடைய பொன்மயமான கயிலை மலையை வேரோடும் பிடுங்கி ஏந்தத் தொடங்கிய இலங்கை வேந்தன் இராவணனைத் தேரோடும் வீழ்ந்து அலறுமாறு உன்கால் திருவிரலால் அடர்த்தவனே, கச்சு அணிந்த பெருத்த தனங்களை உடைய உமைபங்கனே! வந்து நல்காய்.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - பழந்தக்கராகம்.