தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் மற்ற பண்டிகைகளிலிருந்து மாறுபட்டது - இது இறைவனை வழிபடும் பண்டிகை அல்ல! மற்ற கலாச்சாரங்கள் வேட்டையாடுவதையும், பால் கரப்பதையும், மற்றவர்களும் பொருள் ஈண்டு வாழ்வதையும் தொழிலாக கொண்ட பண்டைய காலத்திலேயே பாசன வசதி எல்லாம் அமைத்து உழவு தொழிலை உலகுக்கு அறிமுகப்படுத்திய கலாச்சாரம் தமிழர்களின் கலாச்சாரம். இதை நினைவு கூர்ந்து உழவுத் தொழிலை போற்றும் பண்டிகை. மேலும், நல்லவர்களாக வாழ்வதற்கு ஆன்மீகம் செல்ல தேவையில்லை; நல்லவர்களாக வாழ்வதே ஆன்மீகத்திற்கு வலுவான அடித்தளம்; அறத்தை சார்ந்து வாழ்வதே நமது அடிப்படை கலாச்சாரம் என்ற தமிழர் பண்பாட்டை நினைவு கூறும் நாள்! மிகப்பெரிய கஷ்டத்தில் இருக்கும் போது இறைவன் வந்து காப்பாற்றுவான் என்பதை விட நாம் செய்யும் அறமே நம்மை காப்பாற்றும் - இதையே முயற்சி திருவினையாக்கும்; தர்மமே தலை காக்கும் என்றெல்லாம் கூறினர்!! இத்தகைய பண்பாட்டு கூறுகளை நினைவு கூறும் நாளாக இந்த பொங்கல் திருநாளை கொண்டாடுவோம்; அனைவரும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம