திருநீற்றுச் சுவடு
607 views
23 days ago
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🙏ஏகாதசி🕉️ #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் #திருச்சி ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோயில் காசிக்கு போனால் திரும்புவது சாத்தியமில்லை என எண்ணியே வயதான காலத்தில் காசிக்கு சென்று மரணித்தால் சொர்க்கம் என்ற மனநிலை இருந்த காலம் அது.. வடக்கே காசிக்கு சென்று அடையும் புண்ணியத்தை தெற்கேயே பெறலாம் என்ற வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டதுதான் தெற்கிலும் காசி வேண்டும் என்ற இந்த விஸ்வநாதர் கோயில்.. தென்காசியாக நம்மை மகிழ்விக்கிறது வெள்ளைகாரன் அதை கட்டினான் இதை கட்டினான் என அதிசயப்படும் நம்மாலே கோபுரவாசலில் வீசும் அந்த காற்றுடன் கூடிய அதிசயம் எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் அமைத்திட முடியாது. ஒவ்வொரு திருக்கோயிலும் ஒரு தனி சிறப்பு கொண்டிருப்பதைப்போல, இந்த தென்காசி கோயில் கோபுரவாசல் காற்று ஓர் அதிசயம். மன்னன் பராக்கிரம பாண்டியனால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமானதுதான் இந்த இராஜ கோபுரம். பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று, கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு எதிராக மேற்கிலிருந்து கிழக்காக வீசி வரவேற்கிறது. கோபுர வாசலை கடந்து உள்ளே போகும் போது, கோபுர வாசலில் இருந்து இறங்கும் இடத்தில், காற்று சுழன்று சுற்றி வீசுவது போல ஒரு அனுபவம் ஏற்படும். தொடர்ந்து உள்ளே செல்லும் போது, காற்று உங்கள் பின் புறமாக கோவிலுக்குள் உங்களை உள்ளே தள்ளுவது போல, கிழக்கில் இருந்து மேற்காக காற்று வீசும் அதிசயத்தையும் உணரலாம்... மேலும் எந்த தடுப்பும் இல்லாத ஒரே நேர்கோட்டில் காற்று இரண்டு எதிர் திசைகளில் வீசுவதை பக்தர்கள் அனுபவித்தும் மகிழலாம்.... விஸ்வநாதரை தரிசித்த பின் காற்றை அனுபவிக்க வாசலில் அமர்ந்து செல்லும் பக்தர்கள் கூட்டம் அந்த மகிழ்ச்சி இன்று எனக்கும்...🌹

More like this