🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
1K Posts • 1M views
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #ஆலங்குடி குரு பகவான் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் தட்சணாமூர்த்தி தரிசனம் !* குரு காயத்ரி மந்திரம்: "ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்" ஆகும்; இதன் பொருள், "கொடியை ஏந்திய குரு பகவானே, ஒளி பொருந்திய கைகளை உடையவரே, என் அறிவை ஒளிரச் செய்து என்னை வழிநடத்துங்கள்" என்பதாகும், இது குருவின் ஞானத்தையும் அருளையும் வேண்டிச் சொல்லப்படும் ஒரு சக்திவாய்ந்த மந்திரம். இன்று *சதுர்த்தி* இன்று *வியாழக்கிழமை*
14 likes
8 shares
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏கோவில் #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏சீதா ராமர் பசிக்கு இடமில்லாத புனித தலம்..... தினமும் 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் விநியோகம்*.... 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பகவானை தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் வயிறார உண்டு, மனநிறைவுடன் செல்கின்றனர். இதனால் இந்த தலம் 'பசிக்கு இடமில்லாத புனிதத் தலம்' என்றும் போற்றப்படுகிறது. அன்னப்பிரசாத திட்டத்தின் சிறப்புகள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னப்பிரசாதத் துறையின் முயற்சிகளால், விரிவான ஒழுங்கமைக்கப்பட்ட உணவு விநியோக அமைப்பு மூலம் தினமும் சுமார் மூன்று லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. சமையல் அறைகள் திருப்பதி தேவஸ்தான அன்னப்பிரசாதத் துறை 3 முக்கிய சமையல் அறைகளை கொண்டது. அவற்றில் மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகம், அட்சய சமையல் அறை, வகுளமாதா சமையல் அறை ஆகியவை ஆகும். இவை அனைத்தும் இரவு பகலாக இயங்கி வருகின்றன. மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகத்தில் சுமார் 74 ஆயிரம் பக்தர்களுக்கு சுவையான அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. அட்சய சமையல் அறை சுமார் 1 லட்சத்து 48 ஆயிரம் பக்தர்களின் அன்னப்பிரசாதத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. அதே நேரத்தில் வகுளமாதா சமையல் அறை மூலம் சுமார் 77 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. நித்ய அன்னதானத் திட்டம் ஸ்ரீவெங்கடேஸ்வரா நித்ய அன்னதானத் திட்டத்தை ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி என்.டி. ராமாராவ் 1985-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி திருமலையில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் 1994-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி ஒரு அறக்கட்டளையாக மாற்றப்பட்டது. ஆந்திர மாநில தற்போதைய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் வழிகாட்டுதல் கீழ் அன்னப்பிரசாதத் திட்டம் இப்போது திருமலையில் உள்ள பல்வேறு இடங்களில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் அனைத்து கோவில்களிலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மிக விரைவில் திருப்பதி தேவஸ்தானத்தன் கீழ் செயல்படும் அனைத்து உள்ளூர் கோவில்களிலும் அன்னப்பிரசாத செயல்பாடு தொடங்கப்படும். உணவு விவரங்கள் மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகத்தில் தினமும் காலையில் கோதுமை ரவை உப்புமா, சூஜி ரவை உப்புமா, சேமியா உப்புமா, பொங்கல், சட்னி மற்றும் சாம்பார் வழங்கப்படுகின்றன. மதியம் சர்க்கரை பொங்கல், சாதம், காய்கறிகள், சட்னி, வடை, சாம்பார், ரசம் மற்றும் மோர் என 8 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. மாலையில் சர்க்கரை பொங்கல், சாதம், காய்கறி, சட்னி, வடை, சாம்பார், ரசம் மற்றும் மோர் என 8 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. அட்சய சமையல் அறையில் தினமும் கோதுமை ரவை உப்புமா, சூஜி ரவை உப்புமா, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், சுண்டல், பால், தேநீர் மற்றும் காபி ஆகியவை வழங்கப்படுகின்றன. அதிக பக்தர்கள் வரும் நாட்களில் மற்றும் திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு மோர், பாதாம் பால், பிஸ்கட் மற்றும் ஜூஸ் பாக்கெட்டுகளும் வினியோகிக்கப்படுகின்றன. வகுளமாதா சமையல் அறையில் சுமார் 1,000 அன்னப்பிரசாதப் பணியாளர்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களின் அயராத முயற்சியால் பக்தர்கள் தங்கும் வளாகம்- 2,4,5ல் உள்ள உணவுக் கூடங்கள், மத்திய விசாரணை அலுவலகம், அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 1, ராம் பகீச்சா விருந்தினர் மாளிகை, அஞ்சனாத்ரி நிலையம் குடில்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் உப்புமா தயாரித்து வழங்கப்படுகின்றன. திருமலையில் அனைத்து நேரங்களிலும் பக்தர்களுக்கு உணவு தடையின்றி வழங்கப்படுகிறது. 🎊🙏🎊🙏🎊
9 likes
7 shares
🙏🕉️வசந்த பஞ்சமி🕉️🙏 *🙏🌹பஞ்சமி திதி நாள்: 23-01-2026 🌹🙏* *🙏தை அமாவாசைக்கும் மாசி அமாவாசைக்கும் இடைப்பட்ட காலத்துக்கு மாக மாதம் என்று பெயர். அந்த மாக மாத வளர்பிறை பஞ்சமி நாளே வசந்த பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது. குளிர்காலம் முடிந்து அடுத்து வரவிருக்கும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்நாள் கொண்டாடப் படுவதால், வசந்த பஞ்சமி என்று இந்நாள் அழைக்கப்படுகிறது.* *சரஸ்வதி தோன்றிய நாளாக இந்நாள்கருதப்படுவதால், பாரதத்தின் வடக்குப் பகுதியில் சரஸ்வதி பூஜையாக இந்நாள் கொண்டாப் படுகிறது.* *சரஸ்வதிக்குப் பிடித்தமான நிறம் மஞ்சள். மஞ்சள் நிறப் பூக்கள் மலரும் காலமாக வசந்த காலம் இருப்பதால், மக்களும் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து, மஞ்சள் நிறப் பலகாரங்கள் செய்து இந்நாளைக் கொண்டாடுவார்கள்.* *கண்ணனும் பலராமனும் சாந்தீபனியிடம் குருகுல வாசம் செய்யத் தொடங்கிய நாள் வசந்த பஞ்சமி என்று பாரதத்தின் வடக்குப் பகுதிகளில் கூறப்படுவதால், அப்பகுதிகளில் இந்நாளில் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்தல் விசேஷமாகக் கருதப்படுகிறது.* *ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரத்தில் உள்ள பிரம்மா சரஸ்வதி கோயில், கர்நாடகத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோயில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜகந்நாதர் கோயில் ஆகிய கோயில்களில் வசந்த பஞ்சமி ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.* *அடுத்த 40 நாட்களில் வரவிருக்கும் ஹோலிப் பண்டிகையை வரவேற்கும் விழாவாகவும் இந்நாள் கருதப்படுவதால், வசந்த பஞ்சமியன்று வண்ண வண்ணப் பட்டங்களை வானில் பறக்க விட்டு மக்கள் கொண்டாடுவார்கள்*. *🙏சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில், விரதம் இருந்து அம்பாளைத் தொழுது பிரார்த்தித்தால், வாழ்வில் வசந்தம் நிச்சயம்.* *🙏இந்த நாளில், காலையில் விரதம் மேற்கொள்ளுங்கள். வீட்டில்🪔 விளக்கேற்றி அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இவை வாழ்வில் பல உன்னதங்களைப் பெற்றுத் தரும்.* *🙏சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி முதலான நைவேத்தியங்களைப் படைத்து தேவியை உபாஸிக்கலாம். அதேபோல், அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அம்பாளை வணங்கி வழிபடுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். எலுமிச்சை மாலை சார்த்தி வழிபடுவது இன்னும் வளமும் பலமும் சேர்க்கும். முடிந்தால், அன்றைய நாளில், அம்பாளை வழிபட்டு, இயலாதோருக்கு தயிர்சாதம் வழங்குங்கள். அதில் குளிர்ந்து போய், நம் வாழ்வில் வசந்ததத்தைத் தந்தருள்வாள். நம் வாழ்க்கையையே குளிரச் செய்துவிடுவாள் தேவி!💐🌷🌹🤲👣🙇‍♂️🕉️🙏* 🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🙏🕉️🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ்
16 likes
11 shares