𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
528 views
11 hours ago
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱 வலிவலத்தில் மேவி விளங்கும் ஈசனே ! உலகப் பொருள்களின்மேல் பற்றுக் கொண்டு பரபரப்பு எய்தி, மனமானது வேகத்தில் இயங்குவதைச் சாந்தப் படுமாறு செய்து, நின்பால் ஒன்றிப் பொருந்தி இருக்குமாறு நல்கிடுவாய். வஞ்சனை அற்றி நிலையும் பிறரிடம் கொடிய உரைகளை நவிலாதவாறும் தூய்மைப்படுத்திச் சுயவிருப்பின்மேல் செய்யப்படும் செயல்களை அகற்றுக. உன்னுடைய திருநாமத்தை எந்த நெறியில் நவில வேண்டுமோ அநத நன்னெறியில் நவிலுமாறு அருள்புரிவாய். என்னுடைய தரத்தின் அளவினை அறிந்து, எவ்வழியில் உரை செய்தால் யான் ஈடேற முடியுமோ அந்த நிலையை அறிந்து எனக்கு நல்கி அருள்புரிக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.