திருநீற்றுச் சுவடு
1.9K views
3 days ago
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #பொங்கல் ஸ்டேட்டஸ் வீடியோ #போகி பண்டிகை வாழ்த்துக்கள் #பொங்கல் வாழ்த்துக்கள் #மாட்டு பொங்கல் பெரியகோவில் நந்திக்கு சிறப்பு வழிபாடு*🍀 தஞ்சை பெரியகோவிலில் மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு, 1டன் அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்பு வகையில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும். பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி. ஸ்ரீராமஜயம்குழு உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மிகப்பெரிய நந்தியம்பெருமான் சிலை உள்ளது. இந்த நந்தியம் பெருமானுக்கு பொங்கல் பண்டிகையன்று மாலை, பால், தயிர் மற்றும் மஞ்சள் போன்ற பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். தொடர்ந்து மாட்டு பொங்கலன்று காலை அதிகாலை லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்,மற்றும் தீபாராதனை நடைபெறும். அதை தொடர்ந்து உருளை கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பலவகையான பழங்களாலும், முறுக்கு மற்றும் பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெறும். மேலும், நந்திபெருமான் சிலை முன்பு 108 பசுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, பசுகள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு வழிபாடு நடைபெறும். பின்னர் நந்திபெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.🦋 #🔱🔱பிரதோச சிவ நாதன்🌙🔱 #🙏நந்தி பகவான் 🙏

More like this