இது உண்மையா அல்லது என் கற்பனையா தெரியவில்லை!! 😄. *********************************************** சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்கள் கூட்டம் பெரும் மகிழ்ச்சியை தருகிறது!! திருச்சியில் புத்தகக் கண்காட்சி நடைபெறும் போது இவ்வளவு கூட்டம் நான் பார்த்ததில்லை. நான் போகும் போதெல்லாம் ஒவ்வொரு ஸ்டாலிலும் ஓரிருவர் தான் இருப்பர்!😄. *************************************************** ஒரு முறை நான் கோவிலுக்கு சென்று விட்டு பக்தி உணர்வு மாறாமல் திருச்சி வருடாந்திர புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். ஒவ்வொரு ஸ்டாலாக பார்த்துக் கொண்டே போன போது, ஒரு கம்யூனிஸ்ட் சோசியலிஸம் சம்பந்தமான புத்தகங்கள் மட்டும் உள்ள ஸ்டாலில் நுழைந்தேன். எந்த பதிப்பகம் என்று ஞாபகமில்லை. யாருமே இல்லாத டீ கடையில் டீ ஆற்றுவது போல் அங்கே இருந்தவர்கள் என்னவோ உற்சாகமாகத் தான் இருந்தனர்!! இதையெல்லாம் யார் வாங்குவார்கள் என்று எனக்கு தான் பாவமாக இருந்தது!! ஆனால் உள்ளே நுழைந்தவுடனே ஒரு different consciousnessயை உணர்ந்தேன். ஆனால் அது ஒரு நாத்திகம் கலந்த உணர்வு தான்! எனக்கு அந்த consciousness உணர்வு மிகவும் வித்யாசமாக இருந்தது. பிடித்திருந்தது. அதில் ஆன்மீகத்திற்கே உரிய உண்மை, தூய்மை, உலகத்தை நலிந்தவர்களை பற்றிய அக்கறை போன்ற எல்லாம் இருந்தது. ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லை; ஒரு வகையான நாத்திக உணர்வும் மேலோங்கி இருந்தது. இவ்வளவு அருமையான consciousness நாத்திகத்தில் ஏன் இருக்கிறது என்று தோன்றியது. ஏற்கனவே கடவுளாக இருந்த யாரோ கோபத்தில் நாத்திகராக மாறி அந்த ஸ்டாலில் இருந்திருக்க வேண்டும் என்று கூட தோன்றியது!! "ஏன் இது நாத்திகத்தில் இருக்க வேண்டும்; உண்மையான ஆன்மீகம் தெரியாத consciousness பாவம்!" என்று நினைத்தேன். அந்த consciousness என்னிடம் தொற்றிக் கொண்டது என்று நினைக்கிறேன். பிறகு நான் ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் போதும் அந்த consciousnessஉம் ஆன்மீகத்தில் நனைவதை உணர்ந்தேன். பிறகு அந்த consciousness முழுமையாக ஆன்மீகத்தில் நுழைந்து பின்னர் கடவுள் போஸ்ட் கூட பெற்று விட்டது என்று நினைக்கிறேன்!!😄 அது யார்; இப்போது என்ன நிலை என்றெல்லாம் தெரியவில்லை!! இது உண்மாயாக நடந்ததா அல்லது என் கற்பனையா?!! ***********************************************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம