𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
639 views
22 days ago
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️ சேல் மீன்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! வேதம் முதலிய நூல்களில் விதிக்கப்பட்ட முறைகளினால் உன் திருவடிகளை அடைதற்கு முயன்றும் அஞ்ஞானம் நீங்காமையால் சனகாதி முனிவர்களாகிய நால்வர் உன்னை அடைந்து உண்மைப் பொருள் கேட்க, அவர்கள் தெளிவு பெறுமாறு கல்லால மரநிழலில் வீற்றிருந்து அருமறை நல்கிய நல்லறத்தை எவ்வாறு அவர்கட்கு உணர்த்தியருளினாய்? கூறுவாயாக. அ௫ளியவர் : திருஞானசம்பந்தர். திருமுறை : முதல்-திருமுறை. பண் : பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். தலம் : திருச்சேய்ஞலூர். சுவாமி : சத்தியகிரீசுவரர். அம்பாள் : சகிதேவியம்மை.