புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்குவதே ஒரு சிறந்த அனுபவம்!! ஆனால், அனைத்தையும் படிக்கிறோமோ என்பது doubt தான்!! 😄 சில சமயம் வாங்கிய புத்தகத்தையே கூட நான் மீண்டும் வாங்கியிருக்கிறேன்; வீட்டிற்கு வந்த பிறகு தான் தெரியும்!! 😄😂 பலரும் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி விடுவார்கள், ஆனால் அவற்றை முழுமையாகப் படித்து முடிப்பதில்லை. ஜப்பானிய மொழியில் இதற்கு "சுண்டோகு" (Tsundoku) என்று ஒரு வார்த்தையே உண்டு!!😄 - அதாவது படிக்கும் ஆர்வத்தில் புத்தகங்களை வாங்கி அடுக்கி வைப்பது, ஆனால் படிக்காமல் விடுவது. புத்தகங்களை படிப்பதை காபி குடிப்பதை போல் ஒரு தினசரி பழக்கமாக மாற்றுவது தான் இதற்கு தீர்வு. இங்கே வல்லுனர்கள் கூறும் சில டிப்ஸ்!! ************************************************ 1. தினமும் 30 நிமிட விதி (The 30-Minute Rule):
நமக்கு நேரம் இல்லை என்று சொல்வது ஒரு சாக்குப்போக்கு மட்டுமே. தினமும் காலையிலோ அல்லது இரவிலோ வெறும் 30 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். சராசரியாக ஒரு மனிதரால் நிமிடத்திற்கு 240 வார்த்தைகள் படிக்க முடியும். தினமும் 30 நிமிடம் படித்தால், ஒரு வருடத்திற்கு சுமார் 30 முதல் 50 புத்தகங்களை நம்மால் படித்து முடிக்க முடியும். "நேரம் கிடைக்கும்போது படிப்பேன்" என்று காத்திருக்காமல், "இது படிப்பதற்கான நேரம்" என்று ஒதுக்குவதே சூட்சுமம். ********************************************** 2. எப்போதும் கையில் ஒரு புத்தகம் (Carry a Book Everywhere):
Ryan Holiday கூறுவது போல, வீட்டை விட்டு கிளம்பும்போது 'பர்ஸ், சாவி, போன்' எடுப்பது போல ஒரு புத்தகத்தையும் கையில் எடுத்துச் செல்லுங்கள். பேருந்து பயணம், மருத்துவமனை காத்திருப்பு, அல்லது நண்பருக்காக காத்திருக்கும் நேரங்களில் போனை நோண்டுவதற்கு பதில், இரண்டு பக்கங்களாவது படியுங்கள். இந்த சிறிய இடைவெளிகள் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும். ************************************************3. பிடிக்காத புத்தகத்தை பாதியிலேயே நிறுத்துங்கள்: ஒரு புத்தகம் 50 பக்கங்களுக்கு மேல் உங்களை ஈர்க்கவில்லை என்றால், அதைத் தயங்காமல் மூடி வைத்துவிடுங்கள். வாசிப்பு என்பது சுமை அல்ல, அது ஒரு இன்பம். ***********
4. அட்டை முதல் அட்டை வரை படிக்க வேண்டியதில்லை (Selectivity):
புத்தகங்கள் ஒன்றும் மருந்துச் சீட்டுகள் அல்ல, முழுமையாகக் குடிக்க. எல்லா புத்தகங்களையும் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை வரிசையாகப் படிக்க வேண்டிய அவசியமில்லை.
முதலில் பொருளடக்கத்தைப் பாருங்கள்.
உங்களுக்கு மிகவும் ஆர்வமூட்டும் தலைப்பை மட்டும் முதலில் படியுங்கள்.
அந்த ஆர்வம் உங்களை மற்ற பக்கங்களுக்கும் அழைத்துச் செல்லும். ***********
5. சூழலை மாற்றுங்கள் (Visual Cues): புத்தகங்களை அலமாரியில் பூட்டி வைக்காமல், நீங்கள் அடிக்கடி அமரும் சோபா, சாப்பாட்டு மேசை அல்லது படுக்கைக்கு அருகில் வையுங்கள். கண்ணில் பட்டால் மட்டுமே கை தானாக எடுக்கும். ************
6. பழக்கங்களை இணையுங்கள் (Habit Stacking): ஏற்கனவே நீங்கள் செய்யும் ஒரு செயலுடன் வாசிப்பை இணையுங்கள். உதாரணமாக, "காலை காபி குடிக்கும்போது 5 பக்கங்கள் வாசிப்பேன்" என்று முடிவு செய்யுங்கள். ********
7.. ஒரே நேரத்தில் பல புத்தகங்கள்: உங்கள் மனநிலைக்கு ஏற்ப புத்தகங்களைத் தேர்ந்தெடுங்கள். பயணம் செய்யும்போது ஒரு நாவல், காலையில் ஒரு தத்துவப் புத்தகம் என மாற்றி மாற்றி வாசிப்பது சலிப்பைத் தவிர்க்கும். ************
8. பக்கங்களை இலக்காக வைக்காதீர்கள்: "இந்த வாரம் ஒரு புத்தகம் முடிக்க வேண்டும்" என்ற அழுத்தம் வேண்டாம். "இன்று 2 நிமிடங்கள் அல்லது 2 பக்கங்கள் வாசிப்பேன்" என்ற சிறிய தொடக்கம் போதும். ***********
********
9. படித்ததை மற்றவரிடம் பகிருங்கள்: நீங்கள் படித்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை நண்பரிடமோ அல்லது சமூக வலைதளத்திலோ பகிருங்கள். மற்றவருக்குச் சொல்லிக் கொடுக்கும்போது அந்த விஷயம் மனதில் ஆழப் பதியும். ஃபெயின்மேன் உத்தி" - கற்பிப்பதற்காக வாசியுங்கள் (The Feynman Technique):
ஒரு புத்தகத்தை சாதாரணமாக வாசிப்பதற்கும், "இதை நான் மற்றவருக்கு விளக்க வேண்டும்" என்ற எண்ணத்தோடு வாசிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
*****
10. டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox): சமூக வலைதளங்களில் நேரத்தை வீணாக்குவதற்குப் பதில், வாசிப்பை ஒரு தியானமாகப் பாருங்கள். போனைத் தூர வைத்துவிட்டு வாசிப்பது உங்கள் கவனத் திறனை (Focus) அதிகரிக்கும். *****
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம