sudhakar godwin
545 views
6 days ago
🌿 *இன்றைய தேவ வார்த்தை* 🌿 📖 *வேத வசனம்:* *“அன்று கர்த்தர் யோசுவாவை நோக்கி,* *‘இன்று எகிப்தின் நிந்தையை உங்களிடம் இறாதபடி நீக்கினேன்’* என்றார். ஆகையால் அந்த இடத்திற்கு இன்றுவரை *‘கில்கால்’* *என்று பெயர்.”* — *யோசுவா 5:9* 🎙️ *செய்தி:* கில்கால் என்பதற்கு “எகிப்தின் நிந்தை உன்மேல் இராதபடி நீக்குதல்” என்று அர்த்தம். இது தேவன் தமது ஜனங்களின் அவமானத்தையும், நிந்தையையும், வனாந்தர காலத்தின் சுமையையும் அகற்றிய இடமாகும். இன்று தேவன் உங்களை ஒரு கில்கால் அனுபவத்துக்குள் கொண்டு வருகிறார். கடந்த கால தோல்விகள், மனச்சோர்வு, மனச்சுமைகள் எல்லாம் தேவனுடைய வல்லமையால் நீக்கப்படுகின்றன. கில்காலிலிருந்து தான் புதிய தொடக்கம், புதுப்பிக்கப்பட்ட வலிமை, மற்றும் ஜெயமான வாழ்க்கை ஆரம்பமாகிறது. 🙏*ஜெப சிந்தனை:* கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலுள்ள ஒவ்வொரு நிந்தையையும் நீக்கி, உங்கள் அடையாளத்தை மீட்டெடுத்து, தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற உங்களை ஜெயத்திற்கு தயார் படுத்துவாராக. #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 ✍️ — *சகோ. சுதாகர் காட்வின்* 🔥*ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்* #சகோ சுதாகர் காட்வின்