#ஆன்மீக #தெரிந்து கொள்வோம் சிவாஜிக்கு ஸ்மார்த்த ராமதாரச் சொன்ன போதனை...*
"சிவாஜி , நீ செய்திருப்பது பெரும் இந்து எழுச்சி, உறங்கி கொண்டிருந்த மக்கள், செய்தறியாது நம்பிக்கையற்று முடங்கி கிடந்த கூட்டம் உன்னால் எழுச்சி பெற்று நிற்கின்றது
இங்கு ஏன் ஆலயங்கள் குறிவைக்கபட்டன, ஏன் இந்துமத சம்பிரதயமும் சடங்குகள், இந்துக்கள் தொடர்ந்து குறிவைக்கபடுகின்றார்கள் என்பதை நீயும் அறிவாய்
இந்துமதத்தை ஒழித்தால் தவிர இங்கு அந்நிய ஆட்சி சாதியமில்லை, இந்துமதம் இருக்குமளவும் இங்கு அந்நியர் ஆளமுடியாது அதனாலே அதனை குறிவைத்து தாக்கினார்கள், ஆலயங்களை இடித்துவிட்டால் மக்கள் சம்பிரதாயங்களை முடக்கிவிட்டால் இந்துமதம் அழியும்,அந்த அழிவில் தங்கள் ராஜ்ஜியத்தை நிறுத்தலாம் என முயற்சிக்கின்றார்கள்
சிவாஜி இது மதம் அல்ல, இது அரசியல் அல்ல, அரசர்களை உருவாக்கும் தந்திரம் அல்ல, மதத்தால் ஒரு நாட்டை பிடித்து அவர்களை மதம்மாற்றி ஆட்சி நிறுவும் வஞ்சகம் அல்ல
இது பிரபஞ்சம் சொன்ன தர்மம், சனாதன தர்மம், தர்ம சாஸ்திர தொகுப்பு, மானுடன் மானுடனாக வாழ செய்யும் வழி. இதனை உருவாக்கியது பிரபஞ்சம்
அந்த பிரபஞ்சமே உன்னையும் உருவாக்கி பல காரணங்களுக்காக அனுப்பிற்று, நீ உன் கடமையினை தொடர்ந்து செய், அதில் வெற்றியா தோல்வியா உன் காலத்திலே வெற்றியா எனபதெல்லாம் சிந்தியாதே
இந்துக்களுக்கு எழுச்சி கொடு,நம்பிக்கை கொடு,தொடர்ந்து கொடுத்துகொண்டே இரு
ஒரு நாள் அது எழும், மிக பெரிதாக எழும், அந்த கோஷம் "ஜெய் ஸ்ரீராம்" என எழும், திரும்பும் இடமெல்லாம் அது எதிரொலிக்கும்
எட்டு திக்கிலும் அந்த ராமனின் பெயர் எதிரொலிக்கும், அப்போது இந்த இந்துஸ்தானம் பெரும் அதிசயங்களை காணும்
அப்போது நீயும் நினைவுக்கு வருவாய், அதனால் தயங்காமல் யோசிக்காமல் லாப நஷ்ட கணக்கில்லாமல், பந்தபாச சிந்தனையில்லாமல் உன் கடமை ஒன்றே செய்வாய்
ஒருநாள் இங்கு பெரும் எழுச்சி வரும், பிரபஞ்சம் அதை செய்யும், அதை தொடங்கி வைக்கு நெருப்பு நீ...."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இது அவுரங்கசீப் சொன்னது...
"எங்கோ இருக்கும் சிவாஜி இந்த மகாபெரிய மொகலாயத்தை அழித்துவிடமுடியாது, நான் அவனை கண்டு அஞ்சவில்லை ஆனால் அவன் எழுப்பும் இந்து எழுச்சி அச்சமூட்டுவது
இந்துக்கள் எழுச்சிகொள்ளாதவரை மட்டும்தான் அந்நிய அரசுகள் ஆளமுடியும், அவர்கள் எழுந்துவிட்டால் இங்கு அந்நியர் ஆள்வதும் கடினம், அதற்கு மிகபெரிய விலை கொடுத்தாலும் முடியாது"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
திரும்பும் இடமெல்லாம் "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமெழுவது அந்த வார்த்தைகளை உண்மையாக்கிற்று , வீரசிவாஜி தொடங்கிவைத்த எழுச்சி இன்று நனவாகின்றது என்பது வரலாறு.
கடந்த 2024ம்ஆண்டு இதே நாளில் ராமர் கோயில் கட்டப்பட்டதை தொடர்ந்து எழுதப்பட்ட பதிவு இது...
ஜெய் ஸ்ரீ ராம்🌹