சிவமணியம்
கேள்வி: கடவுள் அவரோட வேலைகளை... இஷ்டத்தை சில குறிப்பிட்ட ஆட்கள் மூலமாத்தானே நடத்தறார்?
பகவான்: கடவுள் எல்லாத்திலேயும், இருக்கார், எல்லோர் மூலமாவும் வேலை பாக்கறார். ஆனாலும் அவருடைய சாநித்தியம் சுத்தமான மனதுகள்லே அறியப்படறது. அசுத்தமான மனதை விட சுத்தமான மனசு கடவுள் ஸாந்நித்தியத்தையும், அதன் மூலமா அதோட செயல்களையும், நல்லா பிரதிபலிக்கறது. அதனாலே ஜனங்க அவாளைக் கடவுளாலே தேர்ந்தெடுக்கப் பட்டவான்னு சொல்றா. ஆனா அவன் அவனை அப்படி சொல்லிக்க மாட்டான். அப்படி அவன், 'நான் கடவுளுக்கும் ஜனங்களுக்கும் இடையிலே தூதர்'ன்னு நினைச்சா, அவன்கிட்டே இன்னும் தனித்தன்மை போகலே. அதனாலே சம்பூர்ணசரணாகதி அடையலேங்கறது தெளிவாகும்.
கேள்வி: பிராமணர்கள் பூஜாரியாவோ, தூதர்களாவோ இறைவனுக்கும் மற்றவர்களுக்கும் இடையில கருதப் படறாங்களே. ஏன்?
பகவான்: ஆமாம். ஆனா யார் பிராமணன்? பிரம்மத்தை உணர்ந்தவன்தான் பிராமணன். அவனுக்கு ஜீவத்துவம் இருக்காது. அவன் அதனாலே நான் தூதர்... இடையிலேன்னு நினைக்க மாட்டான்.
ஒரு ஞானி பிறரைத் தனக்கு அன்னியமா பாக்க மாட்டான். அப்போ எப்படி பிரார்த்தனையெல்லாம் பண்ண முடியும்? யார்கிட்டே? எதுக்காக? அவனோட வெறும் இருப்பு மாத்ரமே, எல்லோருக்கும் எல்லாத்தையும் தரும். நீங்க பிறர்க்காக பிரார்த்தனை பண்றேன்னு நினைக்கற வரைக்கும், உங்களுக்கு அன்னியமா பிறர் இருப்பா. நீங்க வேறே பிறர் வேறேங்கறதுதான் அஞ்ஞானம். அஞ்ஞானத்தாலேயே இயலாமை வர்றது. பலஹீனம் ஏற்படறது.
உங்களுக்கே தெரியறது முடியலேன்னு.... அப்போ எப்படி நீங்க அடுத்த ஆளுக்கு உதவ முடியும்? நீங்க இறைவனிடம் முறையிடுவேன்னு சொன்னா... அவருக்குத் தெரியும். அவர் வேலையைப் பாக்க. உங்களோட உதவி தேவையில்லே.
உங்களுக்கே உதவிக்கோங்கோ! அதனாலே பலமாகுங்கோ! அது முழுசா சரண்டையறதனாலேயே நடக்கும். நீங்க உங்களை ஒப்படைச்சிடுங்கோ! அப்போதான் சரணடைஞ்சப்றம் நீங்க இருக்க மாட்டேள். ஜீவத்துவம் இருக்காது. அவரிஷ்டமே நடக்கும். அதுவே மெளனம். அதுதான் அடையத்தக்கது. எல்லாத்துலேயும் சிறந்தது.
கேள்வி: பெரிய நிலையோட அனுபவம் எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இருக்குமா? இல்லே அதிலே வித்தியாசம்
இருக்குமா?
பகவான்: பெரிய நிலை சமமா இருக்கு. அதோட அனுபவமும்
சமமா இருக்கும்.
கேள்வி: ஆனா அதைப்பத்தி ஒவ்வொருத்தர், ஒவ்வொரு மாதிரி சொல்றாங்களே?
பகவான்: மனசை வச்சுதானே சொல்றது. மனசு வேற வேறயா இருக்கறதாலே அப்படி இருக்கு.
கேள்வி: அதை உணர்ந்தவங்க ஏன் வேற வேற மாதிரி சொல்லுறாங்க?
பகவான்: அதைச் சொல்ற விதம் ஏன் மாறுபடறதுன்னா.... அதைத் தேடறவா, ஸ்வபாவம் வேற வேறயா இருக்கு. அவாளை வழிகாட்ட அப்படிச் சொல்றா.
கேள்வி: ஒருத்தர் கிறிஸ்துங்கறார்... ஒருத்தர் இஸ்லாம்... ஒருத்தர் புத்த மதம்ங்கறார். ஏன் அவங்க வளர்ந்த விதத்துல அப்படியா?
பகவான்: வளர்ந்த சூழ்நிலை எப்படியிருந்தாலும், அனுபவம் ஒண்ணுதான். சொல்ற விதம்தான்...வேறவேறே.
கேள்வி: பகவான் நேத்து கடவுள் எல்லாரையும் பாத்துக்கறார்ன்னு சொன்னீங்க. அப்போ நாம ஏன் எதையாவது செய்யறதுக்கு முயற்சி பண்ணணும்?
பகவான்: முயற்சி பண்ண யார் சொன்னா? கடவுள்கிட்டே அவ்வளவு ஒப்படைப்பு இருந்தா இந்தக் கேள்வியே இருக்காது.
கேள்வி: கடவுள் எல்லாத்தையும்
வழிநடத்தறார்ங்கறது
உண்மைதானே? அப்போ எதுக்கு இந்த உபதேசமெல்லாம்?
பகவான்: கேக்கறவாளுக்கு சொல்றா. உங்களுடைய நம்பிக்கை திடமாயிருந்தா அதிலேயே நில்லுங்கோ. உங்களைச் சுத்தி என்ன நடக்கறதுங்கறதை பத்திக் கவலைப்படாதேள்! உலகத்திலே இன்பம், துன்பம் இரண்டும் இருக்கும். இரண்டுக்கும் சரிசமமா
இருங்கோ! கடவுளோட நம்பிக்கையிலேயே இருங்கோ! ஒப்படைப்பு முழுமையா இருந்தாத்தான் அப்படியிருக்க முடியும்.
கேள்வி: அந்த ஒப்படைப்பை எப்படி பெறுவது?
பகவான்: சரியாச் சொன்னேள்... இதுக்குதான் எல்லாரும் உபதேசம் கேக்கறா.
எல்லாரும் துன்பத்தாலே பாதிக்கப்பட்டே, அதிலே இருந்து விடுபடணும்னு நினைக்கறா. அவாகிட்டே, 'என்ன நடக்குமோ நடக்கும். நடக்காதது நடக்காது. எல்லாம் கடவுள் இஷ்டம்'ன்னு சொன்னா ரொம்ப பக்குவனாயிருந்தா... அது போதும்... முக்தி அடைஞ்சுடுவான்.
மத்தவா அவ்வளவு சுலபமா சமாதானம் ஆக மாட்டா.
கடவுள் யார்?
அவரோட ஸ்வபாவம் என்ன?
அவர் எங்கே இருக்கார்?
அவரை எப்படி உணர்றது?
இப்படிக் கேப்பா. அவாளைத் திருப்திப்படுத்த புத்திபூர்வமா பேசி ஆகணும், அதை அவா அலசி ஆராய்ஞ்சா உண்மை நல்லா புத்தியிலே பிடிபடும்.
புத்திபூர்வமா புரிஞ்சுகொண்டதை பக்குவன் நடைமுறைப் படுத்துவான். எப்பவும் நான் யார்? யாருக்கு இந்த நினைப்பு வர்றதுன்னு,
விசாரத்திலே... புரிஞ்ச உண்மை நல்லா அனுபவமாகற வரைக்கும், அதாவது எல்லாத்தையும்
ஒண்ணுதான் நடத்தறதுங்கற உண்மை அனுபவமாகற
வரைக்கும்... விட மாட்டான். அதுதான் தீவிர பக்தி. கடைசியிலே அவன் சந்தேகமெல்லாம் தீர்ந்து... எந்த உபதேசமும் கேக்கமாட்டான்.
கேள்வி: கடவுள் மேலே எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.
பகவான்: அப்போ இந்தக் கேள்வியே வராது. கடவுள் நம்பிக்கை இருக்கறவன் எப்பவுமே சுகமாயிருப்பான். ஆத்ம விசாரத்தாலேதான்...
இந்தத் தளராத நம்பிக்கை ஏற்படும்.
விசாரம்தான் எல்லாத்தையும் உள்ளடக்கினது... பக்தி, ஞானம்,கர்மம், யோகம்.
கேள்வி: ஒருத்தனுக்கு உடல் தியானத்துக்கு ஒத்துழைக்கலைன்னா
ஹடயோகம் பழகலாமா?
பகவான்: ஒவ்வொருத்தர் ஸம்ஸ்காரத்தைப் பொறுத்தது.
ஒருத்தருக்கு உடம்பு சரியில்லேன்னா ஹடயோகம்
குணப்படுத்தும்ன்னு அதைப் பழகுவார்.
இன்னொருத்தர் கடவுள்
குணப்படுத்துவார்ன்னு
ஒப்படைச்சுடுவார்.
இன்னொருத்தர் அவரோட மனோபலத்தை உபயோகிப்பார்.
இன்னொருத்தர் இதைக் கண்டுக்க மாட்டார்.
ஆனா எல்லோரும் தியானத்தை விட மாட்டா.
நான் யார்ங்கறதுதான் முக்யம். மத்தது எல்லாம் இரண்டாம் பட்சம் உபரிதான்.
பக்கம்:562 - 566.
அப்பனேஅருணாசலம். 🚩🕉🪷🙏🏻
#பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #மண்ணில் வாழ்ந்த மகான்கள் #🙏ஆன்மீகம்