sudhakar godwin
529 views
🌿 இன்றைய தேவ வார்த்தை 🌿 📖தேவ வசனம்: “பூமி முழுவதும் கர்த்தரின் மகிமையால் நிறைந்திருக்கிறது.” ஏசாயா 6:3 🎙️செய்தி கர்த்தரின் மகிமை ஒரு காலத்திற்கோ, ஒரு இடத்திற்கோ மட்டும் அல்ல. இந்த ஆண்டை முழுவதும் நிரப்பும் மகிமை அது. நீங்கள் காணும் சூழ்நிலைகள் மாறாவிட்டாலும், அவற்றின் நடுவே தேவனின் மகிமை வெளிப்பட ஆரம்பிக்கும். இந்த ஆண்டில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை ஒரு மாதம் முடிய போகிறது என நினைக்கிறீர்களா பயம்வேண்டாம் 👉குறைவாகத் தோன்றிய இடங்களில் நிறைவு உண்டாகும் 👉 இருளாக இருந்த இடங்களில் வெளிச்சம் பிரகாசிக்கும் 👉 தாமதமானது தேவனின் நேரத்தில் மகிமையாய் நிறைவேறும் உங்கள் வீடும், உழைப்பும், ஊழியமும், எதிர்காலமும் கர்த்தரின் மகிமையால் நிரப்பப்படும் ஆண்டு இது. உங்களை சுற்றிலும் உள்ள மனுஷர் காண்பார்கள், தேவ நாமம் மகிமைப்படும். — ✍️சகோ. சுதாகர் காட்வின் ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏