முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
1 . குர்ஆனை ஓதி அதன்படி செயலும் ஆற்றக்கூடிய இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று.
2 . குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரிச்சம் (பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணமில்லை.
3 . குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை, துளிசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது.
4 . குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் ‘கசப்பானது’ அல்லது ‘அருவருப்பானது’ அதன் வாடையும் வெறுப்பானது.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
(புகாரி: 5059)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️