மக்களிலேயே கடுமையான (சத்திய) சோதனைக்குள்ளானோர் இறைத்தூதர்கள் ஆவர். அடுத்து (அவர்களைப் போன்ற) சிறந்தவர்கள். பிறகு (அவர்களைப் போன்ற) சிறந்தவர்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே!’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை ஒரே மனிதனாகிய நான் அடைகிறேன்’ என்று கூறினார்கள்.
நான், ‘இந்தத் துன்பத்தின் காரணமாகத் தங்களுக்கு இரண்டு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத்தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்து மன்னிக்காமல் விடுவதில்லை’ என்று கூறினார்கள்.
(புகாரி: 5648)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️