திருநீற்றுச் சுவடு
628 views
9 days ago
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 நேரத்தில் 108 சிவாலய தரிசனம்* தஞ்சையிலிருந்து குடந்தை செல்லும் சாலையில் 25வது கிலோமீட்டரில் உள்ளது பாபநாசம்.இங்கு, 108 சிவாலயம்' என அழைக்கப்படும் ராமலிங்க சுவாமி திருக் கோயில் அமைந்துள்ளது. ராமபிரான் சீதாப்பிராட்டி யுடனும், லட்சுமணனுடனும் இத்தலத்திற்கு வந்தாராம். இங்கு தன் தோஷம் நீங்க, 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து ராமபிரான் வழிபட்டதாகத் தல வரலாறு கூறுகிறது. எனவே, இத்திருக்கோயில் மூலவர்ராமலிங்க சுவாமி' என்றும், அம்பாள் 'பர்வதவர்த்தனி. என்றும் அழைக்கப்படுகின்றனர். சாப, தோஷ, பாப நிவர்த்தி ஸ்தலம் பறவைகளில் இருந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் நாம் துன்பம் செய்யும்போது நமக்கு அவைகளின் சாபம் வந்து சேர்கிறது. நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து விலகும்போது நமக்கு தோஷம் ஏற்படுகிறது. உதாரணமாக பித்ரு காரியம் போன்றவைகளை உரிய காலங்களில் முறைப்படி செய்யாவிட்டால் தோஷம் ஏற்படுகின்றது. நாம் அன்றாடம் செய்யும் காரியங்களில் இருந்தும் பல்வேறு விதமான பாவங்கள் நமக்கு ஏற்பட்டு, பல்வேறு பிறவிகளாக நம்மைத் தொடர்கின்றன. இத்தகைய சாப, தோஷ பாவங்களை நீக்கும் தலமாக பாபநாசம் 108 சிவாலயம் விளங்கி வருகிறது. கீழை ராமேஸ்வரம் ராம- ராவண யுத்தத்தில் பலரைக் கொல்ல நேர்த்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் பூஜை செய்தபின் ராமபிரான் கீழ்த்திசை நோக்கி சீதா தேவியுடனும் லட்சுமணனுடனும் வந்தார். அப்போது குடமுருட்டி ஆற்றின் கரையில் மரங்கள் அடர்ந்த ஒரு சோலையைக் கண்டார். அங்குள்ள ஒரு உயர்ந்த வில்வ மரத்தடியில் ராமபிரான் அமர்ந்தபோது தன்னை இன்னும் ஏதோ ஒரு தோஷம் தொடருவதையும், அதனால் தனக்கு நிமமதியின்மை ஏற்படுவதையும் உணர்ந்தார். சுர, தூவுஷன் என்னும் அரக்கர்களைக் கொன்ற தோவும் ராமேஸ்வரத்தில் பூஜை செய்த பின்பும் தன்னைத் தொடர்வதை தனது ஞான திருஷ்டியால் உணர்ந்தார். அதைப் போக்க சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்வது அவசியம் என்பதையும் அறிந்தார். இறைவனே ஆனாலும் மனிதப் பிறவி எடுத்தால் அதற்குரிய சாப, தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதற்கு அரிய உதாரணம் இது. அனுமன் செய்த அற்புதம் உடனே ராமபிரான் அனுமனை அழைத்தார். தான் பூஜை செய்ய காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். அண்ணலின் உத்தரவை சிரமேற்கொண்டு அனுமனும் காசிக்குப் புறப்பட்டார். அங்கிருந்து அவர் சிவலிங்கம் கொண்டு வருவதில் சில தடைகள் ஏற்பட்டு கால தாமதம் ஏற்பட்டது. சீதாதேவி உருவாக்கிய லிங்கங்கள் அப்போது சீதா பிராட்டியானவர், அருகிலிருந்த குடமுருட்டி ஆற்றின் மணலில் அமர்ந்து விளை யாட்டாக சிவலிங்கங்களை உருவாக்கத் தொடங்கினார். இவ்வாறு 107 சிவலிங்கங்களை அவர் உருவாக்கிவிட்டார். அற்புதமாக அமைந்துவிட்ட அந்த சிவலிங்கங்களைப் பார்த்த ராமபிரான், தனது தேவியை பாராட்டினார். உடனே அந்த சிவலிங்கங்களுக்கு பூஜை செய்யத் தொடங்கி விட்டார். அப்போது காசியிலிருந்து ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வந்திருந்த அனுமன். வருத்தமுற்று தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை என்ன செய்வது என யோசித்தார். அப்போது அனுமனுக்கு அருளிய ராம பிரான், கோயிலுக்கு தென்புறத்தில் அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி தென்புறத்தில் அமைக்கப்பட்ட அந்த லிங்கத்திற்கு 'அனுமந்த லிங்கம்' என்று பெயரிட்டார். சீதாதேவி பிரதிஷ்டை செய்த 106 சிவலிங்கங்களும் மூன்று வரிசையில் வடக்குப் பகுதியில் அழகாக அமைந்து உள்ளன. 107வது லிங்கம் மூலவராக ராமலிங்க சுவாமியாக காட்சி தருகிறது. 108ஆவது சிவலிங்கமாக காசியிலிருந்து அனுமன் கொண்டு வந்து லிங்கம், ‘அனுமந்த லிங்கம்' என்று வழங்கப்பட்டு வருகிறது. 107 லிங்கங்களையும் தரிசனம் செய்து 108ஆவதாக அனுமந்த லிங்கத்தையும் தரிசனம் செய்தால்தான் சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்' என்று ராம பிரான் அருளியதால் அனுமனும் தன் வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுற்றார். இந்த ஆலயத்தை ஒரு முறை தரிசித்தால் 108 சிவாலயங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.🌹