N Murugesan
536 views
10 days ago
சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து பல யூடியூப் விலாக் பார்த்தேன்!! இவ்வளவு பேர் புத்தகங்கள் வாங்கி படிக்கிறார்கள் என்பது மிக மிக சந்தோஷமாக உள்ளது. தமிழ் சமுதாயம் குறித்து ஒரு பெரிய நம்பிக்கையையே இது ஏற்படுத்தி விட்டது. ஏனென்றால் புத்தகம் வாசிப்பது ஒரு மிகச்சிறந்த பழக்கம். ஒருவருடைய முழு வாழ்க்கை படிப்பினையையும் அதற்கென்று தனியாக ஒரு பிறவி எடுக்காமல் நாம் ஒரு புத்தகம் படித்தே பெற்று விட முடியும். ஒரு சிறந்த சமுதாயம், கலாச்சாரம் உண்டென்றால் அது ஒரு மிகச்சிறந்த இலக்கிய படைப்புகளையும் உருவாக்கியதாக இருக்கும்!! இதற்கு நம் தமிழ் நாகரிகமே சாட்சி!! நாம் தமிழை கொண்டாடுவதும் தமிழ் இலக்கியங்களை கொண்டாடுவதும் ஒன்றே!! நல்ல நூல் படைப்புகளும், அதை ஆதரிக்கும் வாசகர் வட்டமுமே சிறந்த இலக்கியங்களும், உயர்ந்த கலாச்சாரம் நிலைத்து நிற்பதற்கு அடிப்படை************************************* மேலும், புத்தக வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் அகக்கண்களைத் திறக்கும் உன்னதப் பயணம். ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்குச் சமம் என்று சொல்வார்கள்; அது நம் தனிமையை இனிமையாக்கி, சிந்தனைகளைச் செழுமைப்படுத்துகிறது. வாசிப்பதன் மூலம் உலக அறிவைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், மன அழுத்தம் குறைந்து, மன அமைதியும் கிடைக்கிறது. சிறந்த புத்தகங்கள் ஒரு மனிதனின் ஆளுமையைச் செதுக்கி, வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைத் தருகின்றன. நாம் வெவ்வேறு இடங்களுக்குச் செல்லாமலேயே பல உலகங்களையும், கலாச்சாரங்களையும், மேதைகளின் சிந்தனைகளையும் அறிந்து கொள்ள வாசிப்பு ஒன்றே எளிய வழி. ************************************************ நான் சென்னை பயணம் செய்வதாக இருந்தேன்; அதை புத்தக கண்காட்சி முடிவதற்கு முன் செல்லலாமா என்று கூட தோன்றுகிறது!!😄. நான் பல வருடங்களுக்கு முன்பு பல புத்தகங்கள் வாங்குவேன்; பிறகு அது குறைந்து ஆன்மீகம் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். இப்போது படிப்பது குறைந்து விட்டது. மீண்டும் படிக்க ஆரம்பிக்க ஆசை!! ************************************************. அதற்காக ஜெயமோகன், பெருமாள் முருகன், சாரு நிவேதிதா, பிரான்ஸிஸ் கிருபா போன்ற சமகால புத்தகங்களை வாங்குவேன் என்று நினைத்து விடாதீர்கள் (ஓடியே விடுவேன்!! எஸ் ராமகிருஷ்ணன் படித்ததில்லை. எனக்கு ஜெயகாந்தனே பிடிக்காது!! சிலர் சமுதாயத்தை சீரழிக்க எழுதுவார்கள்!!) நீங்கள் சிறுகதை இலக்கியங்கள் படிக்க நினைத்தால் புகழ்பெற்ற உலக எழுத்தாளர்களின் தமிழாக்க புத்தகங்களை படியுங்கள். நமது நாட்டிலேயே கூட மற்ற மலையாளம், கன்னடம், மராட்டி, தெலுங்கு என்று அங்கு எழுதப்பெற்ற பழைய புகழ்பெற்ற இலக்கியங்களின் தமிழாக்கத்தை படியுங்கள். ஆன்மீகம் சம்பந்தமான புத்தகங்களும் வாங்குங்கள் (என்னை மாதிரி சில சமயம் வாங்கி பிறகு படிக்காமல் இருந்து விடாதீர்கள்!!). விஜயா பதிப்பகம் நல்ல சைவ சித்தாந்த புத்தகங்களை வெளியுட்டுள்ளது. இரத்தினம் செட்டியார் எழுதிய ஒரு புத்தகம் மிகச் சிறப்பாக இருந்தது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் பன்னிரு சைவ நெறி புத்தகங்களை (சைவம் உங்கள் சமயமானால்) கண்டிப்பாக வாங்குங்கள். ராம்கிருஷ்ண மிஷினில் அத்வைதம் சம்பந்தமான புத்தகங்களை வாங்குங்கள். வெறும் திராவிடம், தமிழ் இலக்கியம் என்று மட்டும் நின்று விட வேண்டாம்!! ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்க தேவையில்லை; ஏதாவது ஒரு புத்தகம் மட்டுமாவது வாங்குங்கள்!! வாசிப்பை நேசிப்போம்; அறிவார்ந்த தமிழ் சமூகத்தை உருவாக்குவோம்! ************* #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம