⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
595 views
13 days ago
மெளனம் பழகு. எங்கே எல்லாம் உனது உண்மை குணம் முதலில் உதாசீனப்படுத்தப்படுகிறதோ அங்கேயெல்லாம் மெளனம் பழகு நன்கு பழகி உறவாடியதில் யார் உன்னை வெறுத்து ஒதுக்கினாலும் அவர்களைப் பற்றி ஒன்றுமே பேசாதிருக்க மெளனம் பழகு. ஊரறியச் செய்தது குற்றம் எனப் புரிந்து கொண்டும் புரியாதது போல் இருப்பவரிடம் மெளனம் பழகு. பிறருக்கு உன் மூலம்.செய்த சிறு நன்றியையும் எச்சூழ்நிலையிலும் சொல்லிக் காட்டாமல் இருக்க - மௌனம் பழகு. அடுத்த நொடி வாழ வழியில்லாமல் போகும் நிலைவரினும் ,எல்லாம் இருந்தும் மனமுவந்து கொடுக்கும் மனநிலை இல்லாதவரிடம் உதவி கேட்டிட மெளனம் பழகு. நன்கு உண்மையாய்ப் பழகியிருந்தும் பின்னாளில் உண்மையை மறைத்துப் பொய்யாகப் பேசுபவரிடம் ஏனென்று கேட்காமல் இருக்க மெளனம் பழகு. அன்பை விதைத்திட மெளனம் பழகு அன்பைப் பெற்றிட மெளனம் பழகு அகிம்சையை வளர்த்திட மெளனம் பழகு. 😊 #😎வரலாற்றில் இன்று📰 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்