ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.7K views
3 months ago
சிவமணியம் கேள்வி: சூட்சும சரீரம்னா என்ன? பகவான்: கனவிலே உங்களுக்கு உடம்பு இருக்கா? இந்த உடம்பிலே இருந்து அது வேறதானே? அதுதான் சூட்சும சரீரம். கேள்வி: இறந்த பிறகு சூட்சும சரீரம் இருக்குமா? செத்த பிறகு என்ன ஆவோம்? பகவான்: கனவிலே பல அனுபவங்களை அனுபவிச்சு விழிச்சுக்கற மாதிரிதான், பிறப்பு இறப்பு எல்லாம். கேள்வி: இறந்த பிறகு சூட்சும சரீரம் நாப்பது வருஷம் இருக்குங்க றாங்களே? பகவான்: இந்த நனவுடல்லே இருந்து கனவு உடலை சூட்சுமம்கறோம். கனவு உடல்லே இருக்கும்போது அப்படிச் சொல்லலே. இப்போ சூட்சுமம்ன்னு சொல்றது அப்போ ஸ்தூலமா இருந்தது. அங்கேயிருந்து பாக்கும்போது இது சூட்சுமம். இரண்டுக்கும் வித்தியாசம் ஒண்ணும் இல்லை. இரண்டும் பொய். அங்கங்கே அது அது உண்மைன்னா... தூங்கும்போது இந்த இரண்டு உடம்பும் இல்லை. எப்பவும் மாறாம மூணு நிலையிலேயும் இருக்கறது ஒண்ணுதான். நாமதான் அது. கேள்வி: மதங்கள் ஏன் கடவுள், சொர்க்கம், நரகம் இதப்பத்தியே பேசுது? பகவான்: உலகத்தைமாதிரி நாமும் பொய்த் தோற்றம்தான்... இருக்கறது உள்ள பொருள் ஒண்ணுதான்னு ஜனங்களுக்குப் புரியவைக்கறதுக்குத்தான். மதங்கள் கேக்கறவனோட பக்குவத்துக்கு ஏத்த மாதிரிதான். பகவத் கீதையையே எடுத்துப்போமே... அர்ஜுனன் சண்டை போட மறுக்கறான். என்னோட சொந்த சகோதராளையும்... வித்தை சொல்லிக்கொடுத்த குருவையுமா கொஞ்சம் இடத்துக்காக கொல்லச் சொல்றே... முடியாதுங்கறான். அப்போ கிருஷ்ணர் சொன்னார். "நீ பாக்கற எல்லாமே... நீயோ, நானோ முன்னாடியும் இல்லை. இப்பவும் இல்லை. அப்புறமும் இல்லை. யாரும் பிறக்கலே, யாரும் இறக்கலே. இந்த உலகமும் இல்லை. நான் இதே உண்மையைத்தான் முதல்லே சூரியனுக்கு சொன்னேன். அவன் மூலமா இட்சுவாகுக்கு சொன்னேன்." அப்போ அர்ஜுனன் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினான். இரு, நீ இப்போ கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடிதானே பிறந்தே. நீ சொல்ற ஆளுகளெல்லாம் எப்பவோ இருந்தவா. என்ன கதை விடறே'ன்னான். கிருஷ்ணர் அர்ஜுனனாலே, புரிஞ்சுக்க முடியலேன்னு நிலைமையை உணர்ந்து "ஆமா, உனக்கும் எனக்கும் இதுக்கு முன்னாடி ஏகப்பட்ட பிறப்பு இருந்தது. அதெல்லாம் எனக்குத் தெரியும். உனக்குத் தெரியாது" ன்னார். இப்போ இந்த இரண்டு செய்தியும், அதாவது முதல்லே, 'யாரும் பிறக்கலே இறக்கலே'ன்னார். அடுத்து, 'ஏகப்பட்ட தடவை பிறந்தோம்'கறார். எது உண்மை? இரண்டும் சரிதான். வேறு வேறு பக்குவத்துக்கு. இப்படி ஏன் சொல்றா? நாம யாருங்கற உண்மையிலே நிலை பெறுவதற்குதான். கேள்வி: எப்பவும் நீங்க கீழ இறங்கவே மாட்டேங்கறீங்க. மேலான உண்மைய மட்டுமே பேசறீங்க! பகவான்: (சிரித்துக்கொண்டே) எல்லோருக்கும் எப்பவும் தினசரி நடைமுறையிலே இருக்கற சர்வசாதாரணமான எளிய உண்மையை உடைச்சுப் பேசினா... இப்படிச் சொல்றேள். நம்மளப் பத்தின உண்மையைத்தானே பேசறோம். 'நான் இருக்கேன்'கற உணர்வு இல்லாத ஆள் யாராவது இருக்காளா? அதைப்பத்தி கேக்கவே யாரும் பிரியப்பட மாட்டேங்கறா. அதை விட்டுட்டு சொர்க்கம், நரகம், செத்த பிறகு எப்படி இருப்போம். இதிலேதான் ஆர்வம் இருக்கு. அவா விரும்பறது எல்லாம் வித்தியாசமா, புரியாததா ஏதாவது வேணும். சர்வசாதாரணமான எந்த மறைப்பும் இல்லாத உண்மையை விரும்பறது இல்லை. இதுக்காகத்தான் மதங்கள் கதைவிடறது. வழிக்குக் கொண்டு வரணுமில்லையா! அங்கேயும் இங்கேயும் அலைஞ்சு திரும்பவும் எப்பவும் இருக்கற ... இந்த 'நான்'கற எளிய உண்மைக்குத்தான் வரணும். அத இப்போவே! இங்கேயே! ஏன் இந்த எளிய உண்மையிலே நிலைபெறக் கூடாது? கைலாசம், வைகுண்டம், சொர்க்கம், நரகம் எந்த லோகமாயிருந்தாலும் அதைப் பாக்கறதுக்கு ஒருத்தன் வேணும். பாக்கறவனோட உண்மைதான்... அந்தந்த லோகங்களோட உண்மை. பாக்கறவன் இல்லாம எந்த லோகமும் இல்லே. எந்த லோகமும் நம்மளத் தவிர வேறயா இருக்காது. உண்மை தெரியாத ஒருத்தன் கூட உலகத்தைப் பாக்கும்போது அவனையேதான் பாக்கறான். காண்பான் காட்சியா பிரிஞ்சு நடக்கற இந்தக் கூத்தே நாமதான். இங்கே ஏகப்பட்ட ஜீவர்கள் இல்லை. இருக்கறது நாம மட்டும்தான். எல்லோரும்கறதே பெரிய பொய். இருக்கறதுதான் ஒரே உண்மை. பக்கம்: 151 - 154 அப்பனேஅருணாசலம். 🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #மண்ணில் வாழ்ந்த மகான்கள்