ரவிசங்கர் ராஜா, ஆரணி
1.7K views
4 months ago
உ சிவ கீதை                        அத்தியாயம் 5                     ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ 😂சனாதன தர்மத்தின் முதல் குரு வியாசர் முனிவர் பாதம் பணிந்து 🙏🙏🙏 👉நேற்றைய பதிவில்  ஸ்ரீ ராமபிரான் சிவனாரின் திருவடியை  சரணம் அடைகிறார்... ⚜ஈசனிடம் மனம் உருகி அழுதால் எதையும் நாம் பெறலாம் என்பதற்காக மாணிக்கவாசகர் அருளிய திருவாசக பாடலை உதாரனமாக கூறுகிறேன்.. அழுதால் பெறலாம் அவன் அன்பை...🙏🙏🙏 “யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” திருவாசகம் ⚜⚜⚜⚜⚜⚜ 💋யானே பொய் – எனது இந்த உடல் பொய்! அழிந்து போக கூடியது! என்டா, இந்த உடம்புக்கு போய் ‘மெய்’ என்று பெயர் வைத்தது!? ⚜என் நெஞ்சும் பொய் – என் நெஞ்சில், வஞ்சம், பொய், பொறாமை, கோபம், லோபம், மூடம், மதம், ஆங்காரம் இன்னும் இது போன்ற எல்லா துர்குணங்களும் நிரம்பி வழிகிறது என் நெஞ்சமும் பொய்தானே! என் அன்பும் பொய் """"""""""""""""""""""""""""""""""""” 🐦‍🔥நான் என் தாய், தந்தை என் மனைவி என் பிள்ளைகள் என் சகோதர சகோதரிகள் என் உறவினர் என் வீடு என் என் என்னுடையது என்றே திரிகிறேன். என் சாமி என இறைவனையும் ஆக்கி கொண்டேன். இப்படி இருந்தால் என்னிடம் என்ன இருக்கும் பொய், பித்தலாட்டம் ஏமாற்று தான் மிஞ்சும்! ஆக இதெல்லாம் பொய்யாய் இருக்க காரணம் அடியேன் முற்பிறவிகளில் செய்த வினைகள்தான்?! இதுவே வேதங்கள் கூறும் உண்மை! ஞானிகள் உணர்ந்த சத்தியம்! இப்படி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வாழும் நாமும் “அழுதால் பெறலாம் அவனருளை” எப்படி? ❤️நாம் செய்த பாவத்தை நினைத்து அழு! இனி பாவம் செய்யாதிரு! நீ யாருக்கும் கெடுதல் செய்யாதே! உன் பெற்றோர் குறிப்பாக தாய் பத்து மாதம் உன்னை சுமந்து பட்ட துன்பத்தை பின் ஒவ்வொரு நாளும் வளர்க்கபட்ட துன்பத்தை நினைத்து அழு! உன் உயிருள்ளவரை மாத பிதாவை வணங்கி போற்றி வாழ வைத்து வாழு! என் போன்று எல்லாவற்றையும் படைத்தானே யாரோ ஒருவன் யாரோ ஒருத்தி இல்லை ஏதோ ஒரு சக்தி அதை காண வேண்டுமென்று அழு! நன்றாக அழு! குமுறி குமுறி அழு! பைத்தியாகாரன் என்பர் உலகர்! பொருட்படுத்தாதே! நீ மட்டும் அழுவதை நிறுத்தாதே! இதெல்லாம் நீ உருப்பெற வழிகாட்டும்! உண்மை உணர வழிகாட்டும்! சோகத்தில் – இழப்பில் – நட்டத்தில் அழுவது மன ஆறுதல் மட்டுமே தரும்! ⚜மாணிக்கவாசகர், வள்ளலார் மற்றும் உலகத்தில் உள்ள எல்லா ஞானிகளும், சித்தர்களும் அழுதால் பெறலாம் இறைவன் அருளை என அழுத்தம்திருத்தமாக கூறியிருக்கின்றனர். “அழுதால் உன்னை பெறலாமே”  ...!!என்றார் மாணிக்கவாச்கர். “ நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே” என்றார் வள்ளலார் ஒரு சித்தர் அவர் பெயர் அழுகண்ணி சித்தர் என்றனர்! அவர் எப்பொழுதும் அழுது கொண்டேயிருப்பாராம் அதனால் எல்லாரும் அழுகண்ணி சித்தர் என்றனர். “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” என்றார் திருஞானசம்பந்தர்!🙏🙏 🐦‍🔥இப்படி இன்னும் பல ஞானியர் இறைவனை அடைவதற்காக அழத்தான் சொன்னார்கள்! ⚜இறைவன் திருவடிகளே நமது கண்கள் என குரு மூலம் அறிந்து உணர்ந்து இருந்தாலே கண்ணீர் பெருகி வழியும்! இப்படியே அழுது அழுது உங்கள் பாவங்கள் கரையும் வரை இறை ஒளி காணும் வரை அழுது கொண்டேயிருங்கள்! எந்த தாயாவது பிள்ளை அழுவதை பார்த்து கொண்டு சும்மா இருப்பாளா? ஒடோடி வர மாட்டாளா? ஆம், வருவாள் தாய்! அமுதம் தருவாள்! ஏதுமறியா மூன்று வய்து குழந்தை அழுததை கண்டு ஒடோடி வந்து பால் கொடுத்தாளே பார்வதி!! அந்த ஞானகுழந்தை திருஞானசம்பந்தனை போல, திருவருட்பிர்காச வள்ளலாருக்கு 9 வயதில் பசியால் அயர்ந்து தூங்கிய போது தட்டி எழுப்பி அன்னம் கொடுத்து அருள் புரிந்தாலே தாய்!! அந்தத் தாய் – வாலைத்தாய் – அழும் குழந்தை எல்லாருக்கும் அமுதம் தருவாள்! சத்தியம்! ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ 🌹அப்போது சிவ பிரான் தனது காளை வாகனத்தின் மீது உமாதேவி அருகிருக்க காட்சி தருகிறார். அவரைச்   சுற்றி ப்ரம்மா, மஹாவிஷ்ணு, ருத்ரன், விநாயகர், முருகர், போன்ற தெய்வங்கள், தத்தமது சக்திகளுடன் காட்சி தருகின்றனர். 🐦‍🔥பரவசம் அடைந்த ராமர், சிவனாரின் பாதம் பணிய, அவர்  பொன்னால் ஆன தேரில் ராமரை ஏற்றி தன்னுடன் வைத்துக் கொண்டு, மஹா பாசுபத அஸ்திரத்தை வழங்கி, அதனை பயன் படுத்தும் முறையையும் கற்பிக்கிறார்.  அந்த அஸ்திரம் பிரளயத்தை தோற்றுவிக்க கூடியது  என்பதால் மற்ற முறைகள் பயனற்றுப்போய் விட்ட நிலையில் கடைசியாக பயன் படுத்த அறிவுரை கூறுகிறார். ❤️அனைத்து உயிர்களையும் படைத்து அருளும் தானே, அனைத்தையும் அழிக்க வல்லவர் என்பதைக் கூறி, ராவணனின் இறுதி காலம் நெருங்கி விட்டதால், ராமர் அவனை அழிப்பது திண்ணம் என்றும் , தேவர்கள் கிஷ்கிந்தை  எனும் இடத்தில் குரங்குகளாகப் பிறவி எடுத்து காத்திருப்பதாகவும், அவர்கள் துணை கொண்டு, இலங்கைக்கு பாலம் கட்டி, சீதா பிராட்டியை மீட்டு எடுக்க வரம் தந்து,  சிவன் மறைகிறார். 💋எனி நாம் அறிந்து கொள்ளுவது ஈசன்  ஸ்ரீ ராமபிரானுக்கு கூறும் உபதேசம்...🙏🙏   ❤️சிவனாரின் தரிசனம் கிட்டப் பெற்ற ராமர், அவரிடம் இந்த பிரபஞ்சம் எவ்வாறு உண்டாயிற்று என்றும் தனி ஒருவராக உலகங்களையும் அதில் உள்ள ஜீவ ராசிகளையும்  எவ்வாறு படைத்து, காத்து,அழிக்க முடிகிறது என்று வினவினார், 🐦‍🔥அதற்கு சிவனார் பின் வருமாறு பதில் கூறுகிறார். 🐦‍🔥ஈரேழு பதினான்கு உலகங்கள், பஞ்ச பூதங்கள், மலைகள்,  கடல்கள், நிலப் பரப்புகள்;  தேவர்கள், அசுரர்கள், ரிஷிகள், முனிவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், கணங்கள், நாகர்கள்;  பறவைகள், விலங்குகள், மரங்கள், செடி கொடிகள்;  கடல் வாழ் மீனினங்கள்;  அசையும் பொருள்கள், அசையாப் பொருட்கள்;  இவை அனைத்தும் எனது அம்சங்கள் பொருந்தியவையே. 🐦‍🔥நான் இல்லாத எந்த ஒரு பொருளும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை.  நான்  ஒருவனே இந்தப் புவியில் நிலையானவன். மற்றைய அனைத்தும்  மாறுதலுக்கு உட்பட்டவையே.  நானே எட்டு திசைகள். நானே ஆகாசம் மற்றும் பூமி.  நானே காயத்ரி,  சாவித்ரி, சரஸ்வதி. நானே அனைத்து எழுத்து ஒலிகளும் உருவங்களும்.  மந்திரங்களின் சந்தஸ் நானே.  ( சந்தஸ் என்பது ஒலிகளின் இலக்கணம்.  எந்த எந்த மந்திரங்களை எந்த ஒலி  அளவைகளில்  கூற வேண்டும் என்பது.  காயத்ரி, உஷ்ணிக்,அனுஷ்டுப் என்பது போல ஏழு வகை.  தமிழில் மாத்திரை  அளவைகள் எனக் கூறலாம். ) 🐦‍🔥நானே அனைத்து மந்திரங்களின் உயிர் நாடி.  நான்கு வேதங்களும் நானே.  இதிகாஸங்கள். 🐦‍🔥புராணங்கள்,தோத்திரங்கள், மாத்ருகைகள் அனைத்தும் நானே.  ஒளியும் நானே; இருளும் நானே.  மனிதனின் ஐந்து பொறிகளும் அவற்றின் செயல்களும் நானே.  அவனது புத்தியும் ஞானமும் நானே. முதல் மூவர் எனப்படும் பிரம்மா, விஷ்ணு ருத்ரனும் நானே.  விநாயகனும் முருகனும் நானே. ஒன்பது  கோள்களும் என் வடிவே. 🐦‍🔥நானே ஓம் காரம்.  நான் என்னுடைய சொந்த விருப்பத்தால் படைக்கிறேன்,  என் ஆற்றலால் அனைத்து உயிர்களையும் காக்கின்றேன்.  தேவைப் படும்போது அவற்றை அழிப்பவனும் நானே.  சுருக்கமாகச் சொன்னால், ஆக்கல், அளித்தல், அழித்தல் , நீக்கல், மறைத்தல் என்ற ஐந்தொழில் புரிந்திடும் அம்பலவாணன் நான். என்னை அன்றி இவ்வுலகில் ஏதும் இல்லை.. ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ 🐦‍🔥அனைத்து உயிர்களும் என்னிடமிருந்து தோன்றுகின்றன.   இறுதியில் என்னிடமே ஒடுங்குகின்றன.  நான் அணுவிலும் சிறிதானவன்.  உன்னால் கற்பனை செய்ய முடிந்த மிகப் பெரிய பொருளுக்கும் பன் முறை பெரிய உருவினன்.( I am smaller than the smallest atom; larger than the largest thing on the universe) 🐦‍🔥நடப்பவை அனைத்துக்கும் நான் சாட்சி மட்டுமே.  எனக்குச் சமமானவர் யாரும் இல்லை.  காரணம் இன்றி இயங்குபவன்.  என்றும் இருப்பவன்.  சுத்த நிலையான ஆனந்தவடிவானவன். 🐦‍🔥என்னை அறிந்தவன் என் போன்றே பரப்பிரம்ம உருவை அடைகிறான. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏 🌹🌹 ஐயா சிவ சிவ அரகர அரகரா 🌹🌹 ☘☘ ஓம் சிவ சிவ ஓம் ☘☘ 🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏 🚩🕉🪷🙏🏻 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 #🙏🏼ஓம் நமசிவாய #சிவ கீதை #சிவபுராணம் #🕉ஓம் நமசிவாய 🕉 #🤔 ஆன்மீக சிந்தனைகள்