Failed to fetch language order
சிவபுராணம்
607 Posts • 1M views
உ சிவ கீதை                        அத்தியாயம் 5                     ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ 😂சனாதன தர்மத்தின் முதல் குரு வியாசர் முனிவர் பாதம் பணிந்து 🙏🙏🙏 👉நேற்றைய பதிவில்  ஸ்ரீ ராமபிரான் சிவனாரின் திருவடியை  சரணம் அடைகிறார்... ⚜ஈசனிடம் மனம் உருகி அழுதால் எதையும் நாம் பெறலாம் என்பதற்காக மாணிக்கவாசகர் அருளிய திருவாசக பாடலை உதாரனமாக கூறுகிறேன்.. அழுதால் பெறலாம் அவன் அன்பை...🙏🙏🙏 “யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” திருவாசகம் ⚜⚜⚜⚜⚜⚜ 💋யானே பொய் – எனது இந்த உடல் பொய்! அழிந்து போக கூடியது! என்டா, இந்த உடம்புக்கு போய் ‘மெய்’ என்று பெயர் வைத்தது!? ⚜என் நெஞ்சும் பொய் – என் நெஞ்சில், வஞ்சம், பொய், பொறாமை, கோபம், லோபம், மூடம், மதம், ஆங்காரம் இன்னும் இது போன்ற எல்லா துர்குணங்களும் நிரம்பி வழிகிறது என் நெஞ்சமும் பொய்தானே! என் அன்பும் பொய் """"""""""""""""""""""""""""""""""""” 🐦‍🔥நான் என் தாய், தந்தை என் மனைவி என் பிள்ளைகள் என் சகோதர சகோதரிகள் என் உறவினர் என் வீடு என் என் என்னுடையது என்றே திரிகிறேன். என் சாமி என இறைவனையும் ஆக்கி கொண்டேன். இப்படி இருந்தால் என்னிடம் என்ன இருக்கும் பொய், பித்தலாட்டம் ஏமாற்று தான் மிஞ்சும்! ஆக இதெல்லாம் பொய்யாய் இருக்க காரணம் அடியேன் முற்பிறவிகளில் செய்த வினைகள்தான்?! இதுவே வேதங்கள் கூறும் உண்மை! ஞானிகள் உணர்ந்த சத்தியம்! இப்படி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வாழும் நாமும் “அழுதால் பெறலாம் அவனருளை” எப்படி? ❤️நாம் செய்த பாவத்தை நினைத்து அழு! இனி பாவம் செய்யாதிரு! நீ யாருக்கும் கெடுதல் செய்யாதே! உன் பெற்றோர் குறிப்பாக தாய் பத்து மாதம் உன்னை சுமந்து பட்ட துன்பத்தை பின் ஒவ்வொரு நாளும் வளர்க்கபட்ட துன்பத்தை நினைத்து அழு! உன் உயிருள்ளவரை மாத பிதாவை வணங்கி போற்றி வாழ வைத்து வாழு! என் போன்று எல்லாவற்றையும் படைத்தானே யாரோ ஒருவன் யாரோ ஒருத்தி இல்லை ஏதோ ஒரு சக்தி அதை காண வேண்டுமென்று அழு! நன்றாக அழு! குமுறி குமுறி அழு! பைத்தியாகாரன் என்பர் உலகர்! பொருட்படுத்தாதே! நீ மட்டும் அழுவதை நிறுத்தாதே! இதெல்லாம் நீ உருப்பெற வழிகாட்டும்! உண்மை உணர வழிகாட்டும்! சோகத்தில் – இழப்பில் – நட்டத்தில் அழுவது மன ஆறுதல் மட்டுமே தரும்! ⚜மாணிக்கவாசகர், வள்ளலார் மற்றும் உலகத்தில் உள்ள எல்லா ஞானிகளும், சித்தர்களும் அழுதால் பெறலாம் இறைவன் அருளை என அழுத்தம்திருத்தமாக கூறியிருக்கின்றனர். “அழுதால் உன்னை பெறலாமே”  ...!!என்றார் மாணிக்கவாச்கர். “ நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே” என்றார் வள்ளலார் ஒரு சித்தர் அவர் பெயர் அழுகண்ணி சித்தர் என்றனர்! அவர் எப்பொழுதும் அழுது கொண்டேயிருப்பாராம் அதனால் எல்லாரும் அழுகண்ணி சித்தர் என்றனர். “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” என்றார் திருஞானசம்பந்தர்!🙏🙏 🐦‍🔥இப்படி இன்னும் பல ஞானியர் இறைவனை அடைவதற்காக அழத்தான் சொன்னார்கள்! ⚜இறைவன் திருவடிகளே நமது கண்கள் என குரு மூலம் அறிந்து உணர்ந்து இருந்தாலே கண்ணீர் பெருகி வழியும்! இப்படியே அழுது அழுது உங்கள் பாவங்கள் கரையும் வரை இறை ஒளி காணும் வரை அழுது கொண்டேயிருங்கள்! எந்த தாயாவது பிள்ளை அழுவதை பார்த்து கொண்டு சும்மா இருப்பாளா? ஒடோடி வர மாட்டாளா? ஆம், வருவாள் தாய்! அமுதம் தருவாள்! ஏதுமறியா மூன்று வய்து குழந்தை அழுததை கண்டு ஒடோடி வந்து பால் கொடுத்தாளே பார்வதி!! அந்த ஞானகுழந்தை திருஞானசம்பந்தனை போல, திருவருட்பிர்காச வள்ளலாருக்கு 9 வயதில் பசியால் அயர்ந்து தூங்கிய போது தட்டி எழுப்பி அன்னம் கொடுத்து அருள் புரிந்தாலே தாய்!! அந்தத் தாய் – வாலைத்தாய் – அழும் குழந்தை எல்லாருக்கும் அமுதம் தருவாள்! சத்தியம்! ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ 🌹அப்போது சிவ பிரான் தனது காளை வாகனத்தின் மீது உமாதேவி அருகிருக்க காட்சி தருகிறார். அவரைச்   சுற்றி ப்ரம்மா, மஹாவிஷ்ணு, ருத்ரன், விநாயகர், முருகர், போன்ற தெய்வங்கள், தத்தமது சக்திகளுடன் காட்சி தருகின்றனர். 🐦‍🔥பரவசம் அடைந்த ராமர், சிவனாரின் பாதம் பணிய, அவர்  பொன்னால் ஆன தேரில் ராமரை ஏற்றி தன்னுடன் வைத்துக் கொண்டு, மஹா பாசுபத அஸ்திரத்தை வழங்கி, அதனை பயன் படுத்தும் முறையையும் கற்பிக்கிறார்.  அந்த அஸ்திரம் பிரளயத்தை தோற்றுவிக்க கூடியது  என்பதால் மற்ற முறைகள் பயனற்றுப்போய் விட்ட நிலையில் கடைசியாக பயன் படுத்த அறிவுரை கூறுகிறார். ❤️அனைத்து உயிர்களையும் படைத்து அருளும் தானே, அனைத்தையும் அழிக்க வல்லவர் என்பதைக் கூறி, ராவணனின் இறுதி காலம் நெருங்கி விட்டதால், ராமர் அவனை அழிப்பது திண்ணம் என்றும் , தேவர்கள் கிஷ்கிந்தை  எனும் இடத்தில் குரங்குகளாகப் பிறவி எடுத்து காத்திருப்பதாகவும், அவர்கள் துணை கொண்டு, இலங்கைக்கு பாலம் கட்டி, சீதா பிராட்டியை மீட்டு எடுக்க வரம் தந்து,  சிவன் மறைகிறார். 💋எனி நாம் அறிந்து கொள்ளுவது ஈசன்  ஸ்ரீ ராமபிரானுக்கு கூறும் உபதேசம்...🙏🙏   ❤️சிவனாரின் தரிசனம் கிட்டப் பெற்ற ராமர், அவரிடம் இந்த பிரபஞ்சம் எவ்வாறு உண்டாயிற்று என்றும் தனி ஒருவராக உலகங்களையும் அதில் உள்ள ஜீவ ராசிகளையும்  எவ்வாறு படைத்து, காத்து,அழிக்க முடிகிறது என்று வினவினார், 🐦‍🔥அதற்கு சிவனார் பின் வருமாறு பதில் கூறுகிறார். 🐦‍🔥ஈரேழு பதினான்கு உலகங்கள், பஞ்ச பூதங்கள், மலைகள்,  கடல்கள், நிலப் பரப்புகள்;  தேவர்கள், அசுரர்கள், ரிஷிகள், முனிவர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், கணங்கள், நாகர்கள்;  பறவைகள், விலங்குகள், மரங்கள், செடி கொடிகள்;  கடல் வாழ் மீனினங்கள்;  அசையும் பொருள்கள், அசையாப் பொருட்கள்;  இவை அனைத்தும் எனது அம்சங்கள் பொருந்தியவையே. 🐦‍🔥நான் இல்லாத எந்த ஒரு பொருளும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை.  நான்  ஒருவனே இந்தப் புவியில் நிலையானவன். மற்றைய அனைத்தும்  மாறுதலுக்கு உட்பட்டவையே.  நானே எட்டு திசைகள். நானே ஆகாசம் மற்றும் பூமி.  நானே காயத்ரி,  சாவித்ரி, சரஸ்வதி. நானே அனைத்து எழுத்து ஒலிகளும் உருவங்களும்.  மந்திரங்களின் சந்தஸ் நானே.  ( சந்தஸ் என்பது ஒலிகளின் இலக்கணம்.  எந்த எந்த மந்திரங்களை எந்த ஒலி  அளவைகளில்  கூற வேண்டும் என்பது.  காயத்ரி, உஷ்ணிக்,அனுஷ்டுப் என்பது போல ஏழு வகை.  தமிழில் மாத்திரை  அளவைகள் எனக் கூறலாம். ) 🐦‍🔥நானே அனைத்து மந்திரங்களின் உயிர் நாடி.  நான்கு வேதங்களும் நானே.  இதிகாஸங்கள். 🐦‍🔥புராணங்கள்,தோத்திரங்கள், மாத்ருகைகள் அனைத்தும் நானே.  ஒளியும் நானே; இருளும் நானே.  மனிதனின் ஐந்து பொறிகளும் அவற்றின் செயல்களும் நானே.  அவனது புத்தியும் ஞானமும் நானே. முதல் மூவர் எனப்படும் பிரம்மா, விஷ்ணு ருத்ரனும் நானே.  விநாயகனும் முருகனும் நானே. ஒன்பது  கோள்களும் என் வடிவே. 🐦‍🔥நானே ஓம் காரம்.  நான் என்னுடைய சொந்த விருப்பத்தால் படைக்கிறேன்,  என் ஆற்றலால் அனைத்து உயிர்களையும் காக்கின்றேன்.  தேவைப் படும்போது அவற்றை அழிப்பவனும் நானே.  சுருக்கமாகச் சொன்னால், ஆக்கல், அளித்தல், அழித்தல் , நீக்கல், மறைத்தல் என்ற ஐந்தொழில் புரிந்திடும் அம்பலவாணன் நான். என்னை அன்றி இவ்வுலகில் ஏதும் இல்லை.. ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ 🐦‍🔥அனைத்து உயிர்களும் என்னிடமிருந்து தோன்றுகின்றன.   இறுதியில் என்னிடமே ஒடுங்குகின்றன.  நான் அணுவிலும் சிறிதானவன்.  உன்னால் கற்பனை செய்ய முடிந்த மிகப் பெரிய பொருளுக்கும் பன் முறை பெரிய உருவினன்.( I am smaller than the smallest atom; larger than the largest thing on the universe) 🐦‍🔥நடப்பவை அனைத்துக்கும் நான் சாட்சி மட்டுமே.  எனக்குச் சமமானவர் யாரும் இல்லை.  காரணம் இன்றி இயங்குபவன்.  என்றும் இருப்பவன்.  சுத்த நிலையான ஆனந்தவடிவானவன். 🐦‍🔥என்னை அறிந்தவன் என் போன்றே பரப்பிரம்ம உருவை அடைகிறான. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏 🌹🌹 ஐயா சிவ சிவ அரகர அரகரா 🌹🌹 ☘☘ ஓம் சிவ சிவ ஓம் ☘☘ 🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏 🚩🕉🪷🙏🏻 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 #🙏🏼ஓம் நமசிவாய #சிவ கீதை #சிவபுராணம் #🕉ஓம் நமசிவாய 🕉 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
16 likes
9 shares
உ சிவ கீதை                  அத்தியாயம் -6                 ⚜⚜⚜⚜⚜⚜⚜ 🙏🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏 சனாதன தர்மத்தின் முதல் குரு வியாசர் முனிவர் பாதம் பணிந்து 🙏🙏🙏 நேற்றைய பதிவில் முடிவில் சிவனார் என்னை அறிந்தவன் என் போன்றே பரப்பிரம்ம உருவை அடைகிறான் என்று சிவனார் ராமபெருமானிடம் உபதேசம் செய்வார்... ஈசனை நாம் அடைவதற்கு நம் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று திருஞான சம்பந்தர் தன் பதிகத்தில் தேவாரப் பதிகம் """""""""""""""""""""""""""""""" காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே.என்று பாடுவார்.. ❤️உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் “நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தாகும்.... என்று இறைவன் திருநாமமே மிகவும் சிறந்தது என்று அறிவுறுத்துகின்றார்.. அது மற்றும் இல்லாமல் மேலும் தன் பதிகத்தில் 🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥 🐦‍🔥போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் பாதம் தான்முடி நேடிய பண்பராய் யாதும் காண்பரிதாகி அலந்தவர் ஓதும் நாமம் நமச்சிவாயவே.என்று ஈசனை நோக்கி பாடுகிறார்... பாடலின் பொருள் என்னவென்றால் 🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥 🌹தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயன்று காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது “நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தேயாகும். என்று இறைவன் திருநாமமே பக்திக்கு உயர்ந்தது என்று உங்களுக்கு ஞாபகப் படுத்திவிட்டு சிவ கீதையை தொடருகிறேன்... 🐦‍🔥பின் ராம் பெருமானுக்கு சிவனார் கொடுத்த நீண்ட விளக்கங்களைக் கேட்ட, ராமர், “நீங்களோ சாதாரணமான உருவோடு உள்ளீர். அப்படி இருக்க அனைத்து ஜீவராசிகளும் உங்களுக்குள் அடங்கி உள்ளன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  தயவு செய்து விளக்குங்கள்” என்று கோருகிறார். 🐦‍🔥“பரந்து விரிந்த ஆலமரம் ஒரு சிறிய விதைக்குள் அடங்குவது போல், அனைத்து உயிர்களும் என்னுள்ளே அடங்கும்.  அவை என்னில் இருந்தே உண்டாகும்; என்னுள்ளே மீண்டும் அடங்கும்.”  என்று சிவனார் பதில் சொன்னபோதும்  ராமருக்கு ஐயம் விலகவில்லை. 🐦‍🔥எனவே, பரமனார் ராமருக்கு  தெய்வீகப் பார்வையை அளித்து தனது  விஸ்வரூப தரிசனத்தை காட்டுகிறார்.   🐦‍🔥 பரமனார் கூற்றின் படி அனைத்து உலகங்களும், தெய்வங்களும், தேவர்கள் அசுரர்கள், மானிடர், கந்தர்வர், சாரணர், நாகர், விலங்கினங்கள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள், செடிகொடிகள், காடுகள் மலைகள் அனைத்தும் அவரது விராட் ரூபத்தில் அடங்கி உள்ளதை பார்த்தார்.  இவ்வாறாக தெளிவடைந்த ராமர், ஈசனாரிடம், அவர் இந்தப் ப்ரபஞ்சத்தை  எவ்வாறு படைத்து, காத்து அழித்து வழி நடத்துகிறார் என்பதையும்,  ஆத்மா  எவ்வாறு பல பிறவிகள் எடுத்து இறுதியில் அவரிடம் லயம் அடைகிறது என்பதையும், முத்தி அடையும் பாதையையும் விளக்கிக் கூறும் படி வேண்டுகிறார். 🐦‍🔥இதற்கு மேல் சிவனார் கொடுக்கும் விளக்கங்கள்,  உயிர்களின் மேல் நோக்கு பாதையை விவரிக்கின்றன.  💋அடுத்த பதிவில் அறிந்து கொள்வோம்..... சிவ கீதை..... வளரும்..... 🌹🌹 ஐயா சிவ சிவ அரகர அரகரா 🌹🌹 ☘☘ ஓம் சிவ சிவ ☘☘ 🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏 🚩🕉🪷🙏🏻 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 #🙏🏼ஓம் நமசிவாய #சிவ கீதை #சிவபுராணம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉ஓம் நமசிவாய 🕉
18 likes
12 shares
திருவிளையாடல் புராணம் வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் பாகம்-6 மதுரையில் வெள்ளியம்பலம் அமைந்ததையும், வெள்ளியம்பலத்தில் மாணிக்க பீடம் ஏற்பட்டதையும், அதன்மீது இறைவனார் ஆடிய திருநடனம் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது. சிவனின் ஐந்து சபைகளுள் ஒன்றான வெள்ளியம்பலம் மதுரையில் ஏற்பட்ட வரலாற்றினை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் ஆறாவது படலம் ஆகும். திருமண விருந்துண்ண அழைத்தல் உலகத்தின் இறைவனான சுந்தர பாண்டியருக்கும், உமையம்மையாகிய தடாதகைக்கும் மதுரையம்பதியில் திருமணம் இனிது நிறைவேறியது. திருமணம் முடிந்தவுடன் திருமணத்திற்கு வந்திருந்த மன்னர்கள், தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட எல்லோரையும் விருந்துண்ண சுந்தர பாண்டிய‌னார் அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பினை ஏற்று எல்லோரும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி விருந்துண்ண வந்தனர். பதஞ்சலி, வியாக்கிரதபாதர் ஆகியோரின் வேண்டுதல் திருமண விருந்தில் பங்கேற்க வந்தவர்களுள் பதஞ்சலியும், வியாக்கிரதபாதரும் அடங்குவர். இவ்விருவரும் தில்லை பொன்னம்பலத்தில் உள்ள தில்லை அம்பலவாணரின் திருநடனத்தினைக் வழிபட்ட பின்பு உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். அம்மை, அப்பனின் திருமணத்திற்காக மதுரை வந்திருந்தவர்கள், இறைவனான சுந்தர பாண்டியரிடம் “எங்களின் தந்தையே. நாங்கள் பொன்னம்பலத்தில் தாங்கள் ஆடியருளும் திருநடனத்தை தரிசித்த பின்புதான் தினமும் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டுளோம்.” என்று கூறினர். வெள்ளியம்பலத் தோற்றம் முனிவர்கள் கூறியதைக் கேட்ட சுந்தர பாண்டியனார் “உலகம் என்ற மனிதனுக்கு அழகிய தில்லை இதயம் என்றால் மதுரை துவாத சாந்தத் தானம் ஆகும். ஆதலால் தில்லை பொன்னம்பலத்தில் நிகழ்த்திய திருநடனத்தை இம்மதுரைப்பதியில் யாம் செய்து காட்டுவோம்.” என்று கூறினார். அதனைக் கேட்ட முனிவர்கள் இருவரும் “கருணைக் கடலே உலகம் என்ற மனிதனுக்கான ஏனைய உறுப்புக்கள் யாவை?” என்று வினவினர். அதற்கு இறைவனாரும் “உலகனைத்தும் உருவமாகிய விராடபுருடன் என்னும் மனிதனுக்கு, செல்வம் நிறைந்த திருவாரூர் மூலஆதாரமாகும். திருவானைக்காவல் சுவாதிட்டானம் (மறைவிடம்) ஆகும். திருவண்ணாமலை மணிப்பூரகம் (நாபி) ஆகும். நீங்கள் வணங்கிவரும் தில்லை அநாகதம் (இதயம்) ஆகும். திருக்காளத்தி ஒப்பில்லாத கண்டம் (விசுத்தி) ஆகும். காசித்தலம் ஆஞ்ஞை (புருவ மத்தியம்) ஆகும். கயிலைமலை பிரமரந்திரம் (சுழிமுனையின் உச்சியாகிய இடம்) ஆகும். இம்மதுரையம்பதி துவாத சாந்தம் (உச்சிக்கு மேற் பன்னிரெண்டு அங்குல அளவில் உள்ள பாகம்) ஆகும்.” என்று கூறினார். பின் முனிவர்களோடு திருக்கோவிலினுள் சென்றார். அங்கே பொன்னாலாகிய விமானத்தின் கீழ்புறத்தில் வெள்ளியம்பலம் தோன்றியது. அதன்மேல் மாணிக்க பீடம் ஒன்று தோன்றியது. இறைவனாரின் திருநடனம் ஒளிவீசிக் கொண்டிருந்த வெள்ளியம்பல மாணிக்க பீடத்தின் மேல் பாரின் இருளை அகற்றும் ஒளிக்கதிர் போல் அடியர்களின் அஞ்ஞானமாகிய இருளை விரட்டும் பொருட்டு ஞானஒளியின் வடிவாய் சிவபெருமான் தோன்றினார். திருநந்தீஸ்வரர் மத்தளம் கொட்ட, திருமால் இடக்கை என்னும் இசைக்கருவியை வாசிக்க, தும்புரு, நாரதர் இருவரும் இசைப்பாட்டு பாடினர். கலைமகள் சுருதி கூட்ட, பிரம்மதேவர் யாழினை மீட்டி கீதங்கள் பாடினார். சிவகணங்கள் மொந்தை, தண்ணுமை என்னும் கருவிகளை முழங்கினர். இறைவனார் பெரிய விழிகளைக் கொண்ட முயலகன் மேல் அவன் விழிகள் பிதுங்குமாறு முதுகின் மேல் வலது காலினை ஊன்றி காட்சியளித்தார். இறைவனாரின் வலது மேற்கையில் உடுக்கையும், இடதுமேற்கையில் தீச்சுவாலையும் காணப்பட்டது. அவரின் வலகீழ்கை அடைக்கலம் தந்தவாறும், இடதுகீழ்க்கை குஞ்சித பாதத்தைக் காட்டியாவாறும் இருந்தன. அவரின் கூந்தல் மற்றும் ஆடைகள் காற்றில் அசைந்தவாறு இருந்தன. அழகிய கண்களைக் கொண்ட உமையம்மை ஒருபுறம் ஒதுங்கி நிற்க, அவ்வம்மையைப் பார்த்த வண்ணம் இதழ்களில் புன்னகையை ஏந்தி இறைவனார் திருநடனம் புரிந்தார். இறைவனாரின் திருநடனத்தினை காணுதல் சுந்தரபாண்டியனார் ஆடல்வல்லானாக வெள்ளியம்பலத்தில் ஆடிய நடனத்தைக் கண்ட முனிவர்களாகிய பதஞ்சலியும், வியாக்கிரதபாதரும் நெஞ்சுருகி நின்றனர். தங்களின் பிறவிப்பயனை அடைந்துவிட்டோம் என்று எண்ணினர். பதஞ்சலி, வியாக்கிரதபாதர் மட்டுமல்லாது திருமணத்திற்கு வருகை புரிந்த பிற முனிவர்கள், அரசர்கள், தேவர்கள், கந்தவர்கள், கிம்புருடர்கள், யோகிகள் உட்பட எல்லோரும் இறைவனாரின் திருக்கூத்தினை கண்டு களித்தனர். முனிவர்கள் ஆடல்வல்லானை நோக்கி “உலக இயக்கங்களுக்கு காரணமானவரே, தாங்களின் திருநடனத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து விட்டோம். அடியேன்களின் வேண்டுகோளினை ஏற்று வெள்ளியம்பலத்தில் தாங்கள் ஆடிய திருநடனத்திற்கு முதல் வணக்கம்” என்றனர் “ஊழிமுதல்வனே, உயிர்களின் பிறவிக்கடலினை தீர்ப்பவனே, அடியார்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைக்கும் எங்கள் தந்தையே உங்களுக்கு வணக்கம். இறைவனாரின் இடதுபாகத்தில் உறைந்திருக்கும் உமையம்மைக்கு வணக்கம்” என்று பலவாறு போற்றி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர். இறைவனின் திருஉள்ளம் இறைவனின் திருநடனத்தினைக் கண்டு மகிழ்ந்து போற்றிய பதஞ்சலி, வியாக்கிரதபாதர் ஆகியோர்களை நோக்கி இறைவனார் “நல்லது. நீங்கள் விரும்பியது யாது?” என்று வினவினார். அதனைக் கேட்ட இருவரும் “எங்களின் இறைவா. தாங்கள் இவ்வெள்ளியம்பலத்தினுள் எப்போதும் திருநடனத்தினை நிகழ்த்தி உயிர்களை மாயையிலிருந்து விடுபடச்செய்து அவைகளுக்கு நற்கதி அளிக்க வேண்டும்.” என்று வேண்டினர். அதற்கு இறைவனார் “செந்தமிழை வளர்த்து ஓங்கச் செய்யும் இப்பாண்டிய நாடு செய்த தவப்பயனின் காரணமாக நீங்கள் விரும்பிய வரத்தினை அளித்தோம்” என்று அருளினார். பதஞ்சலி முனிவர் இறைவனாரிடம் “முக்காலமும் ஆனவரே, ஆதியே, எம்பெருமான தங்களின் திருநடனத்தைக் நேரே கண்டு களித்த அனைவருக்கும் இப்பூமியில் மீண்டும் பிறவாத ஒப்பற்ற சிவகதியை அடைய அருள்புரிய வேண்டும்” என்று வேண்டினார். சிவபெருமானும் அதற்கு இசைந்து அருள்புரிந்தார். இதனைக் கேட்ட சிவகணத்தவர் சிவபெருமானை கொண்டாடி மகிழ்ந்தனர். முனிவர்கள் ஆனந்தம் அடைந்தனர். வெள்ளியம்பலத்தில் இறைவனின் திருநடனத்தை தரிச்சிப்பதன் பலன் மார்கழிமாத திருவாதிரை முதல் அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பொற்றாமரையில் நீராடி, வெள்ளியம்பலத் திருநடனத்தை தரிசனம்செய்து அங்கேயேதங்கி திருவைந்தெழுத்தை நூற்றுஎட்டுமுறை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் எண்ணிய வரங்களை எல்லாம் பெறலாம். இப்படலம் கூறும் கருத்து ஆடலும் பாடலுமாக நாம் வாழ்வை ஆனந்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இப்படலம் உணர்த்துகின்றது. உற்றார் உறவினருடன் கூடி நல்ல முறையில் வாழ்வை அனுபவிக்கத் தெரிய வேண்டும் என்பதை வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் சொல்கிறது. தொடரும் திருச்சிற்றம்பலம் 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #திருவிளையாடல் புராணம் #சிவபுராணம் #திருவிளையாடல் #🕉ஓம் நமசிவாய 🕉
13 likes
9 shares
திருவிளையாடல் புராணம் தடாதகையாரின் திருமணப் படலம் பாகம்-5 தடாதகையாரின் திருமணப் படலம் அங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சிக்கு சொக்கநாதரான சோமசுந்தரருடன் நடந்த திருமணம் பற்றி விளக்கிக் கூறுகிறது. மீனாட்சியின் திக் விசயம், போர் வீரம், தடாதகை சிவபிரானிடம் கொண்ட காதல் ஆகியவற்றை இப்படலத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் ஐந்தாவது படலம் ஆகும். சோமசுந்தரர் அமைத்த இம்மையில் நன்மை தருவார் ஆலயம் ஏற்பட்ட விதம், இறைவனான சோமசுந்தரர் பாண்டிய நாட்டை ஆண்ட விதம் ஆகியவற்றையும் இப்படலம் குறிப்பிடுகிறது. இனி உலகத்தின் அன்னையான தடாதகையாரின் திருமணப் படலம் பற்றிப் பார்ப்போம். காஞ்சன மாலையின் ஏக்கம் உலக நாயகியான அங்கயற்கண்ணி அம்மை வளர்ந்தும் இறைவனின் திருவாக்கின்படி பாண்டிய நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று நீதிவழியில் ஆட்சி செய்தார். தடாதகையின் அன்னையான காஞ்சன மாலை தன் மகளின் ஆட்சித்திறனைப் பார்த்து மெய்சிலிர்த்தாள். திருமண வயதை தன் மகள் எட்டியதை உணர்ந்த அத்தாய் தன் மகளிடம் “அழகும் அறிவும் உடைய உனக்கு திருமணம் இன்னும் கைகூடவில்லையே” என்று தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள். காஞ்சன மாலை கூறியதை கேட்ட தாடதகை “அன்னையே நீங்கள் எண்ணிய எண்ணம் நடக்கும்போதுதான் நடக்கும். அதனால் நீங்கள் வருத்தங்கொள்ள வேண்டாம். நான் எட்டு திசைகளிலும் சென்று இப்பூவுலகம் முழுவதும் என் வெற்றியை நாட்டி வருவேன். நீங்கள் இங்கேயே காத்திருங்கள்” என்று கூறி விரைந்து போருக்கு புறப்பட ஆயத்தமானார். மீனாட்சி அன்னையின் திக் விசயம் எட்டு திசைகளையும் வெல்லும் நோக்கில் தம் பெரும் படையினருடன் தடாதகை போருக்கு புறப்பட்டார். நால்வகைப் படையினரோடு அமைச்சர்களும், சிற்றரசர்களும் தடாதகையைப் பின் தொடர்ந்தனர். அவர் வடநாடு, கீழ்நாடு, மேல்நாடு என எல்லா திசைகளிலும் உள்ள நாடுகளில் தன்னுடைய வெற்றிக் கொடியை நாட்டினார். பின் இந்திரலோகத்தை அடைந்தபோது இந்திரன் போர்களம் வராமலேயே நீங்கினான். இந்திரலோகத்தை தனதாக்கியபின் அம்மையார் திருகையிலையை நோக்கிச் சென்றார். திருகையாலயத்தில் சிவபிரானை தடாதகை காணல் திருகையாலயத்தை மீனாட்சி அம்மையார் அடைந்த செய்தியை திருநந்திதேவர் இறைவனான சிவபெருமானிடம் தெரிவித்தார். சிவபெருமானும் தம் சிவகணங்களை அனுப்பி தடாதகையுடன் போரிடச் செய்தார். சிவகணங்களுடன் நடந்த போரில் தடாதகை எளிதில் வெற்றி வாகை சூடினார். தடாதகையின் வெற்றியை திருநந்திதேவர் கயிலைநாதனிடம் தெரிவித்தார். இதனைக் கேட்ட சிவபெருமான் பிநாக வில்லைக் கையில் ஏந்தி இடப வாகனத்தில் போர்களத்துக்கு எழுந்தருளினார். இறைபரம்பொருளை நேரில் கண்டதும் தடாதகையின் தனங்களில் ஒன்று மறைந்தது. உடனே அவர் தன்னுடைய நினைவு வரப்பெற்றவராய் இறைவனின்பால் அன்பு மிகுந்து வெட்கத்தில் தலைகுனிந்தார். இக்காட்சியினை கண்ட அமைச்சர் சுமதிக்கு தடாதகை பற்றிய இறைவனின் திருவாக்கு நினைவுக்கு வந்தது. உடனே அவர் அங்கையற்கண்ணியிடம் “அம்மையே சிவபெருமானான இப்பேரழகனே தங்களின் மணவாளன்” என்று கூறினார். அதனைக் கேட்ட மீனாட்சி அம்மையார் பேரன்பு பெருக நின்றார். இறைவனார் தடாதகைக்கு அருளுதல் இறைவனார் “நீ திக்விசயத்தின்போது என்று புறப்பட்டாயோ அன்று முதல் யாமும் உம்மை தொடர்ந்து வந்தோம். உன்னை திங்கள்கிழமை அன்று நல்ல முகூர்த்தம் கூடிய பொழுதில் திருமணம் செய்ய வருவோம். நீ தற்போது உன் நகரமாகிய மதுரைக்கு செல்வாயாக” என்று திருவாய் மலர்ந்து அருளினார். இறைவனிடம் அன்பினையும், உயிரினையும் வைத்த அங்கயற்கண்ணம்மை தன் படைகளுடன் மதுரைக்குத் திரும்பினார். மீனாட்சி திருமணத்தை பற்றி அறிவித்தல் மதுரை திரும்பிய மீனாட்சி தன் அன்னையான காஞ்சன மாலையிடம் நடந்தவைகள் அனைத்தையும் கூறினார். இதனைக் கேட்டு மகிழ்ந்த காஞ்சன மாலை மீனாட்சியின் திருமணச் செய்தியை எல்லோருக்கும் தெரிவிக்கும்படி அமைச்சர்களிடம் கூறினார். மீனாட்சியின் திருமணம் பற்றி செய்தியானது யானையின் மீது அமர்ந்து மணமுரசு மூலம் பாண்டிய நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டு அரசர்களுக்கும் மீனாட்சி திருமணம் பற்றிய ஓலைகள் அனுப்பப்பட்டன. மீனாட்சியின் திருமணம் பற்றி அறிந்ததும் மக்கள் தங்கள் வீடுகளையும், நகரங்களையும் அலங்கரித்தனர். மீனாட்சியின் திருமணம் பற்றியே மதுரை மாநகர் முழுவதும் பேசப்பட்டது. திருமணத்திற்கான மண்டபம் பொன்னாலும், நவமணிகளாலும் உண்டாக்கப்பட்டது. திருமணத்திற்கு வருகை தருவோர் அமர இருக்கைகள் தயார் செய்யப்பட்டன. திருமணத்தை எல்லோரும் பார்த்து மகிழும் வண்ணம் திருமண மண்டபத்தின் நடுவில் மணமேடை அமைக்கபட்டு அலங்கரிக்கப்பட்டது. இறைவனார் மணமகனாக மதுரை நோக்கி புறப்படுதல் சிவபிரானின் திருமணச்செய்தியை அறிந்த தேவர்கள் அனைவரும் கையிலையை அடைந்து ‘அர அர’ என்று துதித்தனர். பின்னர் நந்திதேவரின் அனுமதியுடன் இறைவனை கண்டு வணங்கினர். குபேரன் இறைவனை அழகான மணமகனாக அலங்கரித்தார். குண்டோதரன் குடைபிடிக்க இறைவனார் இடப வாகனத்தில் ஏறி மதுரை நகரின் வெளியே எழுந்தருளினார். இறைவனை வரவேற்றல் இறைவனான சிவபெருமான் மதுரை நகரின் புறத்தே எழுந்தருளி இருப்பதை அறிந்த காஞ்சன மாலை பாண்டிய நாட்டு அமைச்சர்களுடன் சென்று அவரை வரவேற்றாள். காஞ்சன மாலை இறைவனாரிடம் “உலக இயக்கத்திற்கு காரணமானவரே, தாங்கள் தடாதகை பிராட்டியாரை மணம் செய்து பாண்டிய நாட்டை ஆள வேண்டும்” என்று விண்ணப்பித்தாள். இறைவனும் “அவ்வாறே ஆகுக” என்று காஞ்சன மாலைக்கு அருள்பாலித்தார். பின் மதுரைநகரில் அமைந்திருந்த திருமண மேடைக்கு இறைவன் எழுந்தருளினார். இறைவனின் அழகினைப் பார்த்த மதுரை மக்கள் சுந்தரனான இந்த ஈஸ்வரனே மீனாட்சியை மணம்புரிய வந்தான் என்று எண்ணினர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் உலக அன்னையான மீனாட்சிக்கு பெண்கள் அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்து வந்து மணமகனான சுந்தரேஸ்வரரின் அருகில் அமர்த்தினர். திருமால் மீனாட்சியை தாரை வார்த்து சொக்கருக்கு கொடுக்க மீனாட்சி சொக்கநாதர் திருமணம் இனிது நிறைவேறியது. பின்னர் இறைவன் காஞ்சன மாலைக்கு கொடுத்த வாக்கின்படி மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இன்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் இறைவனார் நடுவூர் என்னும் ஊரினை உருவாக்கினார். அதில் இன்மையிலும் நன்மை தருவார் என்னும் சிவாலயத்தை ஏற்படுத்தினார். பின் இம்மையிலும் நன்மை தருவாரை வழிபாடு நடத்தினார். எல்லோருக்கும் நற்பேற்றினை வழங்கும் இறைவனனான சிவபெருமான் வழிபட்ட இடம் என்ற பெருமையை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலையே சாரும். இக்கோவில் தற்போது மதுரையின் நடுவே அமைந்துள்ளது. பின் சிவபிரானார் பாண்டிய நாட்டின் அரசனாக நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்தார். இப்படலம் கூறும் கருத்து இறைவனின் மீது கொண்ட பேரன்பானது அவரை சொந்தமாக்கும் என்பதை காஞ்சன மாலை மூலம் இப்படலம் விளக்குகிறது. தொடரும் திருச்சிற்றம்பலம் 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #திருவிளையாடல் #சிவபுராணம் #திருவிளையாடல் புராணம் #🕉ஓம் நமசிவாய 🕉
15 likes
11 shares