N Murugesan
661 views
1 months ago
நான் எழுதும் பல பதிவுகள் சனாதனம் பாஜகவுக்கு எதிராக இருப்பது போல், அரசியல் பதிவுகள் போன்றே இருப்பதாக தோன்றியது. உண்மையில் அப்படியல்ல; கொள்கையளவில் தான் என் பதிவுகள் எல்லாம். எது உண்மை, எது சரி என்று உரக்க கூறுவதில் தவறில்லை. ஆனாலும், ஒரு ஆன்மீகவாதி ஒரு சார்பாக இருப்பதும் தவறு. ஆகையால், மாறாக ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்த போது, இந்த பதிவு தோன்றியது!! 😄. ************************************************** நான் ஒரு முறை கபாலீஸ்வரர் கோவிலில் (இயர்ஃபோனுடன்) சமஸ்கிருத ஸ்தோத்திர பாடல் ஒன்று பாடிக் கொண்டிருந்த போது, அந்த ஸ்தோத்திரத்தில் "சனாதனாயா!" என்று சிவபெருமானை வர்ணிக்கும் வார்த்தை வந்தது. "சனாதனம்" என்ற சொல்லுக்கு "என்றும் அழியாத" என்று பொருள். "என்றும் அழியாத மதத்தை" உடையவனே என்று அர்த்தம். ஆகையால், "என்றும் அழியாத மதம் எது?" என்ற கேள்வி எழுந்தது. யாரோ "என்றும் அழியாத மதம், வேதங்கள் கூறும் "அத்வைதமே". ஆகையால் என்றும் அழியாத மதம் சனாதன தர்மம் மட்டுமே. ஆகையால், சித்தாந்தத்தை விட சனாதனமே உயர்ந்தது" என்று என் மனதில் தோன்றியது!! நான் உடனே "அதெப்படி? எதில் உண்மை இருக்கிறதோ அதுவே அழியாத பொருள். உண்மை சைவ சித்தாந்தத்தில் தான் உள்ளது. சைவ சித்தாந்தமே அழியாத பொருள். ஆகையால், "சனாதனாயா" என்ற சொல்லுக்கு "சைவ சித்தாந்தத்தை உடைய சிவபெருமானே" என்று தான் பொருள் என்று உறுதியாக கான்ஃபிடென்டாக கூறினேன்!! பிறகு அந்த ஆதி சங்கரர் ஸ்தோத்திரம் பாடும் போதெல்லாம் சைவ சித்தாந்தத்தை உடையவனே என்ற பொருளில் தான் பாடுவது வழக்கம்!! 😄 ஆனால் , இப்போது எனக்கே சந்தேகம் வந்து விட்டது!! இன்றைக்கு அத்வைதம் உலகெங்கும் செழித்து வளர்கிறது. சைவ சித்தாந்தமோ (என்னை பொறுத்தவரை) தமிழ் நாட்டிலே கூட தட்டு தடுமாறி வருகிறது; அழிந்து விடுமோ என்று எனக்கு தோன்றுகிறது. இன்றும் கூட என்னை பொறுத்தவரை சைவ சித்தாந்தமே உண்மை. அத்வைதம் தவறு பல உள்ளது. அப்படியானால் உண்மை பொருள் ஏன் அழிகிறது; பொய்யான மதம் ஏன் செழிக்கிறது?! 😄 ************************************************** ஒரு காரணம் எனக்கு தோன்றுகிறது. இதை இன்றைய அத்வைதின்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள்; ( உண்மையான அத்வைதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்!! ) ************************************************ சைவ சித்தாந்தத்திற்கும், அத்வைதத்திற்கும் உள்ள வேறுபாட்டை நான் இப்படி கூறுவேன். அத்வைதத்தின் மதிப்பை எண்கள் மூலம் கூறினால், 1000000 ஒன்று ஆறு சைபர் என்று வைத்துக் கொண்டால், சித்தாந்தம் ஒன்று பிறகு எத்தனை சைபர் என்றே தெரியாது!! அவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்பேன்!😄 இந்த முதலில் வரும் ஒன்று கடவுளை குறிக்கும். பிறகு வரும் சைபர் - தத்துவங்கள் - எத்தனை இருந்தாலும் முதலில் வரும் ஒன்று இருந்தால் தான் அவற்றிற்கெல்லாம் மதிப்பு. சைபர்களை உண்மை தத்துவம் என்று எடுத்துக் கொண்டால் அத்வைதத்தில் உண்மை குறைவு ஆகையால் ஆறு சைபர்; சித்தாந்தமோ அனைத்தும் உண்மை; ஆகையால் பல சைபர்கள்!! அந்த ஒன்று எங்கே இருக்கிறது என்பது தான் முக்கியம்!! இப்போது அந்த ஒன்றை எடுத்து, அதை கடைசியில் சைவர்களுக்கு பிறகு போட்டால், எத்தனை சைபர் இருந்தாலும் பலனில்லை!! பிறகு சைவமும் , அத்வைதமும் மதிப்பு "ஒன்று" தான்!! ************************************************** உலகில் உள்ள பல மதங்கள் இந்த "ஒன்று" இல்லாவிட்டாலும் (கடவுள் இல்லை என்ற நிலை வந்தாலும் அத்வைதம், பௌத்தம், ஜைனம்...) செழிக்கும்; ஆனால், சைவ சித்தாந்த சமயமோ முழுமையாக கடவுளை சிவபெருமானை ஆதாரமாக கொண்டது. சிவபெருமான் இல்லாவிட்டால் சைவ சித்தாந்தம் வெறும் பூஜ்யங்கள் மட்டுமே!! உலகில் உள்ள அனைத்து உண்மைகளும், என்றும் நிலைத்த உண்மையாகுவது சிவபெருமானால் மட்டுமே!! அவன் இல்லாவிட்டால் எதற்கும் நிலைத்த தன்மை கிடையாது. அப்படியானால் அத்வைதமும் அப்படித்தானே என்று கேட்டால், அத்வைதம் கடவுளையோ, பக்தியையோ நம்பி இல்லை!! பக்திதான் சைவ சித்தாந்தத்திற்கு ஆதாரம். ஆனால், அத்வைதத்தில் கடவுளோ, பக்தியோ தேவையில்லை!! சில சமயங்களில் உலகில் கடவுள் இல்லாமல் போகலாம் - புராணங்களில் வரும் அசுரர் ஆட்சி காலம் உதாரணம்!! அந்த சமயங்களில் கடவுளையே ஆதாரமாக கொண்ட மதங்கள் பாடு திண்டாட்டம் தான்!! ஆனால், கடவுளின் தேவையில்லாத மதங்களை இது பாதிக்காது!! ஆகையால், எந்த சமயத்திலும் உயிரோட்டமாக அழியாமல் இருக்கக் கூடியது அத்வைதம் தான்; சித்தாந்தம் கடவுள் இருந்தால் மட்டுமே செழிக்கும்!! 😄😂 ஆகையால், அத்வைதமே என்றும் உள்ள எக்காலத்திலும் அழியாத "சனாதன" தர்மம்; அது கடவுள் உலகில் இல்லாவிட்டாலும் செழிக்கும்; சித்தாந்தம் அப்படி அல்ல என்பது சரி தானே?!! 😄😂. **************************************************. கடவுளே எல்லாம்; கடவுளையே அனைத்திற்கும் ஆதாரமாக கொண்ட மதம் சைவ சித்தாந்தம் மட்டுமே என்பது சைவ சமயத்தின் பெருமை. ஆனால், அந்த கடவுள் இல்லாத காலத்தில் எல்லாம் வீணே என்பது உண்மை தான். ************************************************* ஆனால், உண்மையில் இது அத்வைதத்திற்கும் பொருந்தும். உண்மையான அத்வைதம் என்னவென்றால் அது கடவுள் இல்லை என்று கூறவில்லை; அது உருவத்தையும், அருவுருவத்தையும் மட்டுமே ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, அருவ கடவுளை ஏற்றுக் கொள்கிறது. பிரம்மமே அந்த அருவக் கடவுள். மேலும், "நீயே முக்தி நிலையில் அந்த பிரம்மம்" என்று கூறுகிறது!! ஆகையால், அங்கே இறைவனை வழிபடும் பக்தி கிடையாது!! அதில் பக்தி என்பது இறைவனை நினைத்து தியானிப்பது மட்டுமே!! தியானமே மார்க்கம் பக்தி அல்ல!! அதுவும் ஒரு வகையில் இறைவனை நம்பி தானே இருக்கிறது என்றால், அங்கே இறைவனை பிரார்த்தனை செய்வது, அதனால் பலன் பெறுவது என்று எதுவும் கிடையாது!! பக்தி, பிரார்த்தனை, சடங்கு எல்லாம் உருவக் கடவுளுக்கு மட்டுமே!! இதையே கிருஷ்ணரும் கீதையில் அர்ஜீனனுக்கு "உனக்கு பக்தி மார்க்கம் என்றால் அருவத்தை (god without form, unmanifested) வழிபடுவது இயலாத காரியம்; உருவத்தை கை கொள்" என்று அறிவுரை கூறினார்!! ஆகையால், அத்வைதத்தில் கடவுள் வந்து அருள் புரிவார்; கடவுள் கஷ்டத்தில் காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு கிடையாது!! கடவுள் இல்லாமல் உலகம் கடுமையானதே ; உலகம் பாழும் கிணறாக அல்லவா தோன்றுகிறது என்று கேட்டால், அப்படியானால் உலகை முற்றும் துறந்து விடு என்கிறது!!😄 ஆனால், சைவ சித்தாந்தம் இத்தகைய எதிர்பார்ப்பை (என்னை கேட்டால் "தவறாக") வலியுறுத்துகிறது !! சைவ சித்தாந்தத்தில் இறைவன் இருந்தால் தான் இந்த உலகம் உண்மையானது ("எடுத்த பொற்பாதம் காணப்பெற்றால் மட்டுமே எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்க தயார்" என்று அப்பர் கூறுகிறார்) *************************************************. அப்படியானால் அத்வைதம் உயர்ந்ததா என்றால் உண்மையில் அப்படியில்லை. சைவ சித்தாந்தம் உண்மையில் உருவ மதம் அல்ல!! அருவ மதமும் அல்ல!! சைவ சமயம் சிவபெருமானின் அருவுருவ நிலையை வழிபடுவது!! ஒரு சைவ சித்தாந்த பேச்சாளர் "கோவில்களில் இருப்பது "இலய" வடிவம்" என்றார்!! உண்மையில் சிதம்பர ரகசியம் தான் இலய வடிவம்!! நமது கோவில்களில் இருப்பது சிவபெருமானின் அருவுருவ வடிவம். ஆகையால் தான் சிவபெருமானை இலிங்க வடிவமாக வணங்குகிறோம்!! ஆனால், சித்தாந்தத்தின் உயிர்நாடியான அருவுருவ தத்துவ சிவபெருமானை வணங்குவதை விட்டு விட்டு (திருவண்ணாமலை அடிமுடி தெரியாத ஜோதி அருவுருவத்தையே குறிக்கிறது) ஆகம சைவ "ஏதோ உருவத்தை எல்லாம்" வணங்குவது இப்போது வழக்கமாகி விட்டது!! சிவபெருமானுக்கு அருவம், இலயம், அருவுருவம், உருவம் அனைத்தும் வழிபடக்கூடிய நிலைகளே!! ஆனால், சைவ சித்தாந்த கோட்பாட்டின் படி அருவுருவத்தையே கோவில்களில் வழிபாடு செய்வது சித்தாந்த மரபு. உருவங்களை வழிபடுவது வைணவ மரபு!! ஒரு காலத்தில் சைவத்திலேயே அனைத்தும் இருந்தது. அருவம் அத்வைதத்திற்கும், உருவ வழிபாடு வைணவமாகவும் பிரிந்து விட்டது!! சைவ சமயத்தில் கடவுள் அல்லாதவற்றை உருவமாக வழிபடுவது தவறாகவே முடியும்!! ************************************************** உண்மையில் சொல்லப்போனால் என் ஆன்மீக வாழ்க்கையில் மிகப் பெரும் பிராப்ளம் இதுவே!! என்னுடைய துன்பங்கள் அனைத்தும் இதனால் தான்!! என் ஆன்மீக வாழ்க்கையே அழிந்து வருகிறது என்று கூட கூறலாம்!! ஏனென்றால் நான் எந்த உருவ சிவனையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டேன்!! இந்த விஷயத்தில் நான் ஒரு அத்வைதி!! 😄😂 எந்த உருவக் கடவுளையும் ஏற்றுக் கொள்ள மறுப்பது என் கொள்கை! அருவத்தை (soul form invisible beings) வெறுப்பதே உண்மையான சைவம். இதனால் எல்லாருக்கும் self styled invisible shivas நான் எதிரியாகி விட்டேன்!! எந்த கோவிலில் அப்பாயிண்ட் செய்யப்பட்ட சிவனையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று உறுதியாக இருப்பதால் எல்லா "சிவனிடமிருந்தும்" எனக்கு பிராப்ளம்!! **************************************************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம