#sathaana unavu. நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உங்களை நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர வைக்கும். மேலும், சப்பாத்தியில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
சப்பாத்தியின் நன்மைகள்:
செரிமானத்திற்கு நல்லது:
சப்பாத்தியில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை சீராக இயங்க உதவுகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது, மேலும் குடல் இயக்கத்தை சீராக்குகிறது.
எடை இழப்புக்கு உதவும்:
சப்பாத்தி குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டது, இது எடை இழப்புக்கு உதவுகிறது. இது உங்களை நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர வைக்கும், இது அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.
சக்தி தரும்:
சப்பாத்தியில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது:
சப்பாத்தி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாக அமைகிறது.
இதயத்திற்கு நல்லது:
சப்பாத்தியில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
எலும்புகளுக்கு நல்லது:
சப்பாத்தியில் உள்ள கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
எளிதில் ஜீரணமாகும்:
சப்பாத்தி எளிதில் ஜீரணமாகும் ஒரு உணவு, எனவே வயிற்றுக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது.
🟨🟨. 👇. 🟥🟥
*அன்புடன்*
*நெல்லை*
*MK*
🟨🟨. 👆. 🟥🟥
#thannambikkay thulirgal நீங்கள் உங்களுக்கே ஊக்கம் சொல்லிக் கொள்ளுங்கள், வேறு யாரையும் எதிர்பார்க்காதீர்கள் அப்போழுதுதான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.*_
_உண்மையாக இருப்பவருக்கு ஊரே பகையாய் போய்விடும். பொய்யாய் நடிப்பவருக்கு அந்த ஊரே உறவாய் நிற்கும். இது தான் இன்றைய நிலை._
_*இங்கே நல்லதுக்கும் நல்லவர்களுக்கும் காலம் இருக்கிறதா என்பது தெரியவில்லை, ஆனால் நடிப்பவர்களுக்கும் நடிப்பிற்கும் நல்ல காலம் உள்ளது என புரிகிறது.*_
_சில மனிதர்களுக்கு தன்னால் முடிந்ததை பிறருக்கு உதவாவிட்டால் தூக்கம் வராது, சில மனிதர்களுக்கு தன்னால் முடிந்தவரை பிறருக்கு உபத்திரவம் தராவிட்டால் தூக்கம் வராது._
_*Victory comes from finding opportunities in problems.*_
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹
*இன்றைய சிந்தனை*
( 27.09.2025)
...........................................................
*‘’ஆர்வம் என்னும் உந்து சக்தி...!’’*
.................................................
உலகில் எவரலும் செய்ய முடியாது என்று கைவிட்ட செயல்களை சிலர் நிறைவேற்றிக் காட்டியது, அவர்கள் அந்த செயலின் மீது உள்ள தனியாத ''ஆர்வம்''தான்...
எடுத்த செயலில் ஒருவனிடம் ''ஆர்வம்'' இருந்து விட்டால், ஒவ்வொரு நாளும் அவனது குறிக்கோளை நெருங்கிக் கொண்டிருப்பான் என்பது திண்ணம்...
வாழ்வின் வெற்றி என்பது, ஒருவரின் செயலில் காட்டும் முயற்சி மட்டும் போதாது. அதன் மீது மிகுந்த ஆர்வத்தைப் பொறுத்தது...
பிரிட்டன் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரெலி ஒரு நாவல் ஆசிரியரும் கூட. அவர் அறுபத்தேழு நாவல்களை எழுதியுள்ளார்...
ஒருமுறை செய்தியாளர்கள் அவரிடம்,’’ எழுத்தில் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் எப்படி ஏற்பட்டது...? என்று வினவினார்கள்...
அதற்கு அவர் கூறியதாவது... '’எனக்கு படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. படிப்பதற்கு புத்தகம் ஏதும் கிடைக்காவிட்டால் அதற்காகாவே நானே நாவல் எழுதிப் படிக்க ஆரம்பித்து விடுவேன். அப்படியே எழுதி எழுதி எழுத்தாளராகி விட்டேன் என்றார் பெஞ்சமின் டிஸ்ரெலி...
குருதியில் உறுதியும், நெருப்பும் கொண்டு, சிந்தனை வேகமும் ஆர்வமுள்ள மனிதர்கள் தான் உலக ஓட்டத்திற்குக் காரணமாக இருக்கின்றார்கள்...
அரை மனமுள்ளவர்கள், குறிக்கோள் அற்றவர்கள் வாழ்க்கையென்னும் கடலிலே அடித்துச் செல்லப்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள்...
*ஆம் நண்பர்களே...!*
புவி அச்சிலிருந்து வெளியேறி வளிமண்டலம் செல்ல ஒரு ஏவூர்திக்கு அதிக 'உந்துசக்தி' தேவைப்படுகிறது, அதிக 'உந்துசக்தி' இருந்தால் மட்டுமே ஏவூர்தி தனது இலக்கை அடைய முடியும்...! (ஏவூர்தி- ராக்கெட்)*
அதுபோலத்தான்!, ஒரு செயலைத் தொடங்குகையில் நம் மனதிற்கு அபாரமான உந்துசக்தி தேவைப்படுகிறது , அது இல்லாமல் தான், நம்மில் பலரும் முதல் நிலையிலேயே இருந்து விடுகிறோம்...!!
அந்த ஆரம்ப உந்துசக்தி கிடைத்து, ஒரு செயலை நாம் தொடங்கி விட்டால்,எதிரே என்ன தடை வந்தாலும் நொறுக்குவதற்கு நம்மால் முடியும். எந்த செயலிலும் ஆர்வம் என்னும் உந்துசக்தி இருந்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்...!!!
-உடுமலை சு. தண்டபாணி✒️
🌹🌹🌹💐💐💐 🙏🏻 💐🌹🌹