ஃபாலோவ்
சுரேஷ் குமாரா
@68475404
1,733
போஸ்ட்
2,811
பின்தொடர்பவர்கள்
சுரேஷ் குமாரா
521 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
*🕉🔯ஶ்ரீராமஜயம்.🕉* *பஞ்சாங்கம் ~ விஸ்வாவஸு ~ கார்த்திகை ~ 24*~ *{10/12/2025}* *புதன்கிழமை*. *1.வருடம் ~ விஸ்வா‌வஸு வருடம். { விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.* *2.அயனம் ~ தக்ஷிணாயனம் .* *3.ருது ~ ஸரத் ருதௌ.* *4.மாதம் ~ கார்த்திகை ( வ்ருச்சிக மாஸம் )* *5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்* *6. திதி ~ ஷஷ்டி இரவு 07.58 PM வரை . பிறகு ஸப்தமி.* *ஸ்ரார்த்த திதி ~ ஷஷ்டி .* . *7.நாள் ~ புதன்கிழமை { ஸௌம்ய நாம வாஸரம் ).* *8. நக்ஷத்திரம் ~ ஆயில்யம் காலை 08.36 AM வரை . பிறகு மகம்.* *அமிர்தாதி யோகம் ~ சித்த யோகம் .* *நாம யோகம் . ~ வைத்ரிதி நாம யோகம் { 12.46 PM}. பிறகு விஷ்கம்ப நாம யோகம்.* *கரணம் ~ வணிஜை , பத்ரம்.* *நல்ல நேரம் ~ காலை 09.15 AM ~ 10.15 AM & 04.45 ~ 05.45 PM .* *ராகு காலம் ~ பகல் 12.00 ~ 01.30 PM .* *எமகண்டம் ~ காலை 07.30 ~ 09.00 AM.* *குளிகை ~ பகல் 10.30 AM ~ 12.00 PM.* *சூரிய உதயம். ~ காலை 06.21 AM.* *சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.43 PM.* *சந்திராஷ்ட்டமம் ~ உத்திராடம்.* *சூலம் ~ வடக்கு.* *பரிகாரம் ~ பால்* *இன்று ~ .* *🔯🕉SRI RAMA JAYAM🔯🕉* *PANCHAANGAM ~ ~ VISWAVASU ~ KAARTHIGAI - 24 ~* *(10/12/2025) ~ WEDNESDAY* *1.YEAR ~ VISWAVASU {VISWAVASU NAMA VATHSARAM).* *2.AYANAM ~ DHAKSHINAAYANAM*. *3. RUTHU ~ SARATH RUTHU.* *4. MAASAM ~ KAARTHIGAI ( VRICHCHIGA MAASAM)*. *5. PAKSHAM ~ KRISHNA PAKSHAM.*. *6.THITHI ~ SHASHTI UPTO 07.58 PM. AFTERWARDS SABTHAMI. *SRAATTHTHA THITHI ~ SHASHTI .* *7.DAY ~ WEDNESDAY (SOWMYA VAASARAM).* *8. NAKSHATHRAM ~ AAYILYAM UPTO 08.36 AM. AFTERWARDS MAGAM.* . *AMIRDHATHI YOGAM ~ SIDHDHA , YOGAM .* *. *NAAMA YOGAM ~ VAIDHRITHI NAAMA YOGAM ( 12.46 PM). AFTERWARDS VISKAMBHA NAAMA YOGAM.* *KARANAM ~ VANIJAI , BHADHRAM.* *. *RAGU KAALAM ~ 12.00 PM ~ 01.30 PM.* *YEMAGANDAM* ~ *07.30 ~ 09.00 AM*’ *KULIGAI ~ 10.30 AM ~ 12.00 PM.* *GOOD TIME ~ 09.15 AM ~10.15 AM . & 04.45 ~ 05.45 PM.* *SUN RISE ~ 06.21 AM.* *SUN SET ~ 05.43 PM.*. *CHANDRAASHTAMAM ~ UTHTHIRAADAM .* *SOOLAM ~ NORTH .* *PARIGARAM* ~ .*MILK* *TODAY ~* #🙏ஆன்மீகம்
சுரேஷ் குமாரா
523 காட்சிகள்
23 மணி நேரத்துக்கு முன்
அக்ஷதை பற்றிய சில தகவல்கள். "அப்படி என்ன விசேஷம் இருக்கிறது இந்த அக்ஷதைக்கு'' ? இறை பூஜைகளிலும், திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும், இதற்கென ஏன் ஒரு தனியிடமே அளிக்கப்பட்டிருக்கிறதே! இதன் "தாத்பர்யம்" என்ன? "க்ஷதம்" என்ற வார்த்தைக்கு "குத்துவது" அல்லது "இடிப்பது" என்று பொருள். "அக்ஷதம்" என்றால் இடிக்கப்படாதது என்று பொருள். உலக்கையால் இடிக்கப்படாத, முனை முறியாத அரிசி "அக்ஷதை" எனப்படுகிறது. முனை முறிந்த அரிசியைக் கொண்டு "அக்ஷதை" தயாரிப்பது உசிதமல்ல . இப்படி முனை முறியாத அரிசியோடு மஞ்சளை இணைப்பது ஏன்? பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி. பூமிக்குக் கீழ் விளையும் பொருள் மஞ்சள். இவை இரண்டையும் இணைக்கப் பயன்படுவது தூய பசுநெய் என்கிற ஊடகம். எதற்கு இப்படிச் செய்கிறார்கள்? சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் அம்சம் கொண்ட மஞ்சள், மஹாலக்ஷ்மியின் அருள்கொண்ட நெய் இவை யாவும் ஒன்று சேரும்போது, அங்கே நல்ல அதிர்வு உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும் என்பது நம்பிக்கை. வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இந்த அக்ஷதை, பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து வரும் வாகனமாகவே உணரப்படுகிறது. அதில்லாமல் அரிசியை உடலாகவும், மஞ்சளை ஆன்மாவாகவும், நெய்யை தெய்வ சக்தியாகவும் ஆன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி, "உடல், ஆன்மா, தெய்வசக்தியோடு இணைந்து வாழ்த்துகிறோம்" என்ற பொருளிலேயே அக்ஷதை தூவப்படுகிறது என்று சொல்வோரும் உண்டு. திருமணங்களில், மணமக்களை வாழ்த்துவதற்கு, மலர்களை விட, அக்ஷதைக்கே முக்கியத்துவம் ஏன் வழங்கப்படுகிறது? சற்றே யோசித்தால், பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும் விளைகின்ற அரிசியையும் மஞ்சளையும் போன்றே மணமக்கள். வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள்.. ஒருமித்து வாழவிழைபவர்கள். அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசுநெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர். இதுவே தத்துவம். ஆகவே, உற்றார் உறவினர்கள், பெரியோர்கள், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும்போது, மணமேடைக்கு அருகே வந்து, ஒருவர் பின் ஒருவராக, மணமக்கள் சிரசில் அக்ஷதை தூவி வாழ்த்துவதே சாஸ்திர ரீதியாகச் சிறந்தது என்பர் பெரியோர். இதை வீசி எறிவது தவறான விஷயம். (சாஸ்திரிகள்தலையில்தான் அட்சதை பெரும்பாலும்விழுகிறது😄) திருமணக் கூடங்களில் எங்கோ இருந்து கொண்டு, வீசி எறிவதைப் பார்க்கிறோம். அது ஆகாத செயலாகும். அக்ஷதையைப் போல முழுமையாக எல்லா நிகழ்வுகளும், திருமணம் கண்டவர்களின் வாழ்விலும் நடைபெற வேண்டும் என்பதே அக்ஷதையின் குறியீடு. இப்படிப்பட்ட அக்ஷதையை இறைவன் திருவடிகளில் வைத்து வணங்கிய பின்னர், மணமக்களை ஆசீர்வதித்து அவர்கள் சிரசில் தூவுவதே, அவர்களுக்கு நன்மையான பலன்களைக் கொடுக்கும். அதே போன்று புதிதாகத் தொழில் துவங்கும் போதும், சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும், குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும், மஹாலக்ஷ்மியின் பரிபூரண சக்தி கொண்ட நெய்யினால் சேர்த்து, பெரியோர்களால் அக்ஷதையாகத் தூவப்பட்டு ஆசி வழங்கப்படும் பொழுது, அந்தப் புதிதாகத் தொடங்கப்பட்டத் தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய நன்மைகளை விளைவிக்கும் என்பது சாஸ்த்ர ரீதியான உண்மையாகும். -- #🙏ஆன்மீகம்
சுரேஷ் குமாரா
502 காட்சிகள்
23 மணி நேரத்துக்கு முன்
புதிய வாக்காளர் சேர்க்கை இன்று டிசம்பர் 09 2025 செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 08 2026 வரை விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தேவையான ஆவணங்கள், 1.ஆதார் கார்டு 2.போட்டோ 1 3.பிறப்புச் சான்றிதழ் 4.பள்ளிச் சான்றிதழ்(TC) இன்று முதல் தொடக்கப் பள்ளிகளில் BLO க்கள் இருப்பார்கள் அவர்களிடம் நேரில் சென்று விண்ணபிக்க வேண்டும். 🛑🛑🛑🛑🛑🛑 #📺வைரல் தகவல்🤩
சுரேஷ் குமாரா
1.6K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
Two coaches under pressure 🇮🇳🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 Gautam Gambhir & Brendon McCullum are feeling the heat 👀 #AUSvENG #🏏 கிரிக்கெட்
சுரேஷ் குமாரா
581 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
🙏 திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மனின் சுவாரசியமான கதை, மகத்துவம் மற்றும் நன்மைகள்! தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு அருகில் உள்ள திருக்கருகாவூரில் வீற்றிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் (கருவைக் காத்த நாயகி) திருக்கோயில், குழந்தை வரம் வேண்டுவோருக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் வரப்பிரசாதமாக விளங்குகிறது. 🤰 அம்மனின் சுவாரசியமான கதை (தல வரலாறு) ஒரு காலத்தில் இந்தத் தலம் முல்லை வனமாக இருந்ததால், இங்குள்ள சிவபெருமான் முல்லைவன நாதர் என்று அழைக்கப்படுகிறார். முன்னொரு காலத்தில், நித்துருவர் மற்றும் அவரது மனைவி வேதிகை என்ற தம்பதியினர் குழந்தை பேறு இல்லாமல் வருந்தினர். அவர்கள் இத்தலத்து இறைவனையும், இறைவியையும் மனமுருகி வணங்கி வந்தனர். அவர்களின் பக்தியால் மகிழ்ந்த இறைவன் அருள, வேதிகை கருவுற்றாள். ஒரு நாள், வேதிகை கர்ப்ப அவஸ்தையால் மிகவும் சோர்வாக இருந்தபோது, அவரது குடிசைக்கு ஊர்த்துவபாதர் என்னும் முனிவர் வந்தார். கர்ப்பிணியான வேதிகையால் அவரை உடனடியாக எழுந்து உபசரிக்க முடியவில்லை. இதனை அறியாத முனிவர், தன்னை அவமதித்ததாகக் கருதி, "இவள் கருச்சிதைவு ஏற்பட்டு, குழந்தையின்றிப் போவாள்" என்று சபித்தார். முனிவரின் சாபத்தால் வேதிகையின் கரு அழியத் தொடங்கியது. மிகுந்த துயரத்துடன் வேதிகை கதறினாள். தன்னையும், தன் கருவையும் காக்கும்படி இத்தலத்து அம்மனை மனமுருகி வேண்டினாள். தனது பக்தையின் துயரத்தைக் கண்ட அம்பிகை, அவளின் கருவைச் சிதையாமல் காத்தருளி, ஒரு குடத்தினுள் வைத்து, அதற்குரிய பக்குவமான உணவளித்து, உரிய காலம் வரை பாதுகாத்துக் குழந்தையாகப் பிறக்கச் செய்தாள். கருவைக் காத்துக் கொடுத்ததால், அன்று முதல் அம்பிகை கர்ப்பரட்சாம்பிகை (கருகாத்த நாயகி) என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறாள். ✨ கோயிலின் சிறப்புகளும் மகிமையும் புற்று வடிவிலான மூலவர்: இத்தலத்தின் மூலவரான முல்லைவனநாதர் சுயம்பு மூர்த்தி; புற்று மண்ணால் ஆனவர். அவரது திருமேனியில் முல்லைக்கொடி சுற்றிய வடு இன்றும் காணப்படுகிறது. அபிஷேகம் இல்லாத சிவன்: முல்லைவன நாதருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு சட்டம் (சந்தனம்) மட்டுமே சாத்தி வழிபடப்படுகிறது. இந்தக் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில், விருத்த காவிரி (வெட்டாறு) ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வீர சக்தி அம்மன்: 64 சக்தி பீடங்களில் முதன்மையான வீர சக்தியம்மனாக அம்பாள் இங்கு அருள்பாலிக்கிறார். அம்மன் தோற்றம்: கர்ப்பரட்சாம்பிகை அம்மன் ஐந்தரை அடி உயரத்தில், இடதுகையை இடுப்பில் வைத்தபடி (கர்ப்பத்தைத் தாங்கிய நிலையில்) அருள்புரிகிறார். 💖 கர்ப்பிணி மற்றும் குழந்தை வரம் வேண்டுவோருக்கு ஏற்படும் நன்மைகள் இந்தக் கோயிலில் வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. 1. குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு: 🤱நெய் பிரசாதம்: குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இங்கு வந்து அம்பாளின் திருப்பாதத்தில் வைத்து மந்திரிக்கப்பட்ட நெய்யை வாங்கி, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால், புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 🧑‍🍼 படி மெழுகுதல்: குழந்தை வரம், திருமணம் கூடி வர வேண்டி வரும் பெண்கள், அம்பாள் சன்னிதியில் உள்ள வாசல் படியை நெய்யால் மெழுகி, கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பானது. 🌟 தங்கத் தொட்டில்: குழந்தை வரம் வேண்டுவோர் மற்றும் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் இங்கு தங்கத் தொட்டில் பிரார்த்தனை செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். 2. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சுகப்பிரசவத்திற்கு: 🤰கருச்சிதைவு இல்லை: இந்தக் கோயிலை வழிபடுவோருக்கு கருச்சிதைவு ஏற்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்தக் கிராமத்தில் வாழும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதில்லை என்றும் உறுதியுடன் சொல்கிறார்கள். 🤰விளக்கெண்ணெய் பிரசாதம்: கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் அடைய வேண்டி, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெய் பிரசாதம் வழங்கப்படுகிறது. பிரசவ வலி ஏற்படும் போது இந்த எண்ணெயை வயிற்றில் தடவி வர, சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. 🙏 கருக்காத்த நாயகி: கருவைக் காத்து, பிரசவ வேதனை மிகுதியாகாமல் சுகப்பிரசவம் நடக்க துணை நிற்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இத்தலத்து வழிபாடு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. குறிப்பு: அம்பாளை மனமுருகி வழிபட்டு, நம்பிக்கையுடன் நெய் மற்றும் விளக்கெண்ணெய் பிரசாதத்தை ஏற்றுக்கொள்வது, நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். #🙏ஆன்மீகம்
சுரேஷ் குமாரா
496 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
கருண் நாயர் அடிச்சமாரி ஓங்கி தட்டீட்டிருக்கார் ஷமி bcci கதவை வாய்ப்புக்காக. என்னதான் Shamiஐ எடுக்கற ideaல அவங்க இல்லேனாலும் வயசை பொருட்படுத்தாம எல்லா மேட்ச்சும் சளைக்காமல் ஓடிவந்து பௌலிங் போட்டுட்டுதானே இருக்கார். அவ்ளோ Passion வச்சிருக்கார் இன்னும்..👏 World cupல டீமுக்காக அரைகுறை காயத்திலிருந்து வந்து கொத்து கொத்தா விக்கெட் எடுத்துக்குடுத்தார். Indian டீம்ல இல்லாட்டியும் வரிசையா domestic போட்டிகள்ல எல்லாம் தவறாம ஆடீட்டுவரார். இப்ப Syed Mushtaq Ali போட்டீல கடைசி 4 மேட்ச்ல 12 விக்கெட் எடுத்திருக்கார். 👏 எப்படியும் மாற்றம் நடக்கும். அதை தவிர்க்க முடியாது. ஆனா Rohit கேப்டனா இல்ல, Kohli, Ashwin எல்லாரும் retired ஆகீட்டாங்க. இந்த கொஞ்ச மாற்றங்கள் வேகமா நடந்திருக்கு. அதுல ஷமியும் சேத்துடுவாங்க இந்த அகர்கார் கோஷ்டி... #🏏 கிரிக்கெட்
சுரேஷ் குமாரா
560 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
*🔯🕉ஶ்ரீராமஜயம்🔯🕉.* *பஞ்சாங்கம் ~ விஸ்வாவஸு ~ கார்த்திகை ~ 22* ~ *{08/12/2025} திங்கட்கிழமை* *1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். { விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.* *2.அயனம் ~ தக்ஷிணாயனம் .* *3.ருது ~ ஸரத் ருதௌ.* *4.மாதம் ~ கார்த்திகை ( வ்ருச்சிக மாஸம்).* *5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.* *6.திதி ~ சதுர்த்தி .* *ஸ்ராத்த திதி ~ சதுர்த்தி .* *7.நாள் ~ திங்கட்கிழமை {இந்து வாஸரம்)* *. *. 8. நக்ஷத்திரம் ~ புனர்பூசம் காலை 09.39 AM வரை . பிறகு பூசம் .* *அமிர்தாதி யோகம் ~ அமிர்த , சித்த யோகம் .* *நாம யோகம் ~ ப்ரஹ்மா நாம யோகம் (05.01 PM) . பிறகு மாஹேந்திர நாம யோகம் .* *கரணம் ~ பாலவம் , கௌரவம் .* *நல்ல நேரம் ~ காலை 06.15 AM ~ 07.15 AM & மாலை 01.45 PM ~ 02.45 PM.* *ராகுகாலம் ~ காலை 07.30 ~ 09.00 AM* *எமகண்டம் ~ காலை 10.30 ~12.00 PM.* *குளிகை ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.* *சூரிய உதயம் ~ காலை 06.19 AM. சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.42 PM.* *சந்திராஷ்டமம் ~ மூலம் .* *சூலம் ~ கிழக்கு* *பரிகாரம் ~ தயிர் .* *இன்று ~ சங்கடஹர சதுர்த்தி.* 🙏🙏 *🔯🕉 SRI RAMAJAYAM🕉🔯* *VISWAVASU ~ KAARTHIGAI ~ 22 ~ (08/12/2025) ~ MONDAY.* *1.YEAR ~ VISWAVASU VARUDAM { VISWAVASU NAMA SAMVATHSARAM }*. *2.AYANAM ~ DHAKSHINAAYANAM .*. *3. RUTHU ~ SARATH RUTHU 4. MONTH ~ KAARTHIGAI ( VRICHCHIGA MAASAM)* *5.PAKSHAM ~ KRISHNA PAKSHAM.* *6. THITHI ~ CHATURTHI.* *SRAATHTHA THITHI ~ CHATURTHI* *7.DAY ~ MONDAY (INDHU VAASARAM)*. *8. NAKSHATHRAM ~ PUNARPOOSAM UPTO 09.39 AM. AFTERWARDS POOSAM .* *AMIRDHATHI YOGAM ~ AMIRDHA , SIDHDHA YOGAM .* *NAAMA YOGAM ~ BRAHMMAA NAAMA YOGAM (05.01 PM). AFTERWARDS MAAHENDRA NAAMA YOGAM .* *KARANAM ~ BAALAVAM , KAULAVAM.* *GOOD TIME ~ 06.15 AM~ 07.15 AM & 01.45 PM ~ 02.45 PM.* *RAGU KALAM ~ 07.30 ~ 09.00 AM.* *YEMAGANDAM ~ 10.30 ~ 12.00 PM . KULIGAI ~ 01.30 ~ 03.00 PM.* *SUN RISE ~ 06.19 AM.* *SUN SET ~ 05.42 PM.* **CHANDRAASHTAMAM ~ MOOLAM .* *SOOLAM ~ EAST* *PARIGAARAM. ~ CURD* *TODAY ~ SANKADA HARA CHATURTHI .* 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 . #🙏ஆன்மீகம்
See other profiles for amazing content