சுரேஷ் குமாரா
ShareChat
click to see wallet page
@68475404
68475404
சுரேஷ் குமாரா
@68475404
𝙸 𝚕𝚘𝚟𝚎❤ 𝚂𝚑𝚊𝚛𝚎 𝙲𝚑𝚊𝚝💬
அவ்வளவு தான் பா...இது தான் மேட்டர்! இந்த 23 வயசுலயே மூணு பார்மட்லயும் சதம் அடித்து நீ யாருன்னு இந்த கிரிக்கெட் உலகத்துக்கே நிரூபிச்சு காட்டிட்ட 👏👌 அவ்வளவு தான் மேட்டரு 🥳 நீ தலைகுனிந்து நடக்க உன்னோட பத்து மோசமான Performance காரணமாக இருக்கலாம்! ஆனா நீ தலைநிமிர்ந்து நடக்க இந்த மாதிரி ஒரே ஒரு Performance போதும்! கிரவுண்ட்ல சும்மா கெத்தா நடக்கலாம் 💪 இதைத்தான் உன்கிட்ட எதிர்ப்பார்த்தோம்! Finally U did Man 👏 ஒருநாள் போட்டிகளில் முதல் சதம் மற்றும் மூணு வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்! இந்த வகையில் இதற்கு முன்பு சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் மூணு வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்திருந்திருந்தார்கள்! மென்மேலும் பல சாதனைகளை படைத்து சாதிக்க யஷஸ்வி ஜெய்ஸ்வாலை நாம் வாழ்த்துவோம் 💐🙌 #YashasviJaiswal #TeamIndia #INDvsSA #indvssaodi2025 #odicricket #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 - %8  00 3 90 /[915, aika lan 0$ '2902 _ %8  00 3 90 /[915, aika 0$ '2902 _ - ShareChat
*🔯🕉ஶ்ரீராமஜயம்🔯🕉* *பஞ்சாங்கம் ~ விஸ்வாவஸு ~ கார்த்திகை ~ 21* ~ *{07/12/2025} ~ ஞாயிற்றுக்கிழமை.* *1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். ( விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.* *2.அயனம் ~ தக்ஷிணாயனம் .* … *. 3. ருது.* ~ *ஸரத் ருதௌ* *4.மாஸம் ~ கார்த்திகை ( வ்ருச்சிக மாஸம்)*. *5.பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்*. *6. திதி ~ திரிதியை .* *ஸ்ராத்த திதி ~ திரிதியை .* *7. நாள் ~ ஞாயிற்றுக்கிழமை {பானு வாஸரம்}*. *8.நக்ஷத்திரம் ~ திருவாதிரை காலை 10.41 AM வரை . பிறகு புனர்பூசம் .* *8. அமிர்தாதி யோகம் ~ சித்த யோகம் .* *நாம யோகம்*~ *ஸுப்ரம் நாம யோகம் (08.07 PM). பிறகு ப்ரஹ்மா நாம யோகம் .* *கரணம் ~ வணிஜை , பத்ரம் , .* *நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM & 03.15 PM ~ 04.15 PM* *ராகு காலம் ~ மாலை 04.30 PM ~ 06.00 PM* *எமகண்டம் ~ பகல் 12.00 PM ~ 01.30 PM.* *குளிகை ~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM.* *சூரிய உதயம் ~ காலை 06.19 AM.* *சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.42 PM.* *சந்திராஷ்டமம் ~ அனுஷம் , கேட்டை .* *சூலம் ~ மேற்கு*. *பரிகாரம் ~ வெல்லம்.* ’ *இன்று ~ .* .* *🔯🕉️ SRI RAMAJAYAM🔯🕉️* *PANCHAANGAM ~ VISWAVASU ~ KAARTHIGAI ~ 21 ~ (07/12/2025) SUNDAY.* *1.YEAR ~ VISWAVASU VARUDAM. { VISWAVASU NAMA SAMVATHSARAM}* *2.AYANAM ~ DHAKSHINAAYANAM .* *3.RUTHU ~ SARATH RUTHU* *4. MONTH ~ KAARTHIGAI ( VRICHCHIGA MAASAM.)* *5. PAKSHAM ~ KRISHNA PAKSHAM . .* *6.THITHI ~ THIRIDHIAI .* *SRAATHTHA THITHI ~ THIRIDHIAI .* *7.DAY ~ SUNDAY.* *8.NAKSHATRAM ~ THIRUVAADHIRAI UPTO 10.41 AM. AFTERWARDS PUNARPOOSAM .* *AMIRDHATHI YOGAM ~ SIDHDHA YOGAM .* *NAAMA YOGAM ~ SUBRAM NAAMA YOGAM (08.07 PM ). AFTERWARDS BRAHMMAA NAAMA YOGAM..* *KARANAM ~ VANIJAI , BHADHRAM.* *SUN RISE ~ 06.19 AM* *SUN SET ~ 05.42 PM* *RAGU KAALAM ~ 04.30 ~ 6.00 PM* *YEMAGANDAM ~ 12.00 ~ 01.30 PM* *KULIGAI* ~ *03.00 PM ~ 04.30 PM.* *GOOD TIME ~ 07.45 AM ~ 08.45 AM & 03.15 PM ~ 04.15 PM .* *CHANDRAASHTAMAM ~ ANUSHAM , KETTAI.* *SOOLAM ~ WEST* . *PARIGARAM ~ JAGGERY*. *TODAY ~ .* 🙏 🙏🙏 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - h h - ShareChat
531 ரன் டார்கெட்டுக்கு கடைசி நாள்ல 457/6 ரன் எடுத்து நியூசிலாந்த கதற விட்டிருக்காங்க வெஸ்ட் இண்டீஸ்! ஷாய் ஹோப் - 140 (234) ஜஸ்டின் கிரீவ்ஸ் - 202* (388) கெமார் ரோச் - 58* (233) இதுல ஹைலைட், ரோச் பேஸ் பண்ண ballsதான்! #🏏 கிரிக்கெட்
🏏 கிரிக்கெட் - 4 HOPE 4 HOPE - ShareChat
வரலாற்றில் இன்று.டிசம்பர். 6 நடிகையர் திலகம் சாவித்திரி பிறந்த தினம் இன்று(1935). சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். சிஸ்டா பூர்ணையா சாஸ்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார். நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்த சாவித்திரிக்கு நடிப்பின்மீது ஆசை. அதற்காக சென்னை வந்த அவருக்கு கிடைத்ததெல்லாம் சிறுசிறுவேடங்கள் நாடகத் துறையில் அறிமுகமாகி அங்கிருந்து சினிமாவிற்கு வந்த சாவித்திரி எல்.வி.பிரசாத் இயக்கிய தெலுங்கு படமான சம்சாரம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.. அடுத்ததாக எல்.வி.பிரசாத் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் இயக்கிய கல்யாணம் பண்ணிப்பார் படத்தில் நடித்தாலும் தொடர்ந்து அவருக்கு கிடைத்ததென்னவோ தெலுங்குப்பட வாய்ப்புகள்தான். அதன்பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரான தேவதாஸ் படத்திலும் சில தெலுங்குப் படங்களிலும் நடித்தார். 1955இல் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வெளியான ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் சாவித்திரி. அத்தனை அற்புதமாக காதல், குறும்பு, கோபம், தாபம் என அத்தனை பக்கங்களிலும் அசத்தியிருந்தார் சாவித்திரி. மிஸ்ஸியம்மா என்ற திரைப்படம் திரையிட்ட இடங்களில் திருவிழா கூட்டம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு போனார் சாவித்திரி. மிஸ்ஸியம்மா தந்த புகழால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் சாவித்திரி. தமிழில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி ஆந்திராவில் என்.டி. ஆர், நாகேஷ்வரராவ் என ஜோடி சேர்ந்த சாவித்திரியின் புகழ் அடுத்த இருபது வருடங்களில் கொடிகட்டிப் பறந்தது திரையுலகில். அதன் பிறகு ‘அமரதீபம், மாயாபஜார், கடன் வாங்கி கல்யாணம்’ என நடித்துக் கொண்டிருந்தவருக்கு 1959இல் ஜெமினி கணேசனுடன் நடித்த ‘களத்தூர் கண்ணம்மா’ படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கமல்ஹாசன் சிறுவனாக நடித்த முதல் படமும் இதுதான். 1960இல் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, ஜெமினியுடன் சாவித்திரி இணைந்து நடித்த ‘பாசமலர்’ படம் சாவித்திரிக்கு மட்டுமல்லாமல் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிச் சென்றுவிட்டது. சிவாஜியும் சாவித்திரியும் அண்ணன் தங்கையாக நடித்திருந்தனர் என்று சொல்வதைவிட பாசமலர்களாகவே வாழ்ந்திருந்தனர் என்றே சொல்லலாம். இன்றும் பாசமுள்ள அண்ணன் தங்கை என்றால் என்ன பாசமலரா என்று கேட்கும் அளவிற்கு மக்களின் மனதில் சாவித்திரி சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். இந்தப் படத்திற்குப் பிறகு சிவாஜியும், சாவித்திரியும் காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்தார்கள். அந்த நாட்களில் சிவாஜி மற்றும் ஜெமினியோடுதான் அதிக படங்களில் நடித்திருந்தார் சாவித்திரி. சிவாஜிக்கு நிகரான அந்தஸ்து, நடிகைககளில் சாவித்திரிக்கு மட்டுமே ரசிகர்களால் வழங்கப்பட்டது. இதற்கு ஒரு சிறு உதாரணமாக நவராத்திரி படத்தைக் கூறலாம். அதில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்து மிரட்டியிருந்தாலும் சாவித்திரியும் அந்த ஒன்பது கதாபாத்திரங்களுக்கு ஈடுகொடுத்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் எம்.ஜி.ஆரோடு பரிசு, வேட்டைக்காரன், மகாதேவி என மூன்று படங்களில் மடடுமே சேர்ந்து நடித்திருக்கிறார். அந்த மூன்று படங்களிலும் சாவித்திரி மற்ற கதாநாயகிகள் போலின்றி மிக துணிச்சலும் தனித்துவமும் கொண்டவராக தன்னை வெளிப்படுத்தி இருப்பார். அதேபோல ‘ஜக்கம்மா’ திரைப்படமும் சாவித்திரியின் வித்தியாசமான நடிப்பைப் பறைசாற்றியது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 318 படங்களில் நடித்திருக்கிறார் சாவித்திரி. நடிப்போடு சேர்த்து டைரக்சனிலும் சாவித்திரிக்கு ஆர்வம் எட்டிப் பார்க்கவே அதிலும் ஒரு கை பார்த்துவிடுவதென்று துணிச்சலுடன் இறங்கினார் தெலுங்கில் நான்கு படங்களையும் தமிழில் குழந்தை உள்ளம், பிராப்தம் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கினார்.. தமிழில் அவரே இரண்டு படங்களைத் தயாரிக்கவும் செய்தார். ஆனால் அவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதுவே கடைசிக் காலகட்டத்தில் அவரைப் பொருளாதார ரீதியாக பாதித்துவிட்டது என்றுகூட சொல்லலாம்.. திரையுலகில் 1950, 60 மற்றும் 70களில் சகாப்தமாக வாழ்ந்தவர், நடிகை சாவித்திரி. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்து வைத்து இருந்தார். பாசமலர் படத்தில் பாசக்கார தங்கையாகவும், திருவிளையாடலில் சக்தியே பெரிது என்று வாதாடும் ஈசனின் மனைவியாகவும், படித்தால் மட்டும் போதுமா படத்தில் அன்பான மனைவியாகவும் கவர்ந்தார். பாவமன்னிப்பு, நவராத்திரி, கர்ணன், களத்தூர் கண்ணம்மா, பரிசு, கந்தன் கருணை, மாயாபஜார் உள்ளிட்ட பல படங்கள் சாவித்திரியின் திறமையான நடிப்பில் வெளிவந்து வசூல் சாதனை படைத்தன. சிறந்த நடிப்பால் ‘நடிகையர் திலகம்’ என்ற பட்டம் அளித்து பாராட்டப்பட்டார். சென்னையில் மாளிகை போல் வீடு கட்டி அதற்குள் நீச்சல் குளம் அமைத்த முதல் நடிகை இவர்தான். தமிழ் சினிமா பேச ஆரம்பித்த காலம் தொட்டு எத்தனையோ நடிகைகள் தனித்துவமான நடிப்புத் திறமையால் தங்களது பெயரை நிலைநாட்டிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் தனது மிகச் சிறந்த நடிப்பின்மூலம் ‘நடிகையர் திலகம்’ என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடிகையென்றால் அனைவரும் ஏகமனதாக கூறுவது சாவித்திரியைத்தான்... #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
*🔯🕉ஶ்ரீராமஜயம்🔯🕉* *பஞ்சாங்கம் ~ விஸ்வாவஸு ~ கார்த்திகை ~ 20 ~* *(06/12/2025) சனிக்கிழமை*. *1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். ( விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.* *2.அயனம் ~ தக்ஷிணாயனம்.* *3.ருது ~ ஸரத் ருதௌ.* *4.மாதம் ~ கார்த்திகை ( வ்ருச்சிக மாஸம்)*. *5.பக்ஷம்*~ *கிருஷ்ண பக்ஷம்.* *6.திதி ~ துவிதியை .* *ஸ்ராத்த திதி ~ துவிதியை .* *7.நாள் ~ சனிக்கிழமை {ஸ்திரவாஸரம் }* *8.நக்ஷத்திரம் ~ மிருகசீரிஷம் பகல் 12.03 PM வரை. பிறகு திருவாதிரை.* *அமிர்தாதி யோகம் ~ சித்த யோகம் .* *நாம யோகம் ~ ஸுபம் நாம யோகம்* *கரணம் ~ தைதுலம் , கரஜை .* *நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM* *ராகு காலம் ~ காலை 09.00 ~ 10.30 AM.* *எமகண்டம் ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.* *குளிகை ~ காலை 06.00 ~ 07.30 AM.* *சூரிய உதயம் ~ காலை 06.18 AM.* *சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.42 PM .* *சந்திராஷ்டமம் ~ விசாகம் , அனுஷம்.* *. சூலம் ~ கிழக்கு.* *பரிகாரம் ~ தயிர் .* *இன்று ~ .*🙏🙏 *🔯🕉️SRI RAMAJAYAM🔯️* *PANCHAANGAM ~ - VISWAVASU ~ KAARTHIGAI ~ 20 ~* *06/12/2025 - SATURDAY* *1.YEAR ~ VISWAVASU VARUDAM { NAMA SAMVATHSARAM}* *2.AYANAM ~ DHAKSHINAAYANAM .* *3.RUTHU ~ SARATH RUTHU.* *4.MONTH ~ KAARTHIGAI { VRICHCHIGA MAASAM}* *5. PAKSHAM ~ KRISHNA PAKSHAM. 6. THITHI ~ DUVIDHIAI . SRAATHTHA THITHI ~ DUVIDHIAI .* *7.DAY ~ SATURDAY*. *8.NAKSHATHRAM ~ MIRUGASEERSHAM UPTO 12.03 PM. AFTERWARDS THIRUVAADHIRAI.* *AMIRDHATHI YOGAM ~ SIDHDHA YOGAM .* *NAMA YOGAM ~ SHUBHAM NAAMA YOGAM .* *KARANAM ~ TAIDULAM , GARAJAI .* .* *RAGU KALAM ~ 09.00 ~ 10.30 AM.* *YEMAGANDAM ~ 01.30 ~ 03.00 PM.* *KULIGAI ~ 06.00 ~ 07.30 AM*. *GOOD TIME ~ 07.45 ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM.* *SUN RISE ~ 06.18 AM*. *SUN SET ~ 05.42 PM* *CHANDRAASHTAMAM ~ VISAAGAM, ANUSHAM .* *SOOLAM ~ EAST* *PARIGARAM CURD.* *TODAY ~ .* 🙏🙏🙏 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ೬c೭೫ . { & ೬c೭೫ . { & - ShareChat
கண்கள் சிவந்த சிஐஏ.. புடின் - மோடி எடுத்த ஸ்மார்ட் முடிவு.. கொதிக்கும் அமெரிக்கா.. தோற்ற டிரம்ப்? ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள பயணம் மேற்கு உலகத்தை பதற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.இது ஒரு சாதாரண பயணத்தை விடவும், ராஜதந்திர நிகழ்வை விடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை எந்த ஒரு தரப்பிற்கும் அடிபணியாது என்பதை அமெரிக்காவிற்குச் சத்தமாக நினைவூட்டுவது போல இது அமைந்துள்ளது. முக்கியமாக இந்தியா - ரஷ்யா உறவை முறிக்கும் விதமாக டிரம்ப் தீவிரமாக முயற்சிகளை எடுத்த நிலையில், அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக மோடி - புடின் நெருக்கமாகி உள்ளனர். ரஷ்ய அதிபர் புடின் ரஷ்ய அதிபர் புடினுக்கு அளித்த பிரதமர் நரேந்திர மோடியின் பிரமாண்டமான செங்கம்பள வரவேற்பு, நீண்ட கைகுலுக்கல்கள் மற்றும் நட்பு ரீதியான புன்னகை ஆகியவை இரு தலைவர்களுக்குமிடையே உள்ள நெருக்கத்தைக் காட்டுகிறது. இருவரும் மிக நெருக்கமாக இணைந்துள்ளனர். சர்வதேச நெருக்கடிக் காலங்களில் மலிவான கச்சா எண்ணெய் விநியோகம் முதல், எஸ்-400, எஸ்-500 போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள் வரை பல உதவிகளை செய்திக்கு ரஷ்யா இந்தியாவுக்குப் பக்கபலமாக இருந்துள்ளது. அரசியல் ரீதியாக தொடர்ச்சியாக இந்தியா - ரஷ்யா நெருக்கமாக உள்ளது. மாஸ்கோ இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர் ஆதரவு தருகிறது. இந்த ஒத்துழைப்பு இந்தியாவுக்கு பில்லியன் கணக்கான டாலர்களைச் சேமித்ததுடன் சர்வதேச அரசியல் ரீதியாக பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது. மறுபுறம், வாஷிங்டன் எப்போதும் நம்பகமான நண்பனாக இருந்ததில்லை. டிரம்ப் அதிபராக இந்தியாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை எடுத்து வருகிறார். அவரது கடுமையான கருத்துகள், வர்த்தக மோதல்கள், அதிக வரி விதிப்புக் கோரிக்கைகள், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்த அழுத்தங்களும் இந்தியா அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் அழுத்தம் அமெரிக்க அமைப்புகள் மாஸ்கோவுடன் உறவுகளைக் குறைக்குமாறு இந்தியாவை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இப்படிப்பட்ட நிலையில்தான் புடின் உடன் மோடி நெருக்கமாகி உள்ளார். CIA போன்ற அமெரிக்க உளவு நிறுவனங்கள் இந்த வருகையை தீவிரமாக கவனிப்பதாகப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவின் நம்பிக்கையைப் பெறுபவர்கள் உலக அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்துவார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமான இந்தியா, ஆசியாவின் அதிகாரச் சமநிலையின் மையத்தில் உள்ளது. இந்தியாவை இழப்பது வாஷிங்டனுக்கு ஒரு பெரிய பின்னடைவாக அமையும். அதுவும் ரஷ்யா - இந்தியா ஒன்றாக இணைவது அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். ரஷ்யாவிற்கு மகுடம் டெல்லியில் புடினுக்குக் கிடைத்த உற்சாகமான வரவேற்பு, ரஷ்யாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த முயன்றவர்களுக்கு ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்கா இந்தியாவை அழுத்தம் கொடுக்க முயல்கிறது. கட்டுப்படுத்த முயல்கிறது. ஆனால் ரஷ்யா அதன் ஒத்துழைப்பு, தொழில்நுட்பம் மற்றும் மரியாதையின் மூலம் இந்தியாவின் மனதை வெல்கிறது. இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கிறது. இந்தியா தனது சொந்த நலன்களின் அடிப்படையிலேயே பங்காளித்துவங்களைத் தீர்மானிக்கும் என்பதை மோடி தெளிவுபடுத்தியுள்ளார். இது மேற்குலகம் தன்னிச்சையான விசுவாசத்தை இனி எதிர்பார்க்க முடியாத புதிய உலக ஒழுங்கைச் சுட்டிக்காட்டுகிறது. சர்வதேச அதிகாரச் சமநிலையை மாற்றியமைக்கக்கூடிய கூட்டாண்மையை புதுடெல்லியும் மாஸ்கோவும் கட்டமைக்க, உலகத்தின் கவனம் தற்போது இந்த இரு தலைநகரங்கள் மீதும் குவிந்துள்ளது. #🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - ShareChat